தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போலவே வெகு காலங்களாக மலையாள சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் மோகன்லால்.
தமிழ்நாட்டில் எப்படி வசூல் வேட்டை செய்யும் நடிகர்கள் இருக்கிறார்களோ அதே போல மலையாளத்தில் வசூல் வேட்டை செய்யும் நடிகராக மோகன் லால் இருந்து வருகிறார். நடிகர் மம்முட்டியும் இவரும் போட்டி நடிகர்கள் என்றும் பேச்சுக்கள் உண்டு.
மோகன்லால் அறிமுகம்:
1980 இல் வெளியான மஞ்சிள் விரிஞ்ச பூக்கள் என்கிற திரைப்படம் மூலமாக மலையாள சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் மோகன்லால். அந்த வருடத்தில் அவர் நடிப்பில் அந்த ஒரு படம் மட்டும்தான் வந்தது. ஆனால் அடுத்தடுத்த வருடங்களில் எக்கச்சக்கமான மோகன்லால் திரைப்படங்கள் வெளியாகின.
தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் கூட பரிச்சயமான நடிகராக மோகன்லால் இருந்து வருகிறார். 1991 இல் வெளியான கோபுர வாசலிலே திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் மோகன்லால்.
mohanlalஅதற்கு பிறகு அவர் நடித்த இருவர் திரைப்படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையில் வெளியான இந்த திரைப்படம் அடிப்படையில் எம்.ஜி.ஆர் மற்றும் கருணாநிதியின் வாழ்க்கையை கொண்டுள்ளது என அப்போதே பேச்சுக்கள் இருந்தன.
தமிழ் சினிமாவில் மோகன்லால்
அதனை தொடர்ந்து அவர் நடித்த சிறைச்சாலை, உன்னை போல் ஒருவன், ஜில்லா, புலி முருகன் சமீபத்தில் வெளியான ஜெயிலர் வரை தமிழில் பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் மோகன்லால்.
இந்த நிலையில் மோகன்லால் மீது எழுந்த சர்ச்சைக்குரிய பிரச்சனைகள் காரணமாக முக்கியமான முடிவுகளை எடுத்துள்ளார் மோகன்லால். கடந்த 2021 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் நடந்த நடிகர் சங்க தேர்தலில் நடிகர் மோகன்லால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Mohanlalசர்ச்சையை கிளப்பிய பிரச்சனை:
நடிகர் சங்க செயலாளராக எடவேல பாபு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சிக்கிய நடிகர் திலீப் விவகாரத்தில் மோகன்லால் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனை அடுத்து இதற்கு திரைத்துறையை சேர்ந்தவர்களே கண்டனம் தெரிவித்து வந்தனர். தொடர்ந்து அவருக்கு எதிராக பலரும் பேசி வருவதால் நடிகர் சங்க பொறுப்பில் இருந்து விலகுவதற்கு முடிவு செய்துள்ளார் நடிகர் மோகன்லால்.
அதே போல 25 ஆண்டுகளாக நடிகர் சங்க பொறுப்பில் இருக்கும் எடவேல பாபுவும் கூட அவரது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.