தமிழ் சினிமாவில் காமெடி திரைப்படங்களுக்கு பெயர் போனவர் இயக்குனர் சுந்தர் சி. அவர் இயக்கிய முதல் திரைப்படமான முறைமாமன் திரைப்படமே தமிழ் சினிமாவில் நல்ல காமெடி திரைப்படமாக அமைந்திருந்தது. அதனை தொடர்ந்து அவர் இயக்கிய மேட்டுக்குடி மாதிரியான நிறைய திரைப்படங்கள் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை பெற்றிருக்கின்றன.
இந்த காமெடி படங்களுக்கு நடுவே சில ஆக்ஷன் திரைப்படங்களையும் எடுத்திருக்கிறார் சுந்தர் சி. அருணாச்சலம் மாதிரியான சுந்தர் சி யின் திரைப்படங்கள் அவரது திரைப்படங்களில் இருந்து மாற்று திரைப்படங்களாக இருப்பதை பார்க்க முடியும்.
சுந்தர் சி படம்:
இந்த நிலையில் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பு பெற்ற மற்றொரு காமெடி திரைப்படம்தான் வின்னர். வின்னர் திரைப்படம் முக்கால்வாசிக்கு காமெடி திரைப்படமாக தான் இருக்கும். மீதமிருக்கும் கால்வாசிதான் படத்தில் கொஞ்சமாக சீரியஸ் காட்சிகள் இருக்கும்.
இந்த திரைப்படத்தில் கதாநாயகனின் தாத்தாவாக நடிகர் நம்பியார் நடித்திருப்பார். இந்த படத்திற்காக நம்பியாருக்கு சம்பளம் கொடுக்கும் பொழுது அவரது கடைசி தொகையான ஒன்றரை லட்சம் ரூபாயை கொடுக்க சென்ற பொழுது நடந்த நிகழ்வு குறித்து தயாரிப்பாளர் ஜி முருகன் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.
நாங்கள் அந்த சம்பளத்தை நம்பியாரிடம் கொடுக்க சென்ற பொழுது அவர் அதை வாங்கிக் கொள்ளவில்லை. ஏனெனில் நாளை நான் வெளியூருக்கு கிளம்புகிறேன். பிறகு நான் வருவதற்கு தாமதமாகும். என்னால் படத்திற்கு டப்பிங் பேச முடியாது. நான் ஒரு வேலை டப்பிங் பேசாமல் சென்றுவிட்டால் நம்பியார் சாமி காசு வாங்கிவிட்டு டப்பிங் பேசாமல் சென்று விட்டார் என பேசுவீர்கள் என்று மறுத்திருக்கிறார் நம்பியார்.
நம்பியாருடன் அனுபவம்:
ஆனால் இந்த படம் பல பிரச்சினைகளுக்கு நடுவே உருவாகி இருப்பதால் தயவுசெய்து நீங்கள்தான் வந்து பேசி தர வேண்டும் என்று கேட்டிருக்கிறார் தயாரிப்பாளர். அதற்கு பதில் அளித்த நம்பியார் நாளை நான் ஊருக்கு கிளம்பிவிடுவேன் இன்று நான்கு மணிக்கு எனக்கு கார் அனுப்புங்கள்.
ஆறு மணிக்குள் எனக்கு பேச வேண்டிய டப்பிங் வேலைகளை முடித்துவிட்டு மீண்டும் வீட்டில் கொண்டு வந்து விட்டு விடுங்கள். பிறகு நான் தூங்கி விடுவேன் என்று கூறி இருக்கிறார் நம்பியார்.
தயாரிப்பாளரும் அதற்கு ஒப்பு கொண்டிருக்கிறார். ஆனால் கார் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டு இருக்கிறது. நான்கு மணிக்கு பதிலாக 4.30 மணிக்குதான் கார் வந்து சேர்ந்திருக்கிறது. அப்பொழுது நம்பியார் வீட்டுக்கு வெளியே அமர்ந்து இருந்திருக்கிறார்.
அவர் பேசும்பொழுது இதற்குதான் அந்த காசை வாங்க மாட்டேன் என்று கூறினேன். வீட்டுக்குள் சென்று விட்டால் நான் தூங்கி விடுவேன் அதனால் உங்களுக்காக வெளியிலேயே நான் அமர்ந்து காத்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார் நம்பியார். அந்த அளவிற்கு பட விஷயங்களிலும் பண விஷயங்களிலும் கண்டிப்பான நபராக நம்பியார் இருந்திருக்கிறார்.