தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த நடிகர் நெப்போலியன் தன் மகனுக்காக சினிமா உலகத்தையும் அரசியல் வாழ்க்கையும் விட்டு விட்டு அமெரிக்காவில் ஐடி கம்பெனி நடத்தி வருகிறார்.
அமெரிக்காவில் ஐடி கம்பெனி நடத்துவதோடு மட்டுமல்லாமல் விவசாயம் செய்து வரக்கூடிய நிலையில் தன் மகன் தனுஷுக்கு திருநெல்வேலியில் பெண் பார்த்து நிச்சயதார்த்தம் முடிந்துஸவிட்ட நிலையில் விரைவில் திருமணம் நடக்க உள்ளது.
நெப்போலியன் மகனின் கல்யாண தேதி..
ஏற்கனவே உங்களுக்கு மிக நன்றாக தெரியும் நடிகன் நெப்போலியனின் முதல் மகன் தனுஷுக்கு தசை சிதைவு நோய் இருப்பதால் அவரால் எழுந்து நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதை அடுத்து இந்தியாவில் இருக்க விரும்பாமல் மகனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா சென்று செட்டில் ஆகிவிட்டார்.
பாரம்பரியமான இந்த நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் 10 வயதுக்கு மேல் நடக்க முடியாமல் போவதோடு மட்டுமல்லாமல் உயிரோடு இருப்பதே மிகப்பெரிய விஷயமாக கருதப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நடிகர் நெப்போலியன் மகன் 25 வயதை கடந்த நிலையில் அவருக்கு உகந்த மணப்பெண்ணாக அக்ஷயா என்பவரை விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதால் அதற்கு உரிய பிஸியான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
பொண்ணு திருநெல்வேலி தான்..
மேலும் பெண் தன் இனத்தைச் சேர்ந்தவர் என்பதோடு மட்டுமல்லாமல் திருநெல்வேலி என்பதால் இவர்களது திருமணம் தமிழகத்தில் நடக்காமல் ஜப்பானில் இருக்கும் தலைநகரான டோக்கியோவில் நடக்க இருப்பதாக செய்திகள் வெளி வந்துள்ளது.
இந்த செய்தியை உறுதி செய்திருக்கும் நெப்போலியன் எனது மகனின் திருமணம் டோக்கியோவில் நவம்பர் மாதத்தில் 7ஆம் தேதி நடக்கும் என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை சொல்லி இருப்பதோடு இதற்கான பத்திரிகையை முதலில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு அடித்திருக்கிறார்.
இதனை அடுத்து youtube பிரபலமான இப்ரானுக்கு பத்திரிக்கையை வைத்திருக்கக் கூடிய நெப்போலியன் பல பிரபலங்களுக்கும் பத்திரிகைகளை கொடுத்து வரக்கூடிய வேளையில் ஏன் டோக்கியோவில் இந்த திருமணத்தை நடத்த உள்ள விஷயத்தையும் பகிர்ந்தார்.
தமிழ்நாட்டில் நடக்காத காரணம்..
மேலும் தன் மகனின் உடல் சூழ்நிலையை கருதி டோக்கியோவில் திருமணத்தை வைத்திருப்பதாக நெப்போலியன் பகிர்ந்து தன் மகனுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்து இருக்கக்கூடிய அளப்பரிய பெருமை கொள்ளக் கூடிய வகையில் சாதித்த தந்தையாக இன்று உயர்ந்து விட்டார்.
அத்தோடு இவரது திருமணம் தமிழகத்தில் திகழ வேண்டும் என்றால் ஒரு சொகுசு கப்பலில் தான் பயணம் செய்ய முடியுமே ஒழிய விமானத்தில் பயணம் செய்வது முடியாத காரியம் என்று பிரபலம் ஒருவர் சொல்லியிருந்தார்.
மேலும் மகனின் உடல்நிலை கருதி தான் தமிழகத்தில் அவர்களது திருமணம் நடக்கவில்லை என்பது இதன் மூலம் தற்போது தெரிந்து கொண்டு இருக்கலாம்.
இந்த நிலையில் இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.