திவ்யா கோபி குமார் என்ற இயற்பெயரைக் கொண்டிருந்த நடிகை அபிராமி ஆரம்ப காலங்களில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக திகழ்ந்தவர்.
அடுத்து இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மற்றும் மலையாள படங்களில் நடித்து பெருவாரியான ரசிகர்களை கொண்டிருக்கிறார். தமிழைப் பொறுத்தவரையில் வானவில் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார்.
நடிகை அபிராமி..
மிகச் சிறப்பான தமிழ் பேச தெரிந்த நடிகைகளில் அபிராமியும் ஒருவர். இவர் வானவில் படத்தில் நடித்ததை அடுத்து மிடில் கிளாஸ் மாதவன், தோஸ்த், சமுத்திரம், சார்லி சாப்ளின், கார்மேகம், சமஸ்தானம், விருமாண்டி ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இதையும் படிங்க: 40 வயசுல தான் படுக்கை விஷயத்தில் அது அதிகமாக கிடைக்குது.. கூச்சமின்றி கூறிய சமீரா ரெட்டி..!
இதனை அடுத்து இவர் நடிப்பில் வெளி வந்த மிடில் கிளாஸ் மாதவன் திரைப்படத்தில் பிரபுவோடு எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் கமலஹாசன் அவர்கள் இணைந்து நடித்த விருமாண்டி திரைப்படத்தின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர்.
திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு குறைந்ததை அடுத்து புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் பேரனான ராகுல் பவனன் என்பவரை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் திருமணம் எளிமையான முறையில் பெங்களூருவில் நடந்தது. ஒரே பள்ளியில் படித்த இவர்கள் 15 ஆண்டுகளாக காதலித்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமாவில் இந்த பழக்கம் இருக்கு..
இதனை அடுத்து சினிமாத்துறையில் உருவ கேலியை எதிர்கொள்வது போன்ற கசப்பான அனுபவம் குறித்து தற்போது அபிராமி பேசி இருக்கிறார். அதிலும் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை பற்றி அவர் கூறும் போது உடல் ரீதியான விமர்சனங்களை எதிர் கொண்டதாக சொல்லி இருக்கிறார்.
குறிப்பாக இவரது உயரத்தை வைத்து அனைவரும் கேலி செய்து இருக்கிறார்கள். அது போல தன்னுடைய தாடையும் கொஞ்சம் நீளமாக இருக்கும் என்பதால் அதையும் சிலர் கிண்டல் அடித்து இருப்பதாக கூறி இருக்கிறார்.
இந்நிலையில் சிறு வயதில் தன்னுடைய தாடையை பிடித்து இழுத்து இழுத்து பார்த்து இருக்கிறார்கள். அதுவும் நீளமாக ஒரு காரணமாக இருக்கலாம் என்று அபிராமி கூறிய விஷயம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
மோசமான அனுபவம்..
இன்றைய தலைமுறை அதிகளவு உருவ கேலிகளுக்கு ஆளாவது பற்றியும் அது குறித்து பல்வேறு விஷயங்களும் வெளி வந்துள்ளது. அந்த வகையில் சினிமாவில் நடிக்கும் நடிகைக்கு அது போன்ற மோசமான அனுபவம் ஏற்பட்டதை அடுத்து ரசிகர்கள் உருவ கேலி இல்லாத துறையே இல்லை போல என்று பேசி வருகிறார்கள்.
இதையும் படிங்க: விசித்திர கோரிக்கை.. கோர்ட்டுக்கு வந்த விவாகரத்து.. ஐஸ்வர்யா கொடுத்த மனுவால் வெடித்த சர்ச்சை…!
மேலும் அபிராமி தனக்கு நேர்ந்த உருவ கேலியை பற்றி எந்த வித தயக்கமும் இல்லாமல் வெளிப்படுத்தி இருக்கக்கூடிய விஷயம் அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது.
அத்தோடு உருவ கேலியில் இருந்து வெளிவந்தால் மட்டுமே எதையும் சாதிக்க முடியும் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதை குறிப்பாக உணர்த்தி இருக்கிறார்.
இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் பேசும் பொருளாக மாறி ரசிகர்கள் அனைவரும் பட்டிமன்றம் போட்டு பேசிக்கொள்ளக்கூடிய ஒரு கசப்பான அனுபவமாக அபிராமி சொல்லி இருக்கும் விஷயம் உள்ளது என்று சொல்லலாம்.