தமிழ் சினிமாவில் பிரபலமான எழுத்தாளரும் நடிகரும் ஆன ஜோ மல்லூரி பிரபு சாலமோன் இயக்கத்தில் வெளியாகிய மாபெரும் ஹிட் அடித்த திரைப்படமான கும்கி திரைப்படத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு நடித்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் பிரபலமானார் .
அந்த திரைப்படத்தில் அவர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார். அப்படத்தில் ஹீரோயினாக நடித்த லக்ஷ்மி மேனனின் தந்தையாகவும் , ஊர் தலைவராகவும் நடித்து பெரும் புகழ்பெற்றிருந்தார் .
நடிகர் ஜோ மல்லூரி:
கும்கி திரைப்படத்திற்கு பிறகு அவரது மீதான கவனம் ஒட்டுமொத்த மக்களின் மீது சாய தொடர்ச்சியாக திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு கிடைக்க தொடங்கியது.
முன்னதாக ஜோ மல்லூரி எழுத்தாளராக புகழ்பெற்ற எழுத்தாளராக இருந்து வந்தார். இவருடைய பாடல்கள் ஆவணங்கள் ஆகியவை அதற்கு முக்கியமானவையாக அடங்கும்.
இவர் எழுதி “விலைமகளின் நாட்குறிப்பு” என்ற என்ற நாவல் மிகவும் பிரபலம். மேலும் “தமிழராம் எழும்” எனும் நூலை எழுதியிருக்கிறார்.
பின்னர் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்த போது தான் கும்கி திரைப்படத்தில் மலைவாழ் மக்களின் தலைவராக நடித்து நடித்து பெரும் புகழ்பெற்ற நடிகராக பார்க்கப்பட்டார்.
திரைப்படத்தில் அவருக்கு ஒரு நல்ல பெயர் கிடைத்தது. அதை எடுத்து விஜய் நடிப்பில் வெளிவந்த ஜில்லா திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்து மிகப்பெரிய அளவில் புகழ்பெற்றார்.
நடித்த படங்கள்:
முன்னதாக அவர். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜன்னல் ஓரம், ரம்மி ,தெனாலிராமன், அஞ்சான், இரும்பு குதிரை, மொசக்குட்டி, அப்புச்சி கிராமம், காக்கா முட்டை உள்ளிட்ட படங்களில் அழுத்தமான ரோல்களில் நடித்தார்.
மேலும், ஸ்ட்ராபெரி, புலி , திருநாள், சரவணன் இருக்க பயமேன், ஆனந்த விளையாட்டு, ரன் பேபி ரன், பத்து தல இப்படி பல திரைப்படங்களில் அவர் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து குணச்சித்திர நடிகராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இருந்தாலும் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ கும்கி திரைப்படம் தான். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சாய் வித் சித்ரா என்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஜில்லா திரைப்படத்தில் விஜய்யுடன் நடித்த அனுபவத்தை பற்றி கூறினார்.
ஜில்லா படத்தின் போது விஜய் உடன்:
அப்போது, “ஜில்லா” திரைப்படத்தில் விஜய்யுடன் பழகிய விதத்தைப் பற்றி பேசிய அவர் நான் ஜில்லா படத்தில் நடிக்கும் போது விஜய்க்கு ஒரு அசிஸ்டன்ட் இருந்தாரு.
அவர்தான் விஜய்க்கு என்ன ஒரு உதவினாலும் ஓடி ஓடி செய்வாரு. அந்த அசிஸ்டன்ட் தங்கச்சிக்கு ஒரு நாள் ஆபரேஷன் .
அதனால அவர் வேலைக்கு இரண்டு நாள் வரவே இல்ல. அந்த சமயத்துல ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த விஜய் எங்க அவர் ஆளே காணோம் என கேட்டார்.
உடனே அவர் தங்கச்சிக்கு ஆபரேஷன் என அங்கு இருந்தவர்கள் கூறினார்கள். அந்த சமயத்தில் எந்த ஒரு ரியாக்ஷனும் காட்டாமல் அங்கு இருந்து உடனடியாக சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்று விட்டார் விஜய்.
அதன் பின்னர் சூட்டிங் முடிந்து சாயங்காலம் ஆனதும் ஒரு போன் வருது… விஜய் ஆள் அனுப்பி அந்த அசிஸ்டன்ட் தங்கச்சி அட்மிட் ஆகி இருந்த ஹாஸ்பிடலுக்கு பணம் கட்ட சொல்லி இருக்காரு.
சைலெண்டா உதவி செய்த விஜய்:
இப்படி யாராவது தான் செய்த உதவியை மிகவும் எளிமையாக யாருக்கும் தெரியாமல் செய்ததுண்டா? அந்த விஷயத்தில் விஜய் அடித்துக் கொள்ளவே முடியாது.
எங்களுடன் தான் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு செய்ய வேண்டிய உதவி சைலன்டாக செய்துவிட்டார் என ஜோ மல்லூரி கூறியிருந்தார்.
மேலும் பேசிய அவர், ஷூட்டிங் ஸ்பாட்களில் விஜய் ரொம்ப அமைதியா இருப்பாருன்னு எல்லோரும் சொல்லுறாங்க.
விஜய் ஒன்னும் அப்படி இல்ல:
ஆனால், விஜய்யிடம் சென்று உங்களைப் பற்றி அவர் இப்படி சொன்னார் என நாம் யாரையேனும் பற்றி சொன்னால் அவர் சிரித்துவிட்டு அதை அப்படியே கடந்து விட்டு போய்விடுவார்.
அவர்களைப் திட்ட மாட்டார், அவர்களை பற்றி புலம்ப மாட்டார், கோபப்பட மாட்டார் எதுவுமே செய்ய மாட்டார். மேலும் விஜய் யாரை பற்றியும் தேவையில்லாமல் பேசவும் மாட்டார்.
நாம் சொல்லுகிற விஜய்க்கும் நாம் நேரில் பார்க்கிற விஜய்க்கும் 180 டிகிரி வித்தியாசம் இருக்கு. விஜய் பற்றிய உண்மையான கேரக்டர் அவருடன் நெருங்கி பழகியவர்களுக்கு மட்டும்தான் தெரியும் என ஜோ மல்லூரி விஜய் பற்றி மிகுந்த பெருமையோடு அந்த பேட்டியில் பேசி இருந்தார்.