ரெண்டாவதா பொறந்த பசங்களுக்கு இது தான் வேலை..! சூர்யா குறித்து நடிகர் கார்த்தி சொன்னதை கேளுங்க..!

தமிழ் சினிமாவில் மிகவும் ஒழுக்கமான நட்சத்திர குடும்பம் என பெயரெடுத்திருப்பது தான் சிவகுமாரின் குடும்பம்.

நடிகர் சிவக்குமார் திரை துறையில் பல்வேறு வெற்றி படங்களில் நடித்த பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டு வந்தார்.

சிவகுமார் குடும்பம்:

இவர் திரைப்படத்தையும் தாண்டி குடும்ப வாழ்க்கை மிகவும் ஒழுக்கமாகவும் மிகவும் கட்டுக்கோப்புடனும் இருப்பார்.

குறிப்பாக நடிகைகளுடன் நடிக்கும்போது எல்லைமீறி மற்ற நடிகைகள் பெண்களிடம் நடந்துக்கொள்வது போன்றெல்லாம் அவரது அகராதியிலே கிடையாதாம்.

குறிப்பாக கூத்தாடிகளின் வாழ்க்கையை இப்படித்தான் என்று எடுத்துக்காட்டாக சொல்லும் மக்களுக்கு மத்தியில் கொஞ்சம் வித்தியாசமாக சிவக்குமார் குடும்பம் என்றாலே தனிதான் என்று பேசும் அளவிற்கு அவ்வளவு சிறப்பாகவும் ஒழுக்கமாகவும் வளர்ந்து வந்தார்.

இவர் மிகச்சிறந்த நடிகர் என்பதையும் தாண்டி சிறந்த ஓவியர் என்பது பலரும் அறிந்த ஒன்றுதான்.

1965 ஆம் ஆண்டு வெளிவந்த காக்கும் கரங்கள் என்ற திரைப்படத்தில் நடித்து நடிகராக அறிமுகமானார் சிவகுமார்.

தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க பல்வேறு சூப்பர் ஹிட் படங்களில் நடித்து பெருமைக்குரிய நடிகராக பார்க்கப்பட்டார்.

சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, திருமால் பெருமை, உயர்ந்த மனிதன், ரோசாப்பூ ரவிக்கைக்காரி, சிந்து பைரவி, உள்ளிட்ட இந்த திரைப்படங்கள் அவருக்கு மிகப்பெரிய பெயர் எடுத்துக் கொடுத்த திரைப்படங்கள்.

நட்சத்திர நடிகர்களான மகன்கள்:

லட்சுமி என்ற லட்சணமான பெண்ணை திருமணம் செய்து கொண்ட சிவகுமாருக்கு சூர்யா கார்த்தி மற்றும் பிருந்தா என மொத்தம் மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள்.

இதில் சூரியா கார்த்தி இருவரும் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக தற்போது மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறார்கள்.

மகள் பிருந்தா பாடகி என்பது பலருக்கும் சமீப காலமாக தான் தெரியவந்தது. அவர் திரைப்படங்களுக்கு கூட பாடல்களை பாடி வருகிறார்.

மகன்கள் இருவரும் போட்டி போட்டு திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்துக் கொண்டு தொடர்ந்து முன்னணி நடிகராக அந்தஸ்தை பிடித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் நடிகர் கார்த்தி சமீபத்தை பேட்டி ஒன்றில் தனது குழந்தை பருவத்தில் நடந்த சில குறும்புத்தனமான விஷயங்களை வேடிக்கையாக பகிர்ந்து இருக்கிறார்.

குறிப்பாக தனது அண்ணனுடன் தான் செய்த சேட்டைகள் குறித்தும் பேட்டி ஒன்று ஜாலியாக பேசி இருக்கும் கார்த்தி என்ன சொன்னார் என்பது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்

கார்த்தி கூறியதாவது, என்னுடைய அப்பாவுக்கு நிறைய முறை நான் ஸ்பை வேலை பார்த்திருக்கிறேன் என் அண்ணன் அடிக்கடி வீட்டிற்கு தாமதமாக வருவார்.

சிவகுமாருக்கு ஸ்பை வேலை பார்த்த கார்த்தி:

நான் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது தேர்வுக்கு படித்துக் கொண்டிருப்பேன். இரவு நீண்ட நேரம் படிப்பேன்.

படிக்கிறேனோ இல்லையோ புத்தகத்தை விரித்து வைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். அப்போது என் அண்ணன் வீட்டிற்கு தாமதமாக வந்தால் உடனே சென்று என்னுடைய அப்பாவிடம் அண்ணன் லேட்டா வரான் என்று போட்டுக் கொடுப்பேன்.

அன்று இரவு ஒரே வேடிக்கையாக இருக்கும். இப்படி எங்க அப்பாவுக்கு நான் நிறைய முறை ஸ்பை வேலை பார்த்திருக்கிறேன்.

இரண்டாவதாக பிறந்த பசங்களுக்கு இது தானே வேலை என சமீபத்திய மேடை நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருக்கிறார். நடிகர் கார்த்தி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version