இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான சேது திரைப்படத்தில் அபித குஜலாம்பாள் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபிதா.
இந்த திரைப்படம் சியான் விக்ரம் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. நடிகர் விக்ரமுக்கு சியான் என்ற பெயரை ஏற்படுத்திக் கொடுத்ததும் இதே திரைப்படம் தான்.
இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்த நடிகை அபிதாவும் ரசிகர்களால் மிகவும் கவரப்பட்டார். ஆனால், தொடர்ந்து இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி பட வாய்ப்புகள் அமையவில்லை.
சேது படத்திற்கு பிறகு தமிழில் சீறிவரும் காளை, பூவே பெண் பூவே உள்ளிட்ட சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார். அதன் பிறகு சினிமா வாய்ப்புகள் குறைந்ததால் சீரியல் நடிக்க தொடங்கிவிட்டார்.
இவருடைய உடல்வாகு இளமையாக கட்டுகுலையாமல் இருந்தாலும் கூட இவருடைய முகம் வயதான பெண் போன்ற தோற்றத்தில் இருக்கிறது என்று பலரும் இவருக்கு பட வாய்ப்புகள் கொடுக்க மறுத்தனர்.
ஆனால் சீரியலில் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் திருமதி செல்வம் என்ற சீரியல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. பின்னர் சில சீரியல்களில் நடித்த இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்டார்.
தற்போது இவருக்கு அழகான பெண் குழந்தை ஒன்றும் இருக்கிறது. திருமணத்திற்கு பின்னரும் தொலைக்காட்சி சீரியல்கள் சிலவற்றில் நடித்துக் கொண்டிருந்த இவர் சன் டிவியில் ஒளிபரப்பான முத்தாரம் என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்து வந்தார்.
அதன் பிறகு எந்த சீரியல் மருறம் பட வாய்ப்பு கிடைக்காததால் குடும்பத்தை கவனித்து வருகிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர் தான் தவறவிட்ட பட வாய்ப்புகள் குறித்தும் சேது படத்திற்கு பின்னர் கிடைத்த வாய்ப்புகளை ஏன் தவறவிட்டேன் போன்ற காரணங்களை பதிவு செய்திருக்கிறார்.
அதில் எனக்கு சரியான மேனேஜரும் சரியான P.R.O இல்லை. எனவே எந்த படத்தை தேர்ந்தெடுப்பது எதனை தவிர்ப்பது என்ற எந்த முடிவும் என்னால் எடுக்க முடியவில்லை.
என்னுடைய மேனேஜர் மற்றும் P.R.O வழிகாட்டத்தில் சில மோசமான படங்களில் கூட நடித்துவிட்டேன் என கூறியிருக்கிறார். இந்நிலையில், இவருடைய கிளாமரான புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்து ரசிகர்கள் சீரியலில் குடும்ப குத்து விளக்காக தோன்றும் நடிகை அபிதாவா இது என்று வாயை பிளந்து வருகின்றனர்.