தற்போது தமிழ் திரை உலகில் முன்னணி நடிகராக இருக்கும் சியான் விக்ரமின் திரை உலக வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்த படம் சேது. இந்தப் படத்தை பாலா இயக்க இதில் விக்ரமுக்கு ஜோடியாக அபிதா நடித்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.
நடிகை அபிதா தற்போது சேது படத்தில் நடித்த போது வாய்ப்புக்காக நான் அப்படி ஏதும் செய்யவில்லை. என்னை பாலா தான் அசிங்கப்படுத்துகிறார் என்ற சர்ச்சையை கிளப்ப கூடிய வகையில் அதிர்ச்சி தரும் தகவலை பகிர்ந்து இருக்கிறார். அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பட வாய்ப்புக்காக நான் அப்படி..
இயக்குனர் பாலாவின் வணங்கான் திரைப்படம் தற்போது முடிந்து இருக்கக்கூடிய சூழ்நிலையில் இந்த படத்தில் அருண் விஜய் உள்ளிட்டோர் நடித்திருக்க படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.
மேலும் ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு நடிகர் பாலா சேது படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
அதற்கு முன் இயக்குனர் பாலா பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணி புரிந்திருக்கிறார். மேலும் சேது படத்தில் விக்ரம், அபிதா, ஸ்ரீமன், சிவகுமார் உள்ளிட்டோர் நடித்து இந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.
இந்தப் படம் ஒரு வெற்றி படமாக அமைந்ததை அடுத்து இயக்குனர் பாலா நந்தா படத்தை சூர்யாவை வைத்து இயக்க அந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து சூர்யாவிற்கும் நடிக்க தெரியும் என்பதை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.
இத்தோடு அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்த பாலாவை பற்றி யாரிடம் கேட்டாலும் மார்கெட் இல்லாத நடிகர்களுக்கு மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுக்கக்கூடிய அற்புத இயக்குனராக பேசப்படுகிறார்.
பாலா என்ன அசிங்கம் பண்ணாரு..
இந்நிலையில் அண்மை பேட்டி ஒன்றில் சேது படத்தில் ஹீரோயினியாக நடித்த அபிதா பாலா குறித்து பேசி இருக்கும் விஷயம் பரபரப்பாக பேசப்படுகிறது.
அவர் அந்த பேட்டியில் சேது படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது வேறு சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனினும் பாலாவிற்கு அதனால் கோபம் ஏற்பட்டதோ என்னவோ தெரியவில்லை என்னை சேது பட ப்ரமோஷனுக்கு அழைக்கவே இல்லை.
அந்த வகையில் படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் சாருக்கு போட்டு காண்பித்த போது கூட விக்ரம், பாலா, தயாரிப்பாளர்கள் மட்டும் தான் இருந்தார்கள். என்னை ஒரு பேச்சுக்கு கூட அழைக்கவில்லை.
ஹீரோயினியின் பகீர் தகவல்..
இந்நிலையில் ஒரு படத்திற்கு ஹீரோ ஹீரோயின் இரண்டு பேரும் முக்கியம் தான். நானும் சேது படத்திற்காக கடினமான உழைப்பை போட்டு இருக்கிறேன். இந்த படத்தை பார்த்துவிட்டு இளையராஜா சார் என்னை மிகவும் பாராட்டி இருக்கிறார் என்று கேள்விப்பட்டேன்.
ஆனால் பாலா சார் தான் என்னை அசிங்கப்படுத்தி விட்டார். இதை எதையும் நான் மனதில் போட்டு குழம்பவில்லை பாலா சார் இருந்தது போலவே நானும் இருந்து விட்டேன். அதன் பிறகு அவரிடம் நான் எந்த வாய்ப்பும் கேட்கவில்லை.
எனக்கு அதுவும் தேவையில்லை என்று பேசிய விஷயம் காட்டுத் தீயாய் இணையத்தில் பரவி வருகிறது.
மேலும் அபிதா பேசிய இந்த பேச்சைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்திருக்கும் ரசிகர்கள் சினிமா துறையில் எப்படி எல்லாம் நடப்பதை நினைத்து அவர்களுக்குள் பேசி இதை பேசும் பொருளாய் மாற்றி விட்டார்கள்.