தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நடிகையான சிம்ரன் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
மும்பை மகாராஷ்டிரா பகுதியை சேர்ந்தவரான சிம்ரன் பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். முதன்முதலில் தொகுப்பாளியாக தான் தனது கெரியரை துவங்கினார்.
நடிகை சிம்ரனின் அறிமுகம்:
ஆம், தூர்தர்ஷன் சேனலில் “சூப்பர் ஹிட் முகாபுலா” என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி ஹிந்தி திரை உலகில் அறிமுகமானார்.
அதன் மூலம் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது. 1995 ஆம் ஆண்டு இவர் நடித்த முதல் திரைப்படம் “சனம் ஹர்ஜாய் ” மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்துவிட்டது.
ஹிந்தியில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தார். இதில் “தேரே மேரே சப்னே” திரைப்படம் சிம்ரனுக்கு மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது.
அதை எடுத்து சிம்ரன் மலையாளம், ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். முதல் படம் மம்மூட்டியுடன் “இந்திரபிரஸ்தம்” படத்தில் நடித்திருந்தார் .
கண்டத்தில் சிவராஜ்குமார் உடன் “சிம்ஹடா மாரி” படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் “அப்பாய் காரி பெல்லி ‘என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் .
முதல் தமிழ் படம்:
பின்னர் தமிழில் முதன் முதலில் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த “ஒன்ஸ்மோர்” திரைப்படத்தில் ஹீரோயின் ஆக நடித்த நடிகை சிம்ரன் முதல் படமே அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
2000 காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக ஹிட் படங்களில் நடித்து நட்சத்திர நடிகை என்ற மார்க்கெட்டை பிடித்து வைத்திருந்தார்.
சிம்ரன் அதிகபட்சமாக ரூ. 75 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் முதல் நடிகையாக பார்க்கப்பட்டார். சிம்ரனின் நடிப்பில் வெளிவந்த துள்ளாத மனமும் துள்ளும் பல்வேறு விருதுகளை பெற்றுத்தந்தது.
இது இவருக்கு கௌரவத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இதுவரை தமிழில் ஒன்ஸ்மோர் நேருக்கு நேர் நட்புக்காக துள்ளாத மனமும் துள்ளும், கண்ணெதிரே தோன்றினாள், வாலி, ஜோடி, பிரியமானவளே, பார்த்தேன் ரசித்தேன், பஞ்சதந்திரம், கன்னத்தில் முத்தமிட்டால், நியூ , வாரணம் ஆயிரம், உதயா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து ஹிட் நடிகையாக பெரும் புகழ்பெற்றார் சிம்ரன்.
நடிப்பையும் தாண்டி மிகச்சிறந்த நடன கலைஞராகவும் இருந்தார். சிம்ரன் நடனத்திற்கு யாராலும் ஈடு கொடுத்த ஆடவே முடியாது .
நெருப்பு போன்ற நடனம்:
அவருடன் ஜோடி போட்டு நடிக்கும் ஹீரோக்களே சிம்ரனின் நடனத்தை பார்த்தால் திணறி போய்விடுவார்கள். அதனால் சிம்ரன் உடன் நடிக்க பல பேர் பயந்ததும் உண்டு.
விஜய் கூட பல பேட்டிகளில் சிம்ரன் உடன் நடனம் ஆடுவது மிகப்பெரிய கடினமான விஷயம் என வெளிப்படையாக தெரிவித்து இருந்தார்.
2003 ஆம் ஆண்டு தீபக் பக்கா என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். இவருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
குடும்பம் குழந்தை பிறப்புக்கு பிறகு சற்று சினிமாவிலிருந்து ஒதுங்கியே இருந்த சிம்ரன் தற்போது மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார்.
அதை எடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஜோடியாக பேட்ட திரைப்படத்தில் நடித்து மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார் சிம்ரன்.
இந்த திரைப்படத்தில் அவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது . சிம்ரன் பார்ப்பதற்கு அதே இளமையோடு இருப்பது தான் ரசிகர்கள் பார்த்து ரசித்தார்கள்.
சிம்ரனை காதலித்த அப்பாஸ்:
தொடர்ச்சியாக திரைப்படங்களில் கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார் . இந்நிலையில் சிம்ரனை நடிகர் அப்பா காதலித்து வந்த ரகசிய விஷயத்தை பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
அதாவது நானும் சிம்ரனும் கிட்டத்தட்ட மூன்று திரைப்படங்களில் சேர்ந்து ஒன்றாக நடித்தோம் அப்போது திரைப்படங்களில் அவருடன் நடிக்கும் போது ஏற்பட்ட கெமிஸ்ட்ரி உள்ளிட்டவை எங்களுக்குள் வொர்க் அவுட் ஆனதால் எனக்கு சிம்ரனை மிகவும் பிடித்து போனது.
ஒரு கட்டத்தில் சிம்ரன் மீது இருந்த காதலை நான் அவரிடம் கூற ப்ரொபோஸ் செய்யப் போனபோது வேறொரு பிரபலம் இடையில் புகுந்து விட்டார்.
உள்ள புகுந்த கெடுத்த பிரபலம்:
அவர் யார் என்று அவருடைய பெயர் சொல்ல நான் இப்போதைக்கு விரும்பவில்லை. காரணம் அவர்கள் இரண்டு பேருக்குமே கல்யாணம் ஆகிவிட்டது என அப்பாஸ் அந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் .
இதை அடுத்து சிம்ரனை காதலித்த அந்த வேறொரு பிரபலம் யாராக இருக்கும்? என நெட்டிசன் அலசி ஆராய்ந்து தேடத் துவங்கி இருக்கிறார்கள். முன்னதாக நடிகை சிம்ரன் டான்ஸ் மாஸ்டர் ராஜுடன் காதலில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.