நவரச நாயகன் கார்த்திக்கின் மார்கெட் புட்டுகிட்டு அதளபாதளத்துக்கு போக காரணம் இது தான்..!

இயக்குனர் பாரதிராஜா மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான பல்வேறு புது முகங்களில் நடிகர் கார்த்திக்கும் ஒருவர். அலைகள் ஓய்வதில்லை திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார்.

மிக மிக இளம் வயதிலேயே கார்த்திக் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிவிட்டார். இதனால் அவருக்கு கதாநாயகனாக நடிப்பதற்கு நிறைய வருடங்கள் இருந்தன. 1981 ல் அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் அறிமுகமானார் கார்த்திக்.

அடுத்த வருடம் மட்டும் அவரது நடிப்பில் 10 படங்கள் வெளியாகின. இப்போது தமிழ் சினிமாவில் புதிதாக அறிமுகமாகும் எந்த ஒரு நடிகரும் நினைத்து கூட பார்க்காத எண்ணிக்கையிலான திரைப்படங்கள் இவை.

சினிமாவில் வரவேற்பு:

கார்த்திக் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் பயங்கரமான வெற்றியை கொடுத்து வந்தன. அதிலும் கிழக்கு வாசல் தெய்வ வாக்கு நாடோடி பாட்டுக்காரன் மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் கார்த்திக்கின் மார்க்கெட்டை வேற லெவலுக்கு கொண்டு சென்ற திரைப்படங்கள் என்று கூறலாம்.

பாட்டு பாடுபவராக நடிகர் மோகன் எப்படி அதிக படங்களில் நடித்தாரோ அதே போல கார்த்தியும் நடித்திருக்கிறார்.அப்பொழுது கார்த்திக், மோகன் ராமராஜன் போன்ற நடிகர்களுக்கு எல்லாம் பாட்டு பாடுபவராக திரைப்படங்களில் நடிப்பதுதான் வேலையாக இருந்து வந்தது.

இந்த நிலையில் இவ்வளவு வெற்றி படங்களை கொடுத்தபோதும் கூட கார்த்திக்கு தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு அவப்பெயர் உண்டு அது என்னவென்றால் படபிடிப்புக்கு குறித்த நேரத்திற்கு கார்த்திக் வரமாட்டார் என்பதுதான்.

படப்பிடிப்பில் தாமதம்:

கார்த்திகை கதாநாயகனாக வைத்து இயக்குனர் விக்ரமன் உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் என்கிற திரைப்படத்தை இயக்கினார். அந்த திரைப்படத்தில் ரோஜா கதாநாயகியாக நடித்திருந்தார். இதனால் கார்த்திக் குறித்து விக்ரமன் ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.

அதில் அவர் கூறும் பொழுது கார்த்திக் நன்றாக நடிக்க கூடியவர் தான் ஆனால் அதிகாலை படப்பிடிப்பிற்கு மட்டும் அவர் வரவே மாட்டார் காலை 6 மணிக்கு சூட்டிங் என்றால் அவரால் வரவே முடியாது. 11 மணிக்குதான் அவர் படப்பிடிப்பிற்கு வருவார்.

காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது என்பது கார்த்திக்கு பழக்கம் கிடையாது இதனால் என்னுடைய படத்தில் நடிக்கும் பொழுதே தினமும் 11 மணிக்கு தான் படப்பிடிப்புக்கு வருவார். ஆனால் அப்படியும் கூட இரவு ஒரு மணி ஆனாலும் இருந்து படப்பிடிப்பை நடித்து கொடுத்துவிட்டு செல்வார்.

இதனாலையே சிவாஜி கணேசனின் பெரும்பாலான திரைப்படங்களில் நடிக்கவில்லை என்று கார்த்திக் ஓப்பனாக கூறி இருக்கிறார். மேலும் பல பட வாய்ப்புகளை இவர் இழப்பதற்கு இந்த 11 மணி சமாச்சாரம் பெரிய காரணமாக இருந்தது என்கிறார் விக்ரமன்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam