இரண்டு ஜோடிகளின் டைவர்ஸ்க்கு காரணமான ஜெயம் ரவியின் அந்த ஒரு முடிவு… அதை மட்டும் பண்ணாம இருந்திருக்கலாம்..!

ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி ஆர்த்தி விவாகரத்து குறித்த விஷயம் வெகு காலங்களாகவே சர்ச்சையாக இருந்து வந்த நிலையில் இன்று அதற்கு ஒரு முடிவு கிடைத்திருக்கிறது.

தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகவே இருவரும் பிரிய போவதை அறிவித்து இருக்கிறார். தமிழ் சினிமாவில் ஒரு நல்ல ஒழுக்கமான கதாநாயகன் என்று அவரை அழைக்கின்றனர். ஏனெனில் பெண்கள் விஷயத்தில் மிகவும் ஒழுங்காக இருக்கக்கூடியவர் ஜெயம் ரவி என்று கூறப்படுகிறது.

ஜெயம் ரவியின் அந்த ஒரு முடிவு

அப்படி இருந்தும் கூட ஜெயம் ரவிக்கு திருமணம் ஆகி விவாகரத்தில் முடிந்துள்ளது என்று பலரும் ஆச்சரியப்பட்டு வருகின்றனர். ஜெயம் ரவி ரசிகர்களுக்கே இது பெரிய ஷாக்கிங் செய்தியாக அமைந்திருக்கிறது.

இந்த நிலையில் பலரும் பலவாறு பேசி வந்தாலும் கூட குழந்தைகளின் நலனுக்காகவாவது இவர்கள் பிரியாமல் இருந்திருக்கலாம் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. ஆனால் விவாகரத்தை அறிவித்திருக்கிறாரே தவிர இன்னும் ஜெயம் ரவி சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க துவங்கவில்லை என்று ஒரு பக்கம் கூறப்படுகிறது.

இரண்டு ஜோடிகளின் விவாகரத்து

சட்டபூர்வமான நடவடிக்கை என்று போனாலும் கூட குடும்ப நல நீதிமன்றங்கள் எடுத்த உடனே விவாகரத்தை கொடுத்து அனுப்பி விடுவது கிடையாது. அதற்கு சில காலகட்டங்கள் எடுக்கும். அந்த காலகட்டத்திற்குள் ஒரு வேலை ஜெயம் ரவி மனம் மாறலாம்.

ஏனெனில் அவர் தனது குழந்தைகள் மீது அதிகமான அன்பு கொண்டவர் இவர்கள் இருவரும் பிரிவது என்பது குழந்தைகளின் வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று ஒரு பக்கம் கூறப்படுகிறது. ஆனால் இன்னொரு பக்கம் ஆர்த்தி நடவடிக்கைகள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பாதிப்பதாக இருந்ததால்தான் ஜெயம் ரவி பிரியும் முடிவை எடுத்தார் என்றும் கூறப்படுகிறது.

அதை மட்டும் பண்ணாம இருந்திருக்கலாம்

இப்படி பலவாறு பேச்சுக்கள் இருந்து வந்த நிலையில் ஜெயம் ரவியின் முன்னாள் கதை ஒன்று தற்சமயம் பிரபலமாக துவங்கியிருக்கிறது. அதாவது ஆர்த்தியை ஜெயம் ரவி காதலித்து தான் திருமணம் செய்து கொண்டார்.

தமிழில் சீரியல் திரைப்படங்கள் போன்றவற்றை தயாரித்து வந்த சுஜாதா விஜயகுமார் என்பவரின் மகள்தான் ஆர்த்தி. ஆர்த்தியை ஜெயம் ரவி காதலித்து வந்த அதே சமயத்தில்தான் நடிகர் ரஜினிகாந்த் அவரது மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை ஜெயம் ரவிக்கு திருமணம் செய்து வைக்க நினைத்ததாக ஒரு பேச்சு உண்டு.

அந்த சமயத்தில் ஜெயம் ரவி ஆர்த்தியை காதலித்து வந்ததால் அந்த வரனை நிராகரித்து விட்டார் என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை ஜெயம் ரவி அப்பொழுதே நடிகை ஐஸ்வர்யா ரஜினிகாந்தை திருமணம் செய்திருந்தார் என்றால் தற்சமயம் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கும் விவாகரத்து ஆகியிருக்காது அதேபோல ஜெயம் ரவிக்கும் விவாகரத்து ஆகியிருக்காது என்று கூறப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version