மகள் வயசில் இருக்கும் ஸ்ருதிஹாசனை அடையை நினைத்த 64 வயதான முன்னணி நடிகர்..

வாரிசு நடிகையாக தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய அடையாளத்தை பெற்றிருப்பவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன்.

தனது அப்பா கமல்ஹாசன் என்ற மிகப்பெரிய அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்தாலும் தன்னுடைய திறமையால் இன்று மிகப்பெரிய உச்ச நட்சத்திரமாகவும் சிறந்த பாடகையாகவும் இருந்து வருகிறார்.

இவர் முதன் முதலில் நடிகையாவதற்கு முன்னர் பாடகியாக தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களுக்கு ஸ்ருதிஹாசன் பாடல் பாடி பின்னணி பாடகி ஆகவும் முன்னணி இடத்தை பிடித்தார்.

வாரிசு நடிகை ஸ்ருதி ஹாசன்:

சில பாடல்களை கேட்டால் இது ஸ்ருதிஹாசன் பாடினதா என வியக்கும் அளவுக்கு இருக்கும். அந்த அளவுக்கு ஸ்ருதிஹாசன் தனது திறமையை வெளிப்படுத்தி வந்தார்.

இதனிடையே அவரது அழகுக்கும் அவரது கவர்ச்சியான தோற்றத்திற்கும் திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

தன்னுடைய ஆறு வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக தேவர் மகன் திரைப்படத்தில் “போற்றி பாடடி பெண்ணே” பாடலை பாடி பாடகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து ஹேராம், என் மன வானில், வாரணம் ஆயிரம், உன்னை போல் ஒருவன் உள்ளிட்ட பல திரைப்படங்களில் மிகச்சிறந்த பாடல்களை பாடி இருக்கிறார்.

இதனிடையே சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்க 2011 ஆம் ஆண்டு சூர்யாவுடன் இணைந்து 7ம் அறிவு திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக தனது வாழ்க்கையை தடம் பதித்தார்.

தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கியது. முன்னதாக அவர் குழந்தை நட்சத்திரமாக ஹேராம் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

” 3 ” திரைப்படம் கொடுத்த அடையாளம்:

தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 திரைப்படத்தில் ஜனனி என்ற கேரக்டரில் நடித்த எல்லோரது கவனத்தையும் ஈர்த்தார்.

தன்னுடைய முதல் படமான 7ம் அறிவு திரைப்படத்தில் சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது மற்றும் சிறந்த நடிகைக்கான பிலம்பேர் விருதும் பெற்று கௌரவிக்கப்பட்டார்.

அதை அடுத்து அவரது இரண்டாவது படமான 3 திரைப்படத்திற்காக ஏசியாவின் சிறப்பான திரைப்பட விருது மற்றும் சிறந்த தமிழ் நடிகை சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது உள்ளிட்டவற்றை பெற்றிருக்கிறார்.

தொடர்ந்து அவருக்கு தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் வாய்ப்புகள் கிடைத்தது. தமிழில் அவர் பூஜை ,புலி, வேதாளம், சிங்கம் 3 உள்ளிட்ட விஜய் அஜித் சூர்யா என பல சூப்பர் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடிக்க ஆரம்பித்தார்.

தொடர்ந்து பாடகி ஆகவும் சிறந்த நடிகையாகவும் தமிழ் சினிமாவில் பெரும் புகழ்பெற்ற ஸ்ருதி ஹாசனுக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைக்க தொடங்கியதை எடுத்து தெலுங்கு சினிமா பக்கம் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார்.

அங்கு தொடர்ச்சியாக பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார். நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் பிரபல பத்திரிகையாளரான தமிழா தமிழா பாண்டியன் ஸ்ருதிஹாசன் குறித்த ஒரு ஷாக்கிங் தகவலை கூறியிருக்கிறார்.

மோசமாக நடந்துக்கொண்ட மோகன்லால்:

அதாவது, கேரள நிகழ்ச்சி ஒன்று நடந்த போது அதில் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் நடனம் ஆடிருந்தார்.

அவரை நடன அழகை பார்த்து திகைத்துப் போன பிரபல மலையாள நடிகர் ஆன மோகன்லால் தப்பான செய்கை ஒன்றை செய்திருப்பார்.

மகள் வயசு நடிகையுடன் இப்படியா நடந்து கொள்வது? அதுவும் உங்கள் வயசுக்கு இது தகுதியா என மோகன் லாலை கடுமையாக திட்டி தீர்த்து இருக்கிறார் தமிழா தமிழா பாண்டியன்.

இதையடுத்து இந்த விவகாரம் சூடு பிடித்திருக்கிறது. மேலும், இதைப்பற்றிய விவரங்களை நெட்டிசன்ஸ் தேடி சென்று ஆராய்ந்து பார்த்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version