படம் நடிக்க தடை.. சிக்கலில் தனுஷ்.. பரபரப்பு தகவல்கள்..!

தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார் நடிகர் தனுஷ். தனுஷின் திரைப்படங்களுக்கு என்று தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருப்பது அனைவரும் அறிந்த விஷயமே. வி.ஐ.பி திரைப்படத்திற்கு பிறகு தனுஷிற்க்கான ரசிக்கப்பட்டாளம் என்பது அதிகரிக்க துவங்கியது.

அதற்கு தகுந்தார் போல தனுஷும் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படத்தின் கதை களத்தையும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஒவ்வொரு திரைப்படத்திலும் வித்தியாசமான நடிப்பையும் வெளிப்படுத்தி வருகிறார்.

மாறுப்பட்ட நடிப்பு:

வழக்கமான கமர்சியல் நடிகர்கள் மாதிரி கதை களங்களை தேர்ந்தெடுக்காமல் புது புது கதைகளை தேர்ந்தெடுத்தாலும் கூட தனுஷிற்கான மார்க்கெட் என்பது குறையாமலே இருக்கிறது.

அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தை கூறலாம். திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் சண்டை போடவே பயப்படும் ஒரு கதாபாத்திரமாக தனுஷ் நடித்தார். இப்பொழுது வளர்ந்து வரும் எந்த ஒரு நடிகரும் நடிப்பதற்கு யோசிக்கும் ஒரு கதாபாத்திரம் அது என்று கூற வேண்டும்.

Dhanush at the Filmfare Awards South 2017 Press Meet

இந்த நிலையில் தற்சமயம் தனுஷின் ஐம்பதாவது திரைப்படமான ராயன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்கு நடுவே திரைப்பட தயாரிப்பாளர்கள் இனி தனுஷை வைத்து திரைப்படம் தயாரிக்க கூடாது என்று ஒரு புதிய முடிவை எடுத்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

தனுஷ் செய்த மோசடி:

அதாவது பொதுவாகவே நடிகர்கள் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பே அதற்கான அட்வான்ஸ் தொகையை பெற்று விடுவார்கள். அதற்குப் பிறகு சில காலங்கள் கழித்து அந்த படத்தையும் முடித்து கொடுத்து விடுவார்கள். ஒரே நேரத்தில் ஒரு இரண்டு, மூன்று திரைப்படங்களில் நடிப்பதற்கு அட்வான்ஸ் தொகை பெறும் நடிகர்களும் உண்டு.

ஆனால் தனுஷை பொருத்தவரை அவர் நிறைய திரைப்படங்களுக்கு அட்வான்ஸ் தொகையை வாங்கிவிட்டு இன்னும் படத்தில் நடித்து கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே தனுஷை வைத்து புதிதாக திரைப்படம் தயாரிக்க நினைக்கும் தயாரிப்பாளர்கள் முதலில் அது குறித்து தயாரிப்பாளர் சங்கத்திடம் பேச வேண்டும்.

மேலும் தனுஷ் ஏற்கனவே அட்வான்ஸ் தொகை வாங்கி இருக்கும் தயாரிப்பாளர்களுக்கு முதலில் படத்தை நடித்து கொடுக்க வேண்டும் என்று அறிவித்திருக்கிறது தயாரிப்பாளர் சங்கம். இதனை அடுத்து முதலில் பெண்டிங்கில் இருக்கும் திரைப்படங்களை எல்லாம் முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் தனுஷ். மேலும் பிடித்த கதையாகவே இருந்தாலும் புதிய கதைகளில் இப்பொழுது அவர் நடிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version