புது ரூட்டில் பிக்பாஸ் அபிராமி வெங்கடாசலம்..! – குவியும் வாழ்த்துக்கள்..!

பிரபல நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் அபிராமி வெங்கடாசலம்.

மாடல் அழகியான இவர் நடிகர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இவரை ரசிகர் மத்தியில் பிரபலமாகியது என்னவோ பிக் பாஸ் நிகழ்ச்சி தான்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலம் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தது. தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் படங்கள் மட்டும் இல்லாமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

அந்த வகையில் முரட்டு சிங்கிள் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றது பலரும் அறிந்த விஷய.ம் இந்நிலையில் அபிராமி வெங்கடாஜலம் புதிதாக ஒரு தொழிலை முன்னெடுத்து இருக்கிறார்.

அந்த அறிவிப்பையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார். மாடலிங் துறையில் இருப்பதால் ஃபேஷன் மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருக்கிறார் அபிராமி வெங்கடாசலம்.

எனவே புதிய ஆடை நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கிறார். அவருடைய பெயரையே தற்பொழுது பிராண்டாக மாற்றி இருக்கிறார் அபிராமி வெங்கடாசலம். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் “”My first baby step as a brand ♥️ never ever thought in my life that I would have a clothing brand in my name ….. chellakutty fam pls do support …. lots of love and nandri “” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Tamizhakam