ஐஸ்வர்யா ராய் விவாகரத்து ஏன்..? இருவரையும் பிரித்த அந்த நடிகர்..! பிரபல நடிகர் உடைத்த ரகசியம்..!

தமிழ் சினிமாவிலும், இந்திய சினிமாவிலும் அதிக வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்து வருபவர் நடிகை ஐஸ்வர்யாராய். சமீப காலமாக ஐஸ்வர்யாராயின் விவாகரத்து குறித்து நிறைய சர்ச்சைகள் பாலிவுட் சினிமாவில் வலம் வர துவங்கியிருக்கின்றன.

ஏற்கனவே தமிழ் சினிமாவில் இருக்கும் விவாகரத்து பிரச்சனைக்கு நடுவே இந்த விவாகரத்து பிரச்சனை பெரிதாக பேசப்படவில்லை. ஆனால் பாலிவுட்டில் எக்கச்சக்கமாக இந்த விஷயம் பேசப்பட்டு வருகிறது. உலக அழகி பட்டம் பெற்ற பிறகு ஐஸ்வர்யாராய் இந்தியா முழுவதும் பிரபலமான ஒருவராக இருந்தார்.

சினிமா வாய்ப்பு:

ஆனாலும் அவரை முதன்முதலாக கதாநாயகியாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் மணிரத்தினம்தான். அதுவும் ஐஸ்வர்யா ராய் நடித்த முதல் திரைப்படம் தமிழ் திரைப்படம். தமிழில் எம்ஜிஆர் கருணாநிதி நட்பை அடிப்படையாகக் கொண்டு மணிரத்தினம் இயக்கிய புனைவு கதை இருவர்.

இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா ராய். அந்த நன்றியை மறக்காமல்தான் இப்போது வரைக்கும் ராவணன், பொன்னியின் செல்வன் என்று மணிரத்தினம் இயக்கும் திரைப்படங்களில் எல்லாம் வரிசையாக நடித்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராய்.

இருவர் திரைப்படத்திற்கு பிறகு ஐஸ்வர்யா ராய்க்கு ஹிந்தி சினிமாவிலும் தமிழ் சினிமாவிலும் வரவேற்புகள் அதிகமாக இருந்தது. பெரும்பாலும் தமிழில் பெரிய இயக்குனர்கள் திரைப்படத்தில் மட்டும் தான் நடிக்க வேண்டும் என்பதை ஒரு நோக்கமாக கொண்டிருந்தார் ஐஸ்வர்யா ராய்.

இல்லற வாழ்க்கை:

அந்த வகையில் இயக்குனர் ஷங்கர், மணிரத்தினம் திரைப்படங்களில்தான் அவர் தமிழில் அதிகமாக நடித்திருக்கிறார். ஹிந்தி சினிமாவில் அவர் பிரபலமான பொழுது அவருக்கும் நடிகர் சல்மான்கானுக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

ஆனால் அது கொஞ்ச நாட்களிலேயே முடிவை கண்டது. அதன் பிறகு நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஐஸ்வர்யா ராய். 7 வருடங்கள் அவர்கள் இருவரும் நன்றாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஆராதயா என்கிற குழந்தையும் இருக்கிறது.

இந்த நிலையில் அவர்கள் இருவரும் பிரிவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. குடும்ப பிரச்சனை காரணமாக ஐஸ்வர்யா ராய் பிரிய இருப்பதாக நிறைய பேசப்படுகிறது. ஏனெனில் அபிஷேக் பச்சனுக்கு நிகராக சொத்துக்கள் கொண்ட பணக்காரியாகதான் ஐஸ்வர்யா ராயும் இருந்து வருகிறார்.

இவ்வளவு வருடங்கள் கழித்து இருவரும் பிரிவது அதிக பேச்சுக்களை உண்டாகும் என்பதாலேயே இந்த ஜோடிகள் பிரிவதைப் பற்றி யோசித்து வருவதாக பயில்வான் ரங்கநாதன் ஒரு வீடியோவில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது எக்ஸ் தளத்தில் ஒருவர் விவாகரத்து குறித்து ஒரு பதிவு போட்டிருந்தார். அதில் விவாகரத்து செய்து கொள்ளலாம் என்று நினைத்தாலும் கூட இத்தனை வருடங்கள் சேர்ந்து வாழ்ந்த பிறகு விவாகரத்து செய்து கொண்டால் வாழ்க்கை எப்படி இருக்கும்.

மேலும் சுற்றி இருப்பார்கள் நம்மை பற்றி என்ன நினைப்பார்கள் என்ன பேசுவார்கள் என நினைக்கும் பொழுது விவாகரத்து செய்து கொள்ள வேண்டாம் என்று தோன்றுகிறது என பதிவிட்டிருந்தார். அதற்கு அபிஷேக் பச்சன் லைக் அளித்திருக்கிறார். எனவே அபிஷேக் பச்சனும் விவாகரத்து மனநிலையில் தான் இருக்கிறார் ஆனால் இப்பொழுது பிரிந்தால் சமூகம் அதிகமாக தவறாக பேசும் என்று இருவரும் பிரியாமல் இருக்கின்றனர் என்று கூறுகிறார் பயில்வான் ரங்கநாதன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version