நடிகர் பரத்தின் தற்போதைய நிலை.. ஹீரோவாக இருந்தவருக்கு வந்த சோதனையை பாத்தீங்களா..?

தமிழ் திரையுலகில் நிலைத்து விளையாடலாம் என்று நினைத்து திரைப்படங்களில் நடிக்க களம் இறங்கிய நடிகர் பரத் 2003 ஆம் ஆண்டு பாய்ஸ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார்.

இதையும் படிங்க: தனுஷ் தான் அதுக்கு காரணம்.. முதன் முறையாக வாயை திறந்த முன்னாள் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்த்…!

இதனை அடுத்து தமிழ் படம் மட்டுமல்லாமல் மலையாள படங்களிலும் நடித்த இவர் சிறப்பான நடிப்பை தமிழில் வெயில், கூடல் நகர், காதல் போன்ற படங்களில் நடித்து வெளிப்படுத்தி இருக்கிறார்.

நடிகர் பரத்..

நடிகர் பரத்தின் நடிப்பில் வெளி வந்த சேவல், முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, செல்லமே போன்ற படங்கள் அவரது பெயர் சொல்லும் படி இருந்தது. இதனை அடுத்து இவர் திருத்தணி, அரவான், கோ போன்ற படங்களில் நடித்ததோடு எதிர்பார்த்த அளவு இவருக்கு பட வாய்ப்புகள் ஏதும் சொல்லிக் கொள்ளும் படி கிடைக்கவில்லை.

தன் எனவே தனது ரூட்டை மாற்றினால் வாய்ப்புகள் கிடைக்கும் என்ற எண்ணத்தில் இவர் வில்லன் ரோல்களில் நடிக்க ஆரம்பித்தார். அது மட்டுமல்லாமல் நெகடிவ் ரோலில் இவர் நடித்த செல்லமே, கடுகு போன்ற படங்கள் இவருக்கு நினைத்த அளவு வெற்றியை தரவில்லை.

பரத்தின் தற்போதைய நிலை..

திரை உலகில் ஹீரோவாக அறிமுகப்படுத்தப்பட்ட பரத் அடுத்து அடுத்து இவர் பல படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் போதிய பட வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் வில்லனாக களம் இறங்கிய இவர் இடையில் ஒரு மிகப்பெரிய பிரேக்கை எடுத்துக் கொண்டார்.

இதனை அடுத்து சினிமாவில் தன் பார்வையை மீண்டும் செலுத்தி இருக்கும் பரத் புது பட வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.

ஹீரோவாக இருந்தவரின் நிலை..

இந்நிலையில் கொம்பன், தேவராட்டம், குட்டி புலி போன்ற படங்களை இயக்கிய எம் முத்தையா படத்தில் இவர் தற்போது நடிக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே ஆர்யா நடிப்பில் வெளி வந்த காதர் பாட்ஷா என்ற முத்துராமலிங்கம் என்ற படத்தை இயக்கியிருந்தது உங்கள் நினைவில் இருக்கலாம்.

இந்த படம் அவருக்கு தோல்வி படமாக அமைந்ததால் அடுத்ததாக தனது மகன் விஜயை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கியிருக்கிறார். இந்த படத்திற்கான பூஜை அண்மையில் தான் போடப்பட்டது.

பல புது முகங்கள் நடிக்கக்கூடிய இந்த படத்தில் ஆக்ஷன் கலந்த கதை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் முன்னாள் ஹீரோ நடிகர் பரத் இந்த படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிக்க உள்ளதாக விஷயங்கள் கசிந்து உள்ளது.

இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் பரத்தின் நிலை இப்படியா? ஆக வேண்டும். இந்த படமாவது இவருக்கு ஒரு வெற்றியை கொடுக்குமா? என்பது பேச்சுக்களை பேசி வரும் நிலையில் இனி வரும் படங்களில் இவரது நடிப்பை பார்த்து தான் அதை சொல்ல முடியும் என்று கூறியிருக்கிறார்கள்.

மேலும் சில ரசிகர்கள் விடாமுயற்சியோடு சினிமாவில் தன்னை தக்க வைத்துக் கொள்ள இப்போதும் நடிகர் பரத் கடுமையான வேலைகளில் களம் இறங்கி இருப்பது வரவேற்கத்தக்கது என்று அவருக்கு ஆதரவாக பேசி இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: “காரில் கால்களை தூக்கிட்டு இதை பண்றது ஒரு விதமான Vibe..” நிவேதா பெத்துராஜை விளாசும் ரசிகர்கள்..!

இதனைத் தொடர்ந்து இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக மாறி உள்ளதோடு ஹீரோவாக இருந்தவருக்கு வந்த சோதனையை பார்த்தீர்களா? என்று தற்போதைய நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

எனவே திரைப்படத்தை பொருத்த வரை யாருக்கும் நிரந்தர இடம் இல்லை என்பதற்கு உதாரணமாக பரதத்தின் நிலை உள்ளது என்று கூறலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version