ரஜினி அறைக்குள் அனுமதியின்றி நுழைந்த அரவிந்த் சாமி..! ரஜினி செய்த செயலை பாருங்க..

தமிழ் சினிமாவில் பெண்கள் விரும்பும் ஹீரோக்களில் ஒருவராக திகழ்ந்த அரவிந்த் சாமி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

பெண்களின் மனம் கவர்ந்த நாயகனாக பல படங்களில் நடித்து சிறப்பான நடிப்பால் திரையுலகில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட நடிகர் அரவிந்த்சாமி தமிழ் திரையுலகில் உச்சகட்ட நட்சத்திரமாக விளங்கியவர்.

ரஜினி அறைக்குள் அனுமதியின்றி.. 

இவர் திரை உலகில் வெற்றிகளை குவித்துக் கொண்டிருக்கும் போதே தனது அப்பாவின் சொந்த தொழிலை கவனித்துக் கொள்ள 2006 -ஆம் ஆண்டு திரை உலகை விட்டு விலகிச் சென்றார்.

இதனை அடுத்து மீண்டும் 2013 – ஆம் சாக்லேட் பாய் அரவிந்த் சாமியை அறிமுகப்படுத்தியது தமிழில் முன்னணி இயக்குனராக இருக்கும் மணிரத்தினம் தான். மணிரத்தினம் இயக்கிய ரோஜா படத்தில் அரவிந்த் சாமியின் நடிப்பை யாராலும் பாராட்டாமல் இருக்க முடியாது.

இவர் நடிகர் அரவிந்த் சாமியை கடல் என்ற படத்தில் அறிமுக நாயகனாக அறிமுகப்படுத்தியதை அடுத்து தனி ஒருவன், பாஸ்கர் ஒரு ராஸ்கல், செக்கச் சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

தற்போது இவர் மெய்யழகன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருடன் கார்த்தியும் இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

நடிகர் அரவிந்த்சாமி நேற்று தனது 54-ஆவது பிறந்த நாளை கொண்டாடியதை அடுத்து பல திரை பிரபலங்கள் மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்களை தொடர்ந்து தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.

நுழைந்த அரவிந்த்சாமி..

இந்நிலையில் அரவிந்தசாமி தான் அறிமுகமான தளபதி படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற சுவாரஸ்யமான சம்பவம் பற்றி சமீபத்தில் கூறியிருப்பது இணையங்களில் வேகமாக பரவி வருகிறது.

சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளி வந்த தளபதி திரைப்படம் இன்றளவும் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்த படமாக உள்ளது. இந்த படப்பிடிப்பு நடைபெற்ற போது குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அரவிந்த்சாமி வந்திருக்கிறார்.

இதனை அடுத்து படப்பிடிப்பு தளத்தை சுற்றி பார்க்க திட்டமிட்டு தளபதி படத்திற்காக போடப்பட்ட செட்டுகளை சுற்றி பார்த்துக்கொண்டு ஓர் அறைக்குள் நுழைந்து இருக்கிறார்.

அந்த அறையில் ஒரு நல்ல பெட் இருக்கவே அங்கு கொஞ்ச நேரம் அமர்ந்து ஓய்வு எடுக்கலாமா? என்று யோசித்த படி அமர்ந்திருந்தவர் அப்படியே தூங்கிவிட்டார்.

இதனை அடுத்து கொஞ்சம் நேரம் கழித்து எழுந்திருந்து பார்த்த போது அந்த இடத்தில் தரையில் வேறொருவர் படுத்திருந்ததை பார்த்து அதிர்ந்து போனார்.

ரஜினி செய்த செயலை பாருங்க..

அப்படி அறிந்து போக காரணம் என்ன தெரியுமா? அந்த தரையில் படுத்து இருந்த நபர் வேறு யாருமில்லை. நாம் விரும்பும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.

நான் இவ்வளவு நேரம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பெட்டில் தான் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டு இருக்கிறோம் என்பது அப்போது தான் அரவிந்த்சாமிக்கு புரிந்தது.

மேலும் தூங்கிக் கொண்டிருந்ததை பார்த்து தன்னை தொந்தரவு செய்யாமல் தரையில் ரஜினி படுத்து தூங்கி இருப்பதை பார்த்து நெகிழ்ந்து போன அரவிந்த்சாமி அந்த விஷயம் குறித்து தற்போது பேசியது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

இதற்கு காரணம் அந்த வயதிலும் மிகப் பிரபலமாக இருக்கக்கூடிய நடிகர் ரஜினி சிறிதளவும் கௌரவம் கொள்ளாமல் நடந்து கொண்ட விதத்தை நினைத்து அரவிந்த்சாமி வியந்து போனதோடு மட்டுமல்லாமல் அவரின் வளர்ச்சிக்கு இது தான் காரணம் என்பதை உணர்ந்து கொண்டதாக தெரிவித்திருக்கிறார்.

இந்த விஷயம் தற்போது இணையத்தில் படு வேகமாக பரவி வருவதோடு ரஜினிகாந்த் செய்த விஷயம் பற்றி ரசிகர்கள் அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து இணையத்தில் அதிகளவு படிக்கப்படுகின்ற விஷயங்களில் ஒன்றாக இதை மாற்றி விட்டார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version