ஊர் பாஷையில் பேசி தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற்ற காமெடி நடிகர்களில் முக்கியமானவர் கஞ்சா கருப்பு. மற்ற காமெடி நடிகர்களை போல அவர் உடல் மொழியில் பெரிதாக எதுவும் செய்ய தேவையில்லை. அவர் பேசும் விதமே காமெடியாக இருக்கும்.
பிதாமகன் திரைப்படத்தின் மூலமாக 2003 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் இவர் காமெடியனாக அறிமுகமானார். அதில் அவரை கஞ்சா குடிக்கி என அழைத்ததாலேயே அவரது பெயர் கஞ்சா கருப்பு என ஆனது. அதற்கு பிறகு ராம், சிவகாசி, சண்டக்கோழி என பல படங்களில் நடித்தார் கஞ்சா கருப்பு.
பட வாய்ப்புகள்:
பெரும்பாலும் கிராமம் சார்ந்த கதையமைப்பை கொண்ட திரைப்படம் என்றால் அதில் கஞ்சா கருப்புதான் இருப்பார். இந்த நிலையில் பருத்திவீரன், சுப்ரமணியப்புரம், தாமிரப்பரணி போன்ற திரைப்படங்கள் அவருக்கு அதிக வரவேற்பை பெற்று தரும் திரைப்படங்களாக இருந்தன.
Ganja_Karuppuதிரைத்துறையில் அமீர், இயக்குனர் பாலா, சமுத்திரக்கனி, சசிக்குமார் இவர்கள் எல்லாம் ஒரு அணி என கூறலாம்.
இந்த அணிதான் நடிகர் கஞ்சா கருப்பை வளர்த்துவிட்டது. எனவே அவர்கள் சார்ந்த விழாவிற்கு கஞ்சா கருப்பு வந்துவிடுவார்.
பட விழாவில் கஞ்சா கருப்பு:
இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் அமீர் நடிப்பில் உயிர் தமிழுக்கு என்கிற திரைப்படம் வெளியானது. முதன் முதலாக தாடியை நீக்கிவிட்டு அந்த திரைப்படத்தில் நடித்திருந்தார் அமீர். இந்த படத்தில் ப்ரீ ரிலீஸ் விழா நடந்தப்போது அதில் பலரும் கலந்துக்கொண்டனர்.
கஞ்சா கருப்பும் அதில் கலந்துக்கொண்டிருந்தார். அதில் அவர் பேசும்போது அந்த படத்தின் கதாநாயகியான சாந்தினியை கேலி செய்யும் விதத்தில் பேசியிருந்தார். அது அதிக விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. சாந்தினியின் பெயரை தவறாக உச்சரித்து கஞ்சா கருப்பு பேசியிருந்தார்.
ameer uyir thamilukkuசர்ச்சை பேச்சு:
இதனால் சாந்தினி தனது பெயரை சரியாக உச்சரிக்கும்படி கூறினார். அதற்கு பதிலளித்த கஞ்சா கருப்பு கூறும்போது “நான் என்ன பள்ளிக்கூடத்துக்கா வந்திருக்கேன், என்ன போட்டு பாடாய் படுத்துறீயேமா. வர்றத வச்சுகோங்கம்மா” எனக் கூறியிருக்கிறார்.
மேலும் அவர் பேசும்போது அண்ணன் அமீர் நிறைய படங்களில் பிஸியாக இருக்கணும். அதில் என்னை காமெடியனா போடணும். அதே மாதிரி சாந்தினி மேடத்தையும் போடனும் என பேசியிருக்கிறார்.