என்னடா சொல்றீங்க.. ஓரினச்சேர்க்கை புகார்.. கார்த்திக் குமார் பதிலை கேட்டு அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

தன்னை ஓரினச் சேர்க்கையாளராக சித்தரித்த எக்ஸ் மனைவி சுசித்ரா கருத்துக்கு பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் தற்போது கார்த்திக் குமார் வீடியோ ஒன்றில் தனது எக்ஸ் மனைவியை கடுமையாக தாக்கி பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாடகி சுசித்ரா தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பற்றியும் பிரபல நடிகர் தனுஷ் பற்றியும் பல்வேறு விதமான கருத்துக்களையும் அதிர்ச்சி தரும் தகவல்களையும் வெளியிட்டு பலருக்கும் ஷாக் அடித்தார்

ஓரினச்சேர்க்கை புகார்..

மேலும் இணையத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய இந்த விஷயமானது ரசிகர்களின் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த வகையில் தன் கணவனை ஓரினச் சேர்க்கையாளராக தனுஷோடு இணைத்து சித்தரித்த பாடகி சுசித்ராவின் கருத்துக்கு பதிலடி தந்திருக்கிறார் முன்னாள் கணவர் கார்த்திக் குமார்.

அந்த வகையில் இவர் தான் அதற்காக வெட்கப்பட போவதில்லை என்று சொல்லி இருப்பது பல்வேறு விதமான சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

மேலும் மிகச்சிறந்த ஸ்டாண்ட் அப் காமெடியன், நடிகர் என பல திறமைகளுக்கு சொந்தக்காரரான கார்த்திக் குமார் தனது முன்னாள் மனைவியின் மீதும் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார்.

இந்த நிலையில் திருமணம் ஆகி இவர்களுக்கு குழந்தை இல்லாத நிலையில் மருத்துவரை சந்திக்க சென்ற போது அங்கு கார்த்திக் குமார் ஓரினச்சேர்க்கையாளரா? என்ற சந்தேகம் இருப்பதாக என்னிடம் மருத்துவர் கூறியதாக இணையத்தில் பதிவிட்டதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

கார்த்திக் குமார் பதில்..

இந்நிலையில் தனது கணவர் ஆண் நண்பர்களுடன் அடிக்கடி பழகுவதை கவனித்ததாகவும், மேலும் அடிக்கடி மும்பை சென்று வருவது அவருக்குள் சந்தேகத்தை ஏற்படுத்தியதாகவும் கூறியிருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் தன்னுடைய பேட்டியில் தனுஷ் ஐஸ்வர்யா பிரிவு குறித்து பேசியதை அடுத்து கார்த்தி குமார் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக மாறிவிட்டது.

அந்த வகையில் தன்னை ஓர் இனச்சேர்க்கையாளர் என்று சொன்ன நிலையில் அதைப் பற்றி தான் வெட்கப்பட போவதில்லை. பாலியல் விஷயத்தை நான் எந்த விருப்பத்தில் இருந்தாலும் அதை பெருமையாகவே கருதுகிறேன் என்று கார்த்திக் குமார் சொல்லியிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் நாம் செய்ய நினைக்கக்கூடிய விஷயத்தை எந்த நேரத்திலும் எங்கு வேண்டுமானாலும் அதற்கு ஆதரவாக நடக்கும் பேரணிகளிலும் கலந்து கொள்வேன். இதில் அவமானம் ஏதும் இல்லை பெருமை மட்டுமே உள்ளது எனக் கூறியிருக்கிறார்.

அதிர்ச்சியில் ரசிகர்கள்..

இவரின் இந்த வீடியோவை பார்த்து ரசிகர்களின் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதோடு பாடகி சுசித்ராவின் கருத்துக்கு பதிலடி தர இவர் இப்படி கருத்துக்களை பரிமாறி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

அத்தோடு இன்னொரு வீடியோவை பகிர்ந்திருக்கும் கார்த்திக்குமார் எதிர்பாலின ஈர்ப்பை கொண்டாடுவது அனைத்து பாலின அடையாளங்களையும் தழுவியது என தன்னை போன்ற எதிர்பாலின நபர்களின் சலுகைகளை ஒப்புக்கொள்கிறேன் என குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும் இந்த வீடியோவை கார்த்திக் குமாரின் இரண்டாவது மனைவி மறு பகிர்வு செய்துள்ளதை அடுத்து தனுஷ் கார்த்திக் குமார் உள்ளிட்ட குரூப் செய்த பிராங்கினால் தான் பலி கிடா ஆகிவிட்டதாக பாடகி சுசித்ரா தெரிவித்தார்.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலை அடுத்து தற்போது தான் அதில் இருந்து மீண்டு எழுந்து வந்த நிலையில் மீண்டும் இது போன்ற வீடியோக்களால் மனநிலை பாதிக்கப்படும் எனக் கூறியிருக்கிறார்.

 

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version