பத்திரிக்கையாளர் கேட்ட ஒற்றை கேள்வி.. கோபத்தில் வாய்விட்ட ஜீவா.. விஸ்வரூபமெடுக்கும் பாலியல் பிரச்சனை..!

கேரளா சினிமாவில் ஏற்பட்ட பாலியல் பிரச்சனைகள் தொடர்பான விவகாரங்கள் தற்சமயம் இந்தியா முழுவதும் பேசப்படும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. அனைத்து சினிமாக்களிலும் இந்த பாலியல் தொடர்பான அட்ஜஸ்ட்மெண்ட் விஷயங்கள் என்பது அதிகமாக இருந்து வந்தாலுமே கூட அதையும் வெகுவாக வெளியில் பேசப்பட்டிருக்காது.

ஆனால் கேரளாவில் தற்சமயம் அங்கு நடந்த பாலியல் விஷயங்கள் வெளியில் அப்பட்டமாக வெளிவர தொடங்கி இருக்கின்றன. இதில் பல பிரபல நடிகர்களின் பெயர்களும் சிக்கி இருப்பதால் இந்த பிரச்சனை தற்சமயம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

பத்திரிக்கையாளர் கேட்ட ஒற்றை கேள்வி

கேரளாவில் ஹேமா கமிட்டி என்கிற அமைப்பு தொடர்ந்து சில வருடங்களாகவே சினிமாவில் நடித்து வரும் பிரபலங்களிடம் பாலியல் பிரச்சனைகள் குறித்து ஆதாரங்களை திரட்டி வந்து கொண்டிருந்தன. இந்த நிலையில் தற்சமயம் அவற்றை வெளியிடுவதற்கு தயாராகி இருக்கிறது ஹேமா கமிட்டி.

இதில் நிறைய நடிகர்களின் பெயர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து இதற்கு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் இருந்து வருகின்றன. நடிகர் பிரித்திவிராஜ் மாதிரியான சிலர் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் சில நடிகர்கள் தொடர்ந்து இதை எதிர்த்தும் வருகிறார்கள்.

கோபத்தில் வாய்விட்ட ஜீவா

ஆனால் வெளிப்படையாக எதிர்க்கவில்லை. ஏனெனில் வெளிப்படையாக எதிர்த்தால் அவர்களது பெயரும் சர்ச்சைக்கு உள்ளாகும் என்பதால் அப்படி இருந்து வருகிறது. இந்த நிலையில் தமிழ் சினிமாவிலும் அது குறித்த அதிர்வலைகள் எழுந்து வருகின்றன.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விழாவிற்கு சென்ற நடிகர் ஜீவாவிடம் இது குறித்து கேட்கப்பட்டது. அப்பொழுது ஜீவா நீங்கள் பேசுவது எனக்கு புரியவில்லை என்று கூறியிருந்தார். அதை அவர்கள் தவறாக எடுத்துக் கொண்டு இந்த விஷயம் குறித்து அவருக்கு தெரியவில்லை என்பதாக அவர் கூறுவதாக எடுத்துக் கொண்டு அந்த அதை பிரச்சினையாக்கினர்.

ஆனால் ஜீவா நான் அப்படி கூறவில்லை நீங்கள் பேசியது எனக்கு கேட்கவில்லை சத்தமாக இருக்கிறது என்றுதான் நான் கூறினேன் என்று கூறியதோடு அல்லாமல் இதற்கு விளக்கமும் கொடுத்திருந்தார். அதில் ஜீவா கூறும்பொழுது இந்த விஷயம் எனக்கும் கொஞ்சம் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக தான் இருக்கிறது.

விஸ்வரூபமெடுக்கும் பாலியல் பிரச்சனை

சினிமா ஆரோக்கியமானதாக மாற வேண்டும். இப்படி எல்லாம் இருக்கக்கூடாது என்று என்றும் அது மிகவும் தவறு என்றும் பதிலளித்திருந்தார். இந்த நிலையில் மீண்டும் மீண்டும் பத்திரிகையாளர் அதே கேள்வியை கேட்கவும் ஜீவாவிற்கு கோபம் வந்துவிட்டது.

இந்த இடத்திற்கு சம்பந்தமில்லாத கேள்வியை கேட்காதீர்கள் என்று கூறினார் அப்பொழுதும் பத்திரிகையாளர்கள் திரும்பவும் அதே கேள்வியை கேட்கவும் ஜீவா கோபத்தில் உனக்கு அறிவு இருக்கிறதா? என்று பத்திரிகையாளரை கேட்டு விட்டார். இதனால் பத்திரிகையாளர் கோபமடைந்து ஜீவாவை திரும்ப பேச துவங்கிவிட்டார். இதனால் அங்கு சண்டை உண்டானது அதற்கு பிறகு சுற்றி இருந்தவர்கள் ஜீவாவை அழைத்து சென்றிருக்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version