நடிகர் சசிகுமாரின் வீடு..! அவருடைய தம்பியின் பேட்டி..!

மதுரை மாவட்டம் புது தாமரப்பட்டியில் வளர்ந்த சசிகுமார் தற்போது திரை உலகில் பிரபலமான நடிகராகவும் மக்கள் மனம் கவர்ந்த ஹீரோவாகவும் விளங்குகிறார்.

அந்த ஊரில் இருக்கும் சசிகுமாரின் தம்பி ஊராட்சி ஒன்றிய தலைவராக விளங்குகிறார். தற்போது தனது அண்ணன் மற்றும் தனது குடும்பத்தார் பற்றி அண்மை பேட்டி ஒன்றில் விரிவாக பேசியிருக்கிறார்.

நடிகர் சசிகுமார்..

நடிகர் சசிகுமார் கொடைக்கானலில் இருக்கும் செயின் ஜோசப் பள்ளியில் படித்தவர். இதனை அடுத்து மதுரையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் வணிக நிர்வாக படிப்பை படித்தவர்.

1999-இல் வெளிவந்த சேது படத்தை தயாரித்து அந்தப் படத்தில் உதவி இயக்குனராக பணி புரிந்ததை அடுத்து இயக்குனர் அமீரிடம் அறிமுகமானார். அமீருக்காக மௌனம் பேசியதே ராம் போன்ற படங்களில் உதவி இயக்குனராக அவரோடு பணிபுரிந்த அனுபவம் உள்ளது.

சுப்பிரமணியபுரம் படத்தில் வித்தியாசமான  நடித்ததை அடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் சிறந்த ஃபிலிம் பேர் விருது சிறந்த படத்திற்கான விஜய் விருது போன்றவற்றிற்காக நாமினேஷன் செய்யப்பட்டது.

அண்மையில் இணை தயாரிப்பாளராக இருந்த இவரது அத்தை மகன் இறந்ததை அடுத்து குடும்பத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டதாக இவரது தம்பி ஆனந்த் சொல்லி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிகழ்வை அடுத்து சசிகுமாரும் சற்று மன அழுத்தத்தோடு காணப்பட்டார். இதனை அடுத்து அதிலிருந்து வெளி வந்த அவர் மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

சசிகுமார் வளர்ந்த வீடு..

மதுரையில் இருக்கும் தாமரைப் பட்டியில் தான் நடிகர் சசிகுமார் பிறந்து வளர்ந்த பூர்வீக வீடு உள்ளது. இவர் தந்தை மகாலிங்கம் ஒரு விவசாயியாக திகழ்ந்தவர்.

நடிகர் சசிகுமார் திருமணம் செய்துகொண்டு ஆசைக்கு ஒரு பெண் ஆஸ்திக்கு ஒரு மகன் என்ற இரண்டு குழந்தைகளை பெற்று இருக்கிறார். சசிகுமாருக்கு பழைய வீடு ஒன்றும் புதிதாக கட்டப்பட்ட வீடு ஒன்றும் அந்தப் பகுதியில் உள்ளது.

இந்த இரண்டு வீடுகளும் இடிக்கப்பட்டு மிகப்பெரிய பங்களா ஒன்று கட்டப்பட்டுள்ளது. சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற துடிப்பில் சென்னை நோக்கி சென்று இன்று ரசிகர்களின் மத்தியில் பெரும் செல்வாக்கைப் பெற்ற பன்முக திறமை கொண்ட நடிகராக விளங்குகிறார்.

சசிகுமாரின் தம்பியின் பேட்டி..

சசிகுமாரின் தம்பியான ஆனந்தகுமார் மதுரை கிழக்கு புது தாமரைப் பட்டியில் ஊராட்சி ஒன்றிய தலைவராக விளங்குகிறார். இவர் தனது அண்ணன் சசிகுமார் பற்றி சொல்லும் போது திரை உலகில் மிகச்சிறந்த நடிகராகவும் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் வளர்வதாக சொல்லி இருக்கிறார்.

விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர்களது அப்பாவும் ரெசிடெண்ட் ஆக ஒரு காலத்தில் இருந்தவர். மதுரை கோவிலில் பித்தளை பாத்திர கடை ஒன்றும் அவர்களுக்கு உள்ளதது. இந்தக் கடை ஐந்து தலைமுறைகளாக  நடந்து வருவதாக சொல்லி இருக்கிறார்.

மேலும் கேப்டன் விஜயகாந்தின் ரசிகராக இருக்க கூடிய இவர் மிகச்சிறந்த ஆன்மீகவாதியாகவும் திகழ்கிறார்.

ஷூட்டிங் இல்லாத சமயங்களில் நடிகர் சசிகுமார் தனது சொந்த ஊரான இந்த ஊருக்கு திரும்பி வருவதோடு மட்டுமல்லாமல் அவர் குடும்பத்தோடு நேரத்தை செலவிடுவதாகவும் குழந்தைகள் மீது அதிக அளவு பாசத்தோடு இருப்பார் என்றும் சொல்லியிருக்கிறார்.

இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரகளாக மாறி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version