தமிழில் சில படங்களில் நடித்தாலும், சில நடிகைகள் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் நடிகை அபிராமியும் ஒருவர். தமிழில் 10க்கும் குறைவான படங்களில்தான் நடித்தார்.
வானவில் என்ற படத்தில், நடிகர் அர்ஜூன் ஜோடியாக அபிராமி அறிமுகமானார். சரத்குமாருடன் சமுத்திரம் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.
அடுத்து சார்லி சாப்ளின் 2, மிடில் கிளாஸ் மாதவன் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், கமலுடன் விருமாண்டி படத்தில் அன்னலட்சுமி கேரக்டரில் நடித்திருந்தார்.
இந்த படத்தில், கமலுடன் பல நெருக்கமான காட்சிகளில் அபிராமி நடித்திருந்தார்.
குறிப்பாக உன்னைவிட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணுமில்லே பாடல் காட்சியில், கமலுடன் பின்னி பிணைந்து நடித்திருந்தார் அபிராமி.
தமிழ் சினிமாவில் இருந்து திடீரென காணாமல் போன அபிராமி, மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.
கேரளாவில் திருமணம் செய்துக்கொண்டு, குடும்பம் பிள்ளைகள் என செட்டிலான பிறகும், அவரது சினிமா ஆசை கோலிவுட் பக்கம் வரவழைத்து விட்டது.
இப்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் தக்லைப் படத்தில், முக்கிய கேரக்டரில் அபிராமி நடிக்க கமிட் ஆகி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்னலட்சுமி செத்துட்டாளே..
சமீபத்தில் செய்தியாளர்களை நடிகை அபிராமி சந்தித்தார். அப்போது அவரிடம் விருமாண்டி 2ம் பாகத்தில் நடிப்பீர்களா என்று கேள்வி கேட்ட போது,
அன்னலட்சுமிதான் செத்து போயிட்டாளே, அப்புறம் எப்படி பண்ண முடியும்?
எனக்கு தெரியாது ஆனால் கமல் சார் மறுபடி பண்றதா இருந்தால் என்னை கூப்பிடற மாதிரி அவருக்கு ஐடியா இருந்தால் நான் எதுக்கு நோ சொல்ல போறேன். கண்டிப்பா போவேன், என்று கூறியிருக்கிறார்.
கமல் கூப்ட்டா ஓகே தான்.
அன்னலட்சுமி இறந்து விட்டதாக விருமாண்டி முதல் பாகம் படம் இருந்தாலும், அதில் இறப்பதற்கு முன் அன்னலட்சுமியுடன் கமல் இருந்த சம்பவங்களை மீண்டும் இரண்டாம் பாகத்தில் கொண்டு வர வாய்ப்புள்ளது.
அதனால் கமல் கூப்ட்டா ஓகே தான் என்று அபிராமி வெளிப்படையாக கூறிவிட்டார்.
நடிகை அபிராமியை விருமாண்டி படத்தில், கமல் புரட்டி எடுத்ததாக பயில்வான் ரங்கநாதன் ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். அதனால் தான் அவர் நடிப்பதையே விட்டுவிட்டு சென்றுவிட்டதாகவும் கூறியிருந்தார்.
ஆனால் இப்போது நடிகை அபிராமியே, கமல் சார் கூப்ட்டா நான் எதுக்கு நோ சொல்லப் போறேன் என ஓப்பன் டாக் விட்டிருக்கிறார்.
எப்படி நடித்தால் என்ன, படத்தில் நடிப்பதுதான், துட்டு சம்பாதிப்பதுதான் முக்கியம் என்ற நிலையில் அபிராமி போன்ற நடிகைகள் இருப்பதையே இது வெளிப்படுத்துகிறது.