ஆதியும் அந்தமும் இல்லாத சிவபெருமான் இந்த அண்டத்தில் அளப்பரிய ஆற்றல் நிறைந்த அழிக்கும் கடவுளாக திகழ்கிறார். மனித மனத்தை செம்மைப்படுத்த ஓம் நமச்சிவாய என்ற திருமந்திரத்தை கூறினாலே போதும் ஆளப்பரிய ஆற்றல் நம்முள் ஏற்படும். எளிதில் வரம் கிடைக்க கடவுளை கீழுள்ள பொருட்களால் அபிஷேகம் செய்தால் என்னென்ன பலன் மனிதர்களுக்குத் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
அபிஷேகம் செய்யும் பொருட்களால் ஏற்படும் பலன்கள்:
1. பசும்பால் கொண்டு அபிஷேகம் செய்ய நீண்ட ஆயுள் தரும். அதுபோல பசுந்தயிர் மகப்பேறு தரும்.
2. பஞ்சாமிர்தத்தை கொண்டு அபிஷேகம் செய்ய பலம் வெற்றி தரும்.
3.தேனை வைத்து அபிஷேகம் செய்தால் நல்ல குரல் வளம் கிடைப்பதோடு சங்கீத விருதும் கிடைக்கும்.
4 .சங்கு கொண்டு அபிஷேகம் செய்தால் முக்தியளிக்கும்.
5. சர்க்கரை அபிஷேகம் எதிரிகளை ஜெயிக்கும் நிலையை ஏற்படுத்தும் .
6. இளநீர் நல்ல சந்ததிகளுக்கும், கரும்பு சாறு ஆரோக்கியமான வாழ்வைத் தரும்.
7. நார்த்தம் பழம் சந்ததியை அளிக்கும். சாத்துக்கொடி துயர் துடைக்கும்.
8. எலுமிச்சை பழம் எமபயத்தை நாசம் செய்யும். நட்புடன் சுற்றம் தரும்.
9. வாழைப்பழத்தால் அபிஷேகம் செய்தால் பயிர் செழிக்கும்.
10. மாம்பழத்தைக் கொண்டு அபிஷேகம் செய்தால் செல்வம் வெற்றி வரும். பலாப்பழத்தை கொண்டு அபிஷேகம் செய்வதால் மங்களம் தரும் யோக சித்தி கிட்டும். மாதுளை பகை நீக்கும் கோபம் தவிக்கும்.
11. தேங்காய்துருவல் கொண்டு செய்யும் அபிஷேகம் அரசுரிமை தரும். திருநீறு சகல நன்மைகளையும் தரும் அரசுரிமை கிடைக்க வழி செய்யும்.
12. சந்தனத்தால் செய்யும் அபிஷேகத்தால் சுகம் பெருமை கிடைக்கும். பன்னீர் அபிஷேகத்தால் சருமம் பாதுகாக்கப்படும். கும்பஜலம் பிறவிப் பயனை அளிக்கும்.
13. சங்காபிஷேகம் எல்லோருக்கும் நன்மை தரும். நீரைக் கொண்டு அபிஷேகம் செய்வதால் எல்லாமே தூய்மையாக படும்.
14. நல்லெண்ணெய் கொண்டு அபிஷேகம் செய்ய நலம் தரும். பச்சரிசி மாவு நாசம், கடன் தீர்க்கும். மஞ்சள்தூள் நல்ல நட்பை கொடுக்கும். திருமஞ்சனதூள் நோயைத் போக்கும்.
மேலுள்ள பொருட்களை கொண்டு கடவுளுக்கு அபிஷேகம் செய்யும் போது இந்த பலன்களை நீங்கள் நிச்சயம் பெறுவீர்கள்.