ரச்சிதா மகாலட்சுமி இரண்டாவது திருமணம்..! – மாப்பிள்ளை இவரா..? – ரசிகர்கள் ஷாக்..!

பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வருகிறார் பிரபல சீரியல் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே இருக்கும் பொழுது இவருடைய இரண்டாவது திருமணம் குறித்த பல தகவல்கள் பரவலாக பேசப்பட்டது.

அதில் முக்கியமான ஒன்று கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல இயக்குனர் ஒருவரை இவர் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று விவரம் அறிந்த வட்டாரங்கள் கூறின.

முன்பதாக இவருடைய கணவர் காதல் கணவரை பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியது. அது உண்மைதான் என்று சில மாதங்களில் ரசிகர்களுக்கு தெரியவந்தது. ஆனால், ரச்சிதா மகாலட்சுமி-யின் கணவர் தினேஷ் எங்கள் பிரிவு நிரந்தரமானது கிடையாது. தற்காலிகமானதுதான்.

நாங்கள் மீண்டும் சேர்ந்து பயணிப்போம் என்று ஒரு பேட்டியில் பதிவு செய்திருந்தார். இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், மறுபக்கம் நடிகையை ரச்சிதா மகாலட்சுமி வேறு ஒரு திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று மட்டும் அரசல் புரசலாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றது.

தன்னுடைய முதல் திருமணம் ஏன் பிரிவில் முடிந்தது.. எதனால் காதல் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் என்று ரச்சிதா மகாலட்சுமி பிக்பாஸ் வீட்டில் சில விஷயங்களை பகிர்ந்து இருந்தார். தன்னுடைய குடும்பத்தினருக்கு எந்த வகையிலும் உதவி செய்யக்கூடாது என்று கணவர் தினேஷின் குடும்பத்தார் கட்டாயப்படுத்துவதாக கூறியிருந்தார்.

இதனாலேயே கணவரை பிரிந்து விட்டதாகவும் பதிவு செய்திருந்தார் ரச்சிதா மகாலட்சுமி. இந்நிலையில் கர்நாடகாவைச் சேர்ந்த பிரபல சீரியல் இயக்குனர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் நடிகை ரச்சிதா மகாலட்சுமி என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் அவர் திருமணம் செய்து கொள்வார் என்று கூறுகிறார்கள். ஆனால், இன்னும் முறைப்படி விவாகரத்து பெறாமல் இருக்கும் ரச்சிதா மகாலட்சுமி எப்படி இரண்டாவதாக திருமணம் செய்து கொள்வார்..? இது வதந்தியான தகவலாகத்தான் இருக்க முடியும் என்றும் மறு பக்கம் ஒரு தகவல் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …