இறக்கப் போவது குறித்து முன்னரே பேசியிருக்கும் மயில்சாமி..! உருக வைக்கும் வார்த்தைகள்..! ரசிகர்கள் அதிர்ச்சி..!

நடிகர் மயில்சாமி உடல் நலவு குறைவு காரணமாக நேற்று (பிப்.19) அதிகாலை தனது வீட்டில் உயிரிழந்தார். தான் உயிர் வாழ்ந்த நாட்களில் பல்வேறு திரைப்படங்களில் நடித்தது மட்டும் இல்லாமல் பிறருக்கு பலன் எதிர்பார்க்காமல் உதவிய குணத்தாலும் அனைவரையும் கவர்ந்தவர் மயில்சாமி.

மிமிக்ரி ஆர்டிஸ்டாகவும் இருந்த இவர் காமெடியில் மட்டுமில்லாமல் குணச்சித்திர நடிப்பிலும் கைதேர்ந்தவராகவே விழங்கினார். கடந்த 1984 ஆம் ஆண்டில் வெளியான தாவனி கனவுகள் என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகர் மயில்சாமி.

தொடர்ந்து ரஜினி, கமல், விஜய், சூர்யா, அஜித்,  தனுஷ், விக்ரம் என பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியவர் மயில்சாமி.

நடிகர்கள் வடிவேலு விவேக் உள்ளிட்டருடன் பல காமெடி காட்சிகளில் இணைந்து நடித்து கலக்கியிருக்கிறா. இவருடைய மறைவு ஒட்டுமொத்த திரையரங்கரை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

நேற்று அதிகாலை மாரடைப்பு காரணமாக மயில்சாமி உயிரிழந்திருக்கிறார். மகா சிவராத்திரி ஒட்டி கேளம்பாக்கத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோயிலில் இரவு முழுக்க வழிபாடு செய்து கொண்டிருந்த மயில்சாமி மூன்று மணி அளவில் வீட்டுக்கு திரும்பி இருக்கிறார்.

அதன் பிறகு நெஞ்சுவலி ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருக்கிறார்கள் அவருடைய குடும்பத்தினர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்த விட்டதாக மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர்.

இந்நிலையில் இவருடைய பழைய வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. அதில் பேசிய மயில்சாமி தன்னுடைய இறப்பு குறித்து பேசி இருக்கிறார். அவர் பேசிய ஒரு வார்த்தை ரசிகர்கள் அனைவரையும் கண்கலங்க செய்திருக்கிறது என்று தான் கூற வேண்டும்.

அவர் கூறியதாவது, நிறைய நாட்கள் உயிருடன் வாழ வேண்டும் ஆசை எனக்கு கிடையாது. ஆனால், உயிருடன் இருக்கும் வரை உதவி செய்து கொண்டே இருக்க வேண்டும் அதுதான் என்னுடைய ஆசை என்று பேசியிருக்கிறார். இவருடைய இந்த பேச்சு ரசிகர்களை கண்ணீரில் ஆழ்த்தி இருக்கிறது.

Summary in English : Actor Mayilsamy has inspired many with his words of wisdom and dedication to helping others. He has made it clear that he does not wish to live long, but instead wants to help as many people as possible until the day he dies. His commitment to serving the less fortunate is a testament to the kind of person he is and his strong sense of purpose.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …