கூட்டத்துல மன்சூர் அலிகான் என் கழுத்தை பிடித்து தள்ளினார்.. மறக்க முடியாத வலி.. சூரி எமோஷனல்..!

தமிழ் திரை உலகில் காமெடி நடிகர்களில் ஒருவராக கலக்கி வந்த நடிகர் சூரியை பரோட்டா சூரி என்றால் தான் பலருக்கும் தெரியும். இவர் பல்வேறு திரைப்படங்களில் முன்னணி நடிகர்களோடு இணைந்து காமெடியில் கலக்கியவர்.

இதனை அடுத்து தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் விடுதலை படத்தில் ஹீரோவாக களம் இறக்கப்பட்டு இருக்கும் இவர் அந்த படத்தில் தனது அற்புத நடிப்பு திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.

நடிகர் சூரி..

இதனைத் தொடர்ந்து சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் கருடன் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியிடக்கூடிய நிலையில் உள்ளது. இந்த படம் குறித்து பல தனியார் சேனல்களுக்கு பேட்டியினை நடிகர் சூரி தந்து இருக்கிறார்.

அந்த வகையில் அண்மை பேட்டி ஒன்றில் பேசும் போது ஆரம்ப காலத்தில் நடந்த நிகழ்ச்சியை கண் கலங்க சொல்லி ரசிகர்களின் மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.

இதற்கு காரணம் இவர் மறுமலர்ச்சி திரைப்படத்தில் சின்ன கேரக்டர் ரோலில் நடிக்கும் போது ஏற்பட்ட அனுபவங்களை பற்றி விரிவாக பேசியிருக்கிறார். 

இந்தப் படத்தில் ஒரு சின்ன கேரக்டர் ரோலர் நடித்த இவர் இன்று உச்சகட்ட நாயகனாக உயர்ந்திருக்கிறார். இவரை போலவே விஜய் சேதுபதி, விமல்  போன்ற பலரும் சின்ன, சின்ன கேரக்டர் ரோலை செய்தவர்கள் தான்.

மன்சூர் அலிகான் என் கழுத்தை பிடித்து..

திருப்பூரில் பனியன் கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்த இவர் சினிமா வாய்ப்பு கிடைக்கும் என சென்னை வந்த போது மிகவும் சிரமப்பட்டு இருக்கிறார். அந்த சமயத்தில் ஏவிஎம் ஸ்டுடியோவில் வாய்ப்பைத் தேடி சென்றதாக கூறியிருக்கும் அவர் அந்த சமயத்தில் மார்க்கெட்டில் வேலை செய்கிறவர்கள் அல்லது கூட்டமாக நிற்பவர்கள் போன்று நடிப்பதற்காக ஆட்களை கூப்பிட வந்திருந்தார்கள்.

அப்போது அவர்களிடம் நானும் நடிக்க தான் வந்திருக்கேன் என்று சொல்ல வேறு ஏதாவது படத்தில் நடித்திருக்கிறீர்களா? என்று கேட்க இல்லை என்று சொன்னதும் அந்த இடத்தில் என்னை மட்டும் வேண்டாம் என்று சொல்லி விட்டு போய்விட்டார்கள். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.

எனினும் அந்த நபரிடம் நானும் வரேன் கூட்டிட்டு போங்க என்று கெஞ்சி இருந்தேன். அப்போது தான் அங்கு சுமதி என்ற சைடு ஆர்டிஸ்ட் அக்கா இருந்தாங்க. அவங்க தான் என்ன எந்த ஊர் என்ற விவரங்களை எல்லாம் கேட்ட பிறகு மார்க்கெட்டு சீனுக்கு கூட்டிட்டு போகலாம் என்று இன்சார்ஜரிடம் சொல்லிவிட்டார்.

மறக்க முடியாத வலி..

நான் போன ஷூட்டிங் வேறு எந்த ஷூட்டிங் இல்ல மறுமலர்ச்சி திரைப்படத்தோட சூட்டிங் தான். தேவயானி மேடம் அங்கு நடிச்சிட்டு இருந்தாங்க. முதல் முதலாக சைடு கேரக்டரில் நடித்த படம் மம்முட்டி நடித்த மறுமலர்ச்சி திரைப்படம் தான்.

அது போல மன்சூர் அலிகான் இதற்கு முன்பு திரைப்படங்களில் நான் பார்த்து திட்டி இருக்கிறேன். குறிப்பாக கேப்டன் பிரபாகரன் படத்தில் மன்சூர் அலிகான் வில்லனாக நடிக்கும் போது இவன் எல்லாம் ஒரு மனுஷனா? என்று நான் திட்டியதோடு தற்போது அவரை நேரில் பார்க்கும் போது எனக்கே ஒரு மாதிரி இருந்தது.

அப்போது அங்கு சண்டை காட்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. மன்சூர் அலிகான் என் தோளில் கை போட்டு நின்று கொண்டிருந்தார். என்ன நடக்குது என்று எனக்கு தெரியவில்லை. ஒரு மாதிரி ஆகாயத்தில் பரந்த மாதிரி இருந்துச்சு அவர் என்னப்பா சாப்டியா என்று விசாரித்தார்.

இதனை அடுத்து அவர் என் கழுத்தில் கை வைத்து தள்ளி விட்டு ஓடிப் போக வேண்டும் அது தான் ஷூட் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது ரெடி என்று சொன்னதும் மன்சூர் அலிகான் என்னைக் கூட்டத்தில் தள்ளி விட்டு ஓடி போய் சண்டை போட்டுக் கொண்டு இருந்தார்.

எனக்கு அந்த மனுஷனை பார்த்ததும் நான் எவ்வளவு திட்டி இருக்கிறோம் என்று பயந்தேன். அத்தோடு இவ்வளவு கேஷுவலாக நடந்து கொள்வதைப் பார்த்து அதிர்ச்சியாக இருந்தது.

இந்த படம் வெளி வந்ததும் நான் அந்த அந்தப் படத்தில் எந்த காட்சியில் இருக்கிறேன் என்று பலமுறை தேடிப்பார்த்தேன். ஆனால் அந்த சீன் வரவே இல்லை என்று தன்னுடைய முதல் பட அனுபவத்தை மனம் திறந்து கூறியிருக்கிறார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …