அத்து மீறிய சார்பட்டா பரம்பரை பட நடிகர்..! பகீர் ஆதாரங்களை வெளியிட்ட சின்மயி..!

சினிமா துறையில் எப்போதுமே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை என்பது இருந்து கொண்டுள்ளது. கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் துவங்கி இப்போது வரை நடிகைகள் சினிமாவிற்கு சென்றால் அவர்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் என்பது இருந்து கொண்டுதான் இருக்கிறது.

இது அனைத்து மொழி சினிமாக்களிலும் இருந்து வரும் பிரச்சனையாக இருக்கிறது. இந்த நிலையில் தமிழ் சினிமா நடிகர் ஜான் விஜய் மீதும் தற்சமயம் இப்படி ஆன ஒரு குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. நடிகர் ஜான் விஜய் தமிழில் நிறைய திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்த பிரபலமான நடிகராகராவார்.

பிரபலமான துணை நடிகர்:

தமிழில் ஒரு வருடத்தில் ஐந்திலிருந்து ஆறு படங்களில் நிச்சயமாக துணை கதாபாத்திரங்களில் நடித்திருப்பார். அந்த அளவிற்கு வாய்ப்பை பெற்ற நடிகராக இருந்து வருகிறார் ஜான் விஜய். ஜான் விஜய் தலைமகன் என்னும் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

அதற்கு பிறகு அவருக்கு ஓரம்போ என்னும் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அதற்கு பிறகு ஒரு சில திரைப்படங்களில் காமெடி நடிகராகவும் நடித்திருந்தார். கலகலப்பு திரைப்படத்தில் கூட விமலின் நண்பனாக வரும் ஜான் விஜய் காமெடி கதாபாத்திரத்தில்தான் அந்த திரைப்படத்தில் நடித்திருப்பார்.

இது இல்லாமல் ராவணன், அங்காடி தெரு, தில்லாலங்கடி, வந்தான் வென்றான், தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். இதற்கு நடுவே இயக்குனர் பா ரஞ்சித் தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகளை கொடுத்து வந்தார்.

தொடர்ந்து வாய்ப்புகள்:

பா.ரஞ்சித் இயக்கத்தில் வந்த கபாலி, சார்பட்டா பரம்பரை போன்ற திரைப்படங்களில் இவருக்கு முக்கியமான கதாபாத்திரங்கள் இருந்தது. அதுவே ஜான் விஜயின் மார்க்கெட்டை இன்னும் அதிகரித்தது. இந்த நிலையில் மலையாள பெண் பத்திரிகையாளர் ஒருவர் ஜான் விஜய் குறித்து குற்றச்சாட்டு ஒன்றை கொடுத்திருக்கிறார்.

அதில் அவர் கூறும் பொழுது ஜான் விஜய் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக அவர் கூறுகிறார். மேலும் சென்னையில் உள்ள கிளப் மற்றும் பப்புகளுக்கு செல்லும்போது ஜான் விஜய் அங்கிருக்கும் பெண்களிடம் மிகவும் தவறாக நடந்துக்கொள்வார்.

அவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் கூட அவர்களை தொடர்ந்து பின் தொடர்ந்து அவர்களது இடங்களுக்கு எல்லாம் செல்வார் அவர் பிரபலமாக இருப்பதால் பெண்கள் அனைவரும் அவருக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார்.

அவரின் இந்த அணுகுமுறை பிடிக்கவில்லை என்றாலும் கூட பெண்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பார் என்று அந்த பெண் பத்திரிக்கையாளர் கூறியிருக்கிறார். இந்த தகவலை பாடகி சின்மயி ஸ்க்ரீன் ஷாட் எடுத்து அதை தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக குரல் கொடுத்து வருபவராக சின்மயி இருப்பது பலரும் அறிந்த விஷயமே.

இந்த நிலையில் இந்த தகவல் சமூக வலைதளங்களில் அதிக வைரலாக துவங்கியிருக்கிறது. ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு பல பெண்கள் ஜான் விஜய் குறித்து பாலியல் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version