இந்த நடிகையை கட்டிப்பிடிக்க சூர்யா கூச்சப்பட்டார்.. ரகசியம் உடைத்த பிரபல இயக்குனர்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் நடிகர் விஜய் அஜித் இருவருக்கும் போட்டியாக இருந்த ஒரு நடிகர்தான் நடிகர் சூர்யா. உன்னை நினைத்து, பூவே உனக்காக போன்ற திரைப்படங்கள் வந்த காலகட்டங்களில் சூர்யா விஜய் அஜித் மூவரும் போட்டி நடிகர்களாகத்தான் இருந்து வந்தனர்.

ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு சூர்யா வழக்கமான சண்டைக் காட்சிகள் கொண்ட படங்களை தேர்ந்தெடுக்காமல் தொடர்ந்து வித்தியாசமான திரை கதைகளை தேர்ந்தெடுக்க துவங்கினார். அது அவருக்கு ஒரு விதத்தில் வீழ்ச்சியை பெற்றுக் கொடுத்தது.

ஒரு கமர்சியல் கதாநாயகனாக அவரால் வளர முடியாமல் போனது இருந்தாலும் சூர்யாவிற்கு இருக்கும் வரவேற்பு என்பது தமிழ் சினிமாவில் குறையவே இல்லை. பிதாமகன் திரைப்படத்தில் இருந்துதான் சூர்யா வித்தியாசமான திரைப்படங்களை தேர்ந்தெடுக்க துவங்கினார்.

வித்தியாசமான திரைப்படங்கள்:

ஆனால் இப்போது சூர்யாவை எடுத்துக் கொண்டால் அவர் நடிக்கும் திரைப்படங்களில் வித்தியாசமான கதைகளை கொண்ட திரைப்படங்களுக்குதான் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.  சமீபத்தில் அவர் நடித்த ஜெய் பீம் திரைப்படம் தமிழக அளவில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால் சண்டை படமாக அவர் நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. சொல்லப்போனால் அது பெரும் தோல்வியை கண்டது. அதனை தொடர்ந்து தற்சமயம் சூர்யா நடித்து வரும் திரைப்படம் கங்குவா.

திரைப்படம் ஹாலிவுட் திரைப்படம் போலவே அதிக செலவில் எடுக்கப்படும் திரைப்படமாக இது இருந்து வருகிறது. மேலும் சூர்யா ரசிகர்களுக்கு அதிக  எதிர்பார்ப்பை தூண்டும் ஒரு திரைப்படமாக இந்த படம் இருந்து வருகிறது.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்:

இதனை தொடர்ந்து மீண்டும் சூரரை போற்று திரைப்படத்தின் இயக்குனருடன் சேர்ந்து அடுத்த திரைப்படத்தில் நடிக்க வருகிறார் சூர்யா. சமீபத்தில் சீரியல் மூலமாக பிரபலமடைந்து காலமான நடிகரும் இயக்குனருமான மாரிமுத்து சூர்யா குறித்த சுவையான சில விஷயங்களை பகிர்ந்திருந்தார்.

அது குறித்து அவர் பேட்டியில் கூறும் பொழுது ”நேருக்கு நேர் திரைப்படத்தை வசந்த் இயக்கும்போது அதில் நான் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தேன். அப்பொழுது அந்த திரைப்படத்தில் சூர்யா நடிக்கும் பொழுது அவர் நிறைய தடுமாறினார்.

புதிதான ஒரு நடிகர் என்பதால் அவருக்கு நடிப்பதில் சிரமம் இருந்தது. முக்கியமாக ஒரு காட்சியில் சிம்ரனை கட்டிப்பிடிக்க சொன்னபோது அதற்கு மிகவும் கூச்சப்பட்டார் சூர்யா. அவரால் அந்த காட்சியில் நடிக்கவே முடியவில்லை தயங்கி தயங்கி நடித்தார் பிறகு ஒரு கட்டத்தில் எப்படி நடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு நடிக்க துவங்கினார் சூர்யா என்று கூறுகிறார் மாரிமுத்து.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version