என் பையன் என்ன கேட்ட அந்த கேள்விக்கு நான் குடுக்குற சொத்து இது தான்.. கருணாஸ் எமோஷனல்..!

1970-களில் பிறந்த நடிகர் கருணாஸ் ஒரு மிகச்சிறந்த திரைப்பட நடிகராக இருப்பதோடு மட்டுமல்லாமல் இசை அமைப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் திகழ்கிறார். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பேரா ஊரணியில் பிறந்தவர்.

முக்குலத்தோர் புலிப்படை எனும் அரசியல் கட்சியின் தலைவராக இருக்கக்கூடிய இவர் 2016 -ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் திருவாடனை தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

நடிகர் கருணாஸ்..

ஆரம்ப காலகட்டங்களில் திரையுலகில் நகைச்சுவை வேடங்களை ஏற்று நடிக்கும் போது 2001-ஆம் ஆண்டு வெளி வந்த நந்தா திரைப்படத்தில் நடிகர் கருணாசுக்கு ஒரு மிகச்சிறந்த அறிமுகம் கிடைத்தது.

இதற்கு காரணம் இந்த படத்தில் இவர் லொடுக்கு பாண்டி என்ற கேரக்டருடைய பக்காவாக செய்ததை அடுத்து மக்கள் மத்தியில் இடம் பிடித்த இவருக்கு அடுத்தடுத்து படங்கள் வந்து சேர்ந்தது.

அந்த வகையில் காதல் அழிவதில்லை, ஏப்ரல் மாதத்தில், பாபா,  பேசாத கண்ணும் பேசுமே, வில்லன், ஜெயா, பாலா போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து புதிய கீதை, திருமலை, காதலுடன், குத்து, ரகசியமாய், ஆகா எத்தனை அழகு, இயற்கை, பிதாமகன், திருடா திருடி, ஜனா, வசூல் ராஜா எம் பி பி எஸ், அட்டகாசம், மெர்குரி பூக்கள், தகப்பன் சுவாமி, திருவிளையாடல் ஆரம்பம்,  மதுரை, பொல்லாதவன், புலி வருது, யாரடி நீ மோகினி, திண்டுக்கல் சாரதி, பௌர்ணமி நாகம், எந்திரன், சாந்தமாமா உள்ளிட்ட பல படங்களை நடித்ததோடு சில படங்களை தயாரிக்கவும் செய்திருக்கிறார்.

மேலும் ராஜாதி ராஜா, அம்பாசமுத்திரம் அம்பானி, காசேதான் கடவுளடா, போன்ற படங்களில் இசை அமைப்பாளராக பணியாற்றியதோடு சென்னை 600028, ராஜாதி ராஜா, காசேதான் கடவுளடா, சாந்த மாமா, ரகளபுரம் போன்ற படத்தில் பாடல்களை பாடி இருக்கிறார்.

என் பையன் கேட்ட அந்த கேள்வி..

தற்போது அதிகளவு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காததை அடுத்து சொந்த ஊரில் விவசாயம் பார்த்து அனைவருக்கும் எடுத்துக்காட்டாக இருக்கக்கூடிய நடிகர் கருணாஸ் அண்மை பேட்டி ஒன்றில் பேசிய போது தன் மகனுக்கு சேர்த்து வைத்த சொத்து இது தான் என்பதை சொல்லி இருப்பதாக சொல்லி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

இந்நிலையில் குடும்பத்தில் இருக்கும் பொருளாதார நிலை தெரியாமல் ஏன் இவ்வளவு சிரமப்பட்டு நீங்கள் சல்லியாகள் படம் எடுக்க வேண்டுமா? என்று தனது மகன் கேட்டார்.

அது மட்டும் அல்லாமல் இந்த காலத்தில் யார் இனம் மொழி என்றெல்லாம் பார்க்கிறார்கள் என்ற கேள்வியையும் எழுப்பினார்.

அப்போது என் மகனிடம் வருங்காலத்தில் நீ என்னை போல் ஒரு நடிகனாக வரலாம். இல்லையென்றால் வேறு ஏதாவது துறைகளில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

நான் அதை சேர்த்து வைத்திருக்கிறேன் அப்படி இருந்திருக்கிறேன் அதை கொடுத்து இருக்கிறேன் என்றெல்லாம் உனக்கு சொல்லவில்லை.

ஆனால் உன் அப்பா இப்படிப்பட்ட ஒரு படத்தை எடுத்தார் என்ற அறிமுகத்தை மக்கள் மத்தியில் விட்டு செல்வ துதான் நான் உனக்கு அளிக்கக்கூடிய மிகப்பெரிய சொத்து என்று எமோஷனலாக பேசியிருக்கிறார். 

 உன் சொத்து கருணாஸ் எமோஷனல் பேச்சு..

அப்படி எமோஷனலாக கருணாஸ் பேசிய எந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.

இதைத் தொடர்ந்து இந்த படத்தில் எதை முக்கியமாக நிலை நிறுத்தி இருப்பார்கள் என்பதை ரசிகர்கள் தற்போது யூகிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

மேலும் ஒரு குழந்தைக்கு அப்பா என்பவர் ஒரு ஹீரோ போல என்று சொல்வார்கள். அந்த வகையில் ஒரு அப்பா தன் குழந்தைக்கு இதை விட வேறு ஒன்றை கொடுத்தால் சிறப்பாக இருக்காது என்று தான் இந்த படத்தை தன் மகனுக்கு அளிக்கக்கூடிய சொத்தாக அவர் சொல்லி பேசி இருப்பது அனைவரும் மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது.

மேலும் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version