நாடோடிகள் படத்தில், தமிழ் சினிமாவுக்குள் வந்தவர் அபிநயா. (Abhinaya) இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கிய இந்த படத்தில், ஹீரோ சசிக்குமாரின் தங்கையாக நடித்திருப்பார். அபிநயாவுக்கு சரியாக பேசவும் வராது. செவிகளில்,கேட்கும் திறன் குறைவு என்றாலும், நாடோடிகள் படத்தில், சிறப்பான திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
அவருக்கு உண்மையாக இப்படி ஒரு குறை இருப்பதே படத்தில் தெரியாது. அந்தளவுக்கு அவரது நடிப்பு மிக இயல்பாக இருந்தது. சுப்ரமணியபுரம் படத்தில், சசிக்குமார் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடித்திருப்பார். இந்த படத்தை, சமுத்திரக்கனி இயக்க, சசிக்குமார் நடித்திருப்பார். நாடோடிகள் மாபெரும் வெற்றி பெற்றது.
வீட்டை விட்டு ஓடிவரும் இளம் காதலர்களை, நண்பர்கள் பல்வேறு துன்பங்களுக்கு பிறகு சேர்த்து வைக்கின்றனர். ஆனால், அவர்கள் சில மாதங்களிலேயே கருத்து வேறுப்பாட்டால் பிரிந்து விடுகின்றனர்.
இதில், காதலர்களை சேர்த்துவைத்த நண்பர்களின் நிலை என்ன என்பதை மிக அழகாக, யதார்த்தமான சொன்ன படம் இது. அதுவும் சசிக்குமார், பரணி, வசந்த், கஞ்சா கருப்பு, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட படத்தில் நடித்த அனைவரது நடிப்பும், மிக சிறப்பாக இருந்தது. காமெடி, நட்பு, குடும்பம், காதல், போராட்டம் என சகல விஷயங்களை கொண்ட இந்த படம், ரசிகர்களின் பலத்த வரவேற்பை, பாராட்டைப் பெற்றது.
Abhinayaநாடோடிகள் படத்தில், ஹீரோ சசிக்குமாரின் தங்கையாக தமிழில் அறிமுகமான அபிநயாவே தெலுங்கு, கன்னட மொழிகளில் எடுக்கப்பட்ட நாடோடிகள் படங்களிலும் அதே தங்கை கேரக்டரில் அறிமுகம் செய்யப்பட்டார்.
அபிநயா ஆனந்த், கர்நாடகாவைச் சேர்ந்தவர். இவரது தந்தையும் ஒரு நடிகர்தான். அபிநயா தந்தை, ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், ஸ்டாலின் என்ற தெலுங்கு படத்தில் பாதுகாப்பு காவலராக நடித்தார். அப்போது அங்கு வந்த அபிநயாவை கவனித்த முருகதாஸ், விசாரித்துள்ளார். அதன்பின், சசிக்குமாரிடம் அபிநயாவை அறிமுகம் செய்துள்ளார்.
Abhinayaஅதன்பிறகுதான், சமுத்திரக்கனி இயக்கத்தில், சசிக்குமார் தயாரித்த நாடோடிகள் படத்தில் நடிக்கும் வாய்ப்பு அபிநயாவுக்கு கிடைத்தது. இந்த படத்தில் தெலுங்கு படமான ‘சம்போ சிவ சம்போ’ விலும், அடுத்து, இதே படத்தின் கதையாக கொண்டு எடுக்கப்பட்ட ‘ஹூத்துக்காரு’ கன்னட படத்திலும், நாடோடிகள் கேரக்டர்களிலும் அபிநயா நடித்தார்.
இதில் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்ததற்காக இரண்டு பிலிம்பேர் விருதுகள், அபிநயாவுக்கு வழங்கப்பட்டது.அதன்பிறகு, 2010ம் ஆண்டில் சசிக்குமார் இயக்கிய ஈசன் படத்திலும் அபிநயாவுக் முக்கிய கேரக்டர் தரப்பட்டது.அடுத்து, 2011 ம் ஆண்டில் ஏழாம் அறிவு படத்தில், படத்தின் துவக்கத்தில் நாட்டை விட்டுச் செல்லும் போகர் சூர்யாவுக்கு மனைவியாக சில காட்சிகளில் மட்டுமே அபிநயா நடித்திருந்தார்.
Abhinayaதொடர்ந்து தெலுங்கு, கன்னடம், மலையாளப் படங்களில் அபிநயா நடித்து வருகிறார். மலையாளத்தில் த ரிப்போர்ட்டர், கன்னடத்தில் தம் போன்ற படங்களில் நடித்தார்.மேலும் தமிழில் தாக்க தாக்க, குற்றம்23, நிசப்தம், மூக்குத்தி அம்மன், வீரம், பூஜை, தனி ஒருவன், ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் சிறுசிறு கேரக்டர்களில் அபிநயா நடித்திருக்கிறார். தொடர்ந்தும், படங்களில் நடித்து வருகிறார்.
Abhinayaஅபிநயா, கவர்ச்சி நடிகை அல்ல. நடித்த படங்களில் எல்லாம் தன்னை ஒரு நல்ல கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஆக வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார். சோஷியல் மீடியாவில் ஆர்வமாக இருக்கும் அபிநயா, அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்டேட் செய்கிறார். அதற்கு ரசிகர்களின் லைக்குகள் குவிந்து வருகின்றன.
மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து தமிழகம் இணையத்தை படியுங்கள்.