குடிபோதைக்கு அடிமை… உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் பிஜிலி ரமேஷ்!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்கள் தொடர்ச்சியாக அடுத்தடுத்து மரணித்து வருகிறார்கள். நடிகர் விவேக் ,நடிகர் மனோபாலா, நடிகர் மயில்சாமி இப்படி தொடர்ச்சியாக பிரபலமான நடிகர்கள் அடுத்தடுத்து மரணித்து வருவதால் கோலிவுட் சினிமாவே அதிர்ந்து போய் கிடக்கிறது .

இப்படியாக தற்போது பிரபலமான காமெடி நடிகரும் YouTube பிராங்க் மூலம் ஃபேமஸ் ஆன பிஜிலி ரமேஷ் தற்போது திடீரென மரணம் அடைந்திருக்கும் செய்தியை கேட்டு ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சியில் உறைந்து விட்டது.

காமெடி நடிகர் பிஜிலி ரமேஷ்:

YouTube களில் பிராங்க் செய்த அதன் மூலம் பிரபலமானவர்தான் பிஜிலி ரமேஷ். இவர் நட்பே துணை, கோமாளி உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

தமிழ் சினிமா காமெடி நடிகராக பார்க்கப்பட்டு வந்தார். பிளாக் ஷீப் யூட்யூபில் பிராங்க் வீடியோ செய்ததன் மூலமாக ஓவர் நைட்டில் பிரபலமானவர் தான் பிஜிலி ரமேஷ்.

அந்த அந்த பிராங்க் வீடியோ மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா தமிழ் ரசிகர்கள் மனதையும் கவர்ந்தார்.

எதார்த்தமான இவரது காமெடியும் வித்தியாசமான காமெடியும் வெகுஜன மக்களை வெகுவாக கவர்ந்தது.

அதன்மூலமே இவருக்கு திரைப்பட வாய்ப்பு தேடி வந்தது. முதன் முதலில் ஹிப்ஹாப் ஆதி நடித்த நட்பே துணை திரைப்படத்தில் தான் இவருக்கு நடிக்கும் வாய்ப்பே கிடைத்தது.

அதை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டார் பிஜிலி ரமேஷ். தொடர்ந்து ஜோதிகா நடிப்பில் வெளிவந்த பொன்மகள் வந்தால், அமலாபால் நடித்த ஆடை மற்றும் ஜெயம் ரவி நடித்த கோமாளி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படங்களில் பிஜிலி ரமேஷ்:

யாஷிகா நடித்த ஜாம்பி இப்படி பல நட்சத்திர பிரபலங்களின் படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார்.

பிஜிலி ரமேஷ் மிக குறுகிய காலத்திலேயே பிரபலமான காமெடி நடிகராக அதிவேக வளர்ச்சியில் வளர்ந்து வந்தார்.

சின்ன சின்ன கதாபாத்திரங்கள் கிடைத்தாலும் கூட அதை விட்டு விடாமல் அதில் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக பார்க்கப்பட்டு வந்தார்.

இப்படி புகழின் வளர்ச்சியில் இருந்த பிஜிலி ரமேஷ் குடி போதைக்கு அடிமையாகி அதிலிருந்து மீண்டு வர முடியாமல் தொடர்ந்து குடிபோதையில் இருந்து வந்தார்.

இவர் சினிமாவில் நடிகராக அறிமுகமானது என்னவோ குடிபோதையில் தான். ஆம் குடித்துவிட்டு சாலையில் சென்ற போது பிஜிலி ரமேஷ் பிராங்க் செய்கிறோம் என பிடித்து கலாய்க்க தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆனார்.

அவரது பேச்சும் அவரது ஸ்டைலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்தது. தொடர்ந்து தமிழ் சினிமாவுக்கு ஒரு புது காமெடி நடிகர் கிடைத்துவிட்டார். எனக்கு கூறப்பட்டது .

எனவே குடிபோதையின் மூலமாக திரைத்துறைக்கு அறிமுகமாகி அதே குடிபோதை மூலமாக தனது திரைத்துறை வாழ்க்கையை சீரழித்துக் கொண்டிருக்கிறார் பிஜிலி ரமேஷ்.

ஆம் இவர் குடிபோதைக்கு அடிமையாகி உடல்நலம் குன்றி நேற்று இரவு 9 மணி அளவில் உயிரிழந்ததாக தற்போதைய தகவல் வெளியாகியிருக்கிறது .

உயிரை எடுத்த குடி பழக்கம்:

இதை அடுத்து இவரது மரண செய்தியை கேட்டு ஒட்டுமொத்த திரையுலகமே அதர்ந்து போய் விட்டனர்.

அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை 5 மணிக்கு எம்ஜிஆர் நகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும் என கூறப்பட்டு இருக்கிறது.

உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது பிஜிலி ரமேஷ் பேட்டி ஒன்றில்.. நான் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் நல்ல நல்ல நிலைமையில் இருந்தபோது 40 நண்பர்கள் கூட இருந்தார்கள்

ஆனால் உடல்நலம் முடியாமல் படுத்த படுக்கையாகி விட்டபோது ஒருத்தன் கூட என்னை எட்டிப் பார்க்கவில்லை.

எனவே உடம்பின் ஆரோக்கியம் மிகவும் முக்கியம் தேவையில்லாத தீய பழக்கங்களுக்கு அடிமையாக விடாதீர்கள்.

என்ன பிஜிலி ரமேஷ் தனது ரசிகர்களுக்கு அன்பான வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version