குணா படத்திற்கு கமல் வைக்கவிருந்த முதல் டைட்டில்.. எல்லோரும் நோ சொன்ன சம்பவம்..

இந்திய திரைப்படத்தில் நடிக்கும் நடிகர்களில் திரைப்படத்திற்கு ஆகவே பிறந்தவரா? என்று கேட்கக் கூடிய வகையில் தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தக்கூடிய நடிகர் கமல் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்று உலக நாயகனாக உயர்ந்திருக்கும் இவர் திரைப்படத்தின் என்சைக்ளோபீடியா என்று அழைக்கலாம்.

இதையும் படிங்க: “பிரபல பெண் யூட்யூபருக்கு சென்னை போலீஸ் வைத்த செக்..” ஒரே வீடியோவில் டோட்டல் டேமேஜ்..!

இதனை அடுத்து இவர் நடிப்பில் வெளி வந்த குணா திரைப்படம் உங்களுக்கு நினைவில் இருக்கலாம். 1999 ஆம் ஆண்டு வெளி வந்த இந்த படம் கொடைக்கானலில் மிகவும் ஆபத்தான குகையில் ஷூட் செய்யப்பட்டது. இந்த படத்தில் நடிகர் கமலஹாசன் மற்றும் ரோஷினி, ரேகா உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள்.

நடிகர் கமலஹாசன்..

இதனை அடுத்து தற்போது குணா படத்தை தழுவியது போல மலையாளத்தில் வெளி வந்திருக்கும் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தைப் பார்த்து வியந்து போன உலகநாயகன் கமலஹாசன் அந்த படகுழுவை அடைத்து நேரில் வாழ்த்தியதோடு மட்டுமல்லாமல் குணா படத்தில் நிகழ்ந்த சுவாரஸ்யங்களை பகிர்ந்து கொண்டார்.

அவரு அவர் குணா படம் பற்றிய விஷயங்களை பகிர்ந்து கொண்ட போது அவருடன் சந்தான பாரதியும் உடன் இருந்தார். அவரும் குணா குகை ஆபத்து நிறைந்த சூழல் கொண்டது என்றும் அங்கு எப்படி படப்பிடிப்பு நடந்தது என்பதை பற்றி விளக்கமாக கூறியிருந்தார்.

கொடைக்கானலில் இருக்கும் இந்த மலை குகையில் ஷூட்டிங் எடுக்கப்பட்டதை அடுத்து இந்த குகையை தற்போது குணா குகை என்ற பெயரிலேயே அழைத்து வருகிறார்கள். இது கொடைக்கானலில் இருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளதோடு இந்த குகையை காண மலைகளைக் கடந்து செல்ல வேண்டும் என்ற விஷயத்தை சந்தான பாரதி கூறினார்.

குணா படத்துக்கு வைக்க நினைத்த டைட்டில்..

அத்தோடு இந்த குகைக்குள் கண்மணி அன்போடு காதலன்.. என்ற பாடல் காட்சி படம் பிடிக்கப்பட்ட சமயத்தில் அந்த குகையில் பாடலை எடுக்க வேண்டாம் என கமலோடு வாக்குவாதம் நடைபெறதாக சந்தான பாரதி தனது பேட்டியில் கூறி இருக்கிறார்.

மேலும் 33 ஆண்டுகளுக்கு முன் கமலஹாசன் நடிப்பில் வெளி வந்த இந்த பாடலில் கண்மணி அன்போடு காதலன் என்ற அந்த பாடல் எந்த குகையில் இருந்து எடுக்கப்பட்டது பல ரசிகர்களையும் கவர்ந்தது.

இந்த மோசமான லொகேஷனை கண்டுபிடிப்பதற்காக நான்கு பேர் மற்றும் அந்த இடத்துக்கு சென்று அந்த குகையை கண்டுபிடித்து அதற்குள் இறங்கி சூட்டிங் எடுப்பதே மிகவும் சிரமமாக இருந்தது என்பதை சந்தான பாரதி கூறினார்.

நோ சொன்ன பட குழு..

அத்தோடு பல கலைஞர்கள் புடைசூழ இந்த காட்சியை படம் பிடித்ததாக சந்தான பாரதி கூறிய நிலையில் குணா குகையில் ஷூட்டிங் எடுப்பது சிரமமானது என்பதால் ஆரம்பத்தில் மறுத்ததாகவும் கூறினார்.

கமலுக்கு பாதுகாப்பு இல்லாத இடத்தில் ஷூட்டிங்கை எடுக்கலாமா? என்று யோசித்ததாகவும் வனத்துறை அதிகாரிகள் போதுமான பாதுகாப்புகளை தயார் செய்ததின் காரணத்தால் அங்கு படம் எடுக்கப்பட்டதாகவும் கூறினார்.

அத்தோடு இந்த படத்திற்கு குணா என்று பெயர் வைப்பதற்கு பதிலாக மதிகெட்டான் சோலை என்ற டைட்டிலை வைக்க வேண்டும் என்று கமல் கேட்டதை அடுத்து ஒட்டுமொத்த படக்குழுவும் இந்த பெயரை வேண்டாம் என்று சொல்லி இறுதியில் குணா என்ற தலைப்பு தீர்மானம் செய்யப்பட்டதாக கமலஹாசன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தினமும் நைட்டு இதை பண்ணா தான் தூக்கமே வரும்… கூச்ச நாச்சமில்லாமல் கூறிய ஷகிலா!

இதனை அடுத்து குணா படத்திற்கு தமிழ் வைக்க இருந்த முதல் டைட்டில் மதிகெட்டான் சோலையா? என்ற தலைப்பினை தொடர்ந்து ரசிகர்கள் கூறி வருவதோடு அந்த தலைப்புக்கு படக்குழு நோ சொன்ன விஷயத்தை இணையங்களில் பரவ விட்டு தெறிக்க விட்டிருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version