300 படங்கள் நடிச்சிருக்கேன்.. இந்த ஒரு பழக்கம் என் வாழ்க்கையை நாசமாகிடுச்சு.. காஜா ஷெரீப் வேதனை

தமிழ் திரையுலகில் இதுவரை 300 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த காஜா செரீப். 80 காலகட்டத்தில் பல முக்கிய முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த நடிகர் காஜா பற்றி உங்களுக்கு கூற வேண்டிய அவசியம் இல்லை.

இதையும் படிங்க: என்னோட மார்பகம் பற்றி அப்படி சொன்னால்.. எனக்கு இது தான் தோன்றும்.. நீலிமா ராணி சுறுக்..!

இவர் அண்மையில் அளித்திருந்த பேட்டியை பார்த்து ரசிகர்கள் பலரும் வாயடைத்து விட்டார்கள். இதற்கு காரணம் சாதாரணமான பழக்கமாக ஆரம்பித்த குடி பழக்கம் இவரது வாழ்க்கையை எப்படி தடம் மாற்றியது என்ற உண்மையை கூறியிருக்கிறார்.

நடிகர் காஜா ஷெரிப்..

இந்த பேட்டியில் இவர் மனம் திறந்து தனது சினிமா வாழ்க்கை குறித்த சில தகவல்களை கூறியதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் அடடா.. இப்படியா.. போனது என்ற பெருமூச்சு விட்டிருக்கிறார்கள்.

காஜா செரீப் பாக்யராஜ் நடிப்பில் வெளி வந்த அந்த ஏழு நாட்கள் திரைப்படத்தில் நடித்த பிரபலமானார். இதனை அடுத்து விசுவின் சம்சாரம் அது மின்சாரம் திரைப்படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர்.

இந்நிலையில் பல பிரபலங்களோடு நடித்துக் கொண்டிருக்கும் போதே சினிமாவில் இருந்து காணாமல் போன இவர் அண்மை பேட்டியில் பேசும் போது சிவாஜி, ரஜினி, விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களோடு நடித்த இவர் கலராக இருந்த காரணத்தால் ஹீரோவாக வரலாம் என்று கூறினார்களாம்.

குடியால் வீணா போன வாழ்க்கை..

எனினும் இவருக்கு காமெடியனாக நடிக்கத்தான் ஆசை. இவர் நடிக்கும் போது 1500 ரூபாய் இவருக்கு சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது. அது தவிர 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் ஜெயலலிதா, கலைஞர், எம்ஜிஆர் போன்ற லெஜென்ட்களின் கைகளில் பரிசினை பெற்றிருக்கிறார்.

மேலும் ஹீரோவாக நடிக்க இவரது உயரம் தடையாக இருந்ததால் சினிமாவின் மீது ஆசை போய்விட்டது. அதனை அடுத்து மலேசியா, துபாய், கனடா போன்ற நாடுகளில் கலை நிகழ்ச்சிகளுக்கு சென்றதால் குடிப்பழக்கம் ஏற்பட்டு சினிமா வாய்ப்பை தவற விட்டு விட்டேன்.

இதனால தான் சினிமாவில் இருந்து விலகினாரா?..

மெல்ல ஆரம்பித்த இந்த குடிப்பழக்கம் நாள் செல்லச், செல்ல அதற்கு அடிமையாகும் படி என்னை மாறிவிட்டது. இதனால் தான் என்னால் சினிமாவில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனது என்ற பேச்சானது தற்போது இணையங்களில் வைரலாக மாறிவிட்டது.

இதனை கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் ஒரு மனிதனின் வாழ்க்கையை தடம் மாற்றி போடக்கூடிய அளவு இந்த குடிப்பழக்கம் உள்ளது. இந்த குடிப்பழக்கத்திற்கு யாரும் அடிமையாகாமல் இருந்தால் வாழ்க்கையை வாழ்வாங்கு வாழலாம் என்பது போன்ற உண்மையை உரக்க கூறி இருக்கிறார்கள்.

எனவே 300 படங்களில் நடித்தும் தீய பழக்கத்தால் சினிமாவில் நிலைத்து நிற்க முடியாத காஜா வாழ்க்கையை பாடமாகக் கொண்டால் கட்டாயம் மது பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு ஏதுவாக இருக்கும்.

மேலும் யாரும் இது போன்ற தீய பழக்கவழக்கங்களுக்கு அடிமையாக வேண்டாம் என்பதை ரசிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதோடு இவருக்கு மீண்டும் படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தால் நடிக்க வேண்டும். மது பழக்கத்திலிருந்து வெளி வந்தால் நன்றாக இருக்கும் என்பது போன்ற அட்வைஸ்களையும் தந்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க: படையப்பா படத்துல முதலில் ஹீரோயினா நடிச்சது யாரு தெரியுமா..? இதோ பாருங்க..

இணையத்தில் தற்போது இந்த விஷயம் தான் வைரலாக பரவி வருவதோடு மதுவின் கொடுமையை பற்றி அவரவர் கருத்துக்களை பதிவு செய்த வண்ணம் இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version