நிறைமாத கர்ப்பிணியாக பிரபல நடிகரின் மகள்..! தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் சிறந்த கேரக்டர் பலரால் அறியப்படுபவர் நடிகர் எம்.எஸ் பாஸ்கர். தமிழ் சினிமாவில் வெகுகாலங்களாக வாய்ப்புகள் தேடி வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்து வந்தவர் ஆவார்.  ஒரு சிறந்த நடிகர் என்றாலும் கூட அவருக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தால் மட்டுமே தன்னுடைய நடிப்பை மக்கள் மத்தியில் காட்ட முடியும்.

அந்த வகையில் அப்படியான ஒரு வாய்ப்புக்காக காத்திருந்தார் எம் எஸ் பாஸ்கர். இந்த நிலையில் சீரியல்களில் அவருக்கு நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்து வந்தது. பாலச்சந்தர் சீரியல் இயக்கி வந்த காலம் முதலே எம்.எஸ். பாஸ்கர் சீரியல்களில் நடித்து வருகிறார்.

சீரியலில் வரவேற்பு:

அவர் நடித்த சீரியலில் காமெடி சீரியலான சின்ன பாப்பா பெரிய பாப்பா என்னும் சீரியலில் பட்டாபி என்கிற அவரது கதாபாத்திரம் அதிக வரவேற்பு பெற்றது. இப்பொழுதும் அவரை பலர் பட்டாபி பாஸ்கர் என்றுதான்  அழைக்கிறார்கள்.

அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரம் அவருக்கு ஒரு அடையாளத்தை பெற்று கொடுத்தது. திரைப்பட ரீதியாக பார்க்கும் பொழுது எங்கள் அண்ணா திரைப்படம்தான் இவருக்கு முக்கியமான திரைப்படம் ஆகும். ஓரிரு காட்சிகளில்தான் வருவார் என்றாலும் கூட அந்த திரைப்படம் அவருக்கு ஒரு அடையாளமாக அமைந்தது.

படங்களில் சிறப்பான நடிப்பு:

அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற தொடங்கினார் எம்.எஸ் பாஸ்கர். பிறகு நிறைய திரைப்படங்களில் தன்னுடைய தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தினார் எம்.எஸ் பாஸ்கர். முக்கியமாக எட்டு தோட்டாக்கள் திரைப்படத்தில் இவர் கதாநாயகனாக நடித்திருந்தார்.

அந்த திரைப்படத்தில் அவர் நடிப்பை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டு போனார்கள். பிறகு தானாகாரன் திரைப்படத்திலும் இவருக்கு முக்கியமான கதாபாத்திரம் கிடைத்திருந்தது. சமீபத்தில் பார்க்கிங் திரைப்படத்தில் கூட அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் எம்.எஸ் பாஸ்கர்.

எம் எஸ் பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யா அவரைப் போலவே டப்பிங் கலைஞராக இருந்து வருகிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு இவருக்கும் தொழிலதிபர் சுதாகர் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த நிலையில் தற்சமயம் ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தை அறிவித்த ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பதை போட்டோ சூட் எடுத்து இணையத்தில் பதிவேற்றி இருக்கிறார். அதனை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version