திருமணத்துக்கு சொகுசு கப்பலில் தனுஷ்…! மருமகளுக்கு கிலோ கணக்கில் தங்கம்.. பிரபல நடிகர் உடைத்த ரகசியம்…!

இயக்குனர் பாரதிராஜா மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான பல புது முகங்களில் நெப்போலியனும் ஒருவர். பெரும்பாலும் பாரதிராஜா மூலமாக அறிமுகமான ரேவதி, பாண்டியன் மாதிரியான பல நடிகர்கள் தமிழ் சினிமாவில் பிறகு பிரபலமானவர்களாக மாறி இருக்கின்றனர்.

அந்த வகையில் புது நெல்லு புது நாத்து திரைப்படத்தின் மூலமாக நெப்போலியன் அறிமுகமாகி அதற்குப் பிறகு தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை தொட்டார்.

அதே திரைப்படத்தில்தான் நடிகை சுகன்யாவும் புதுமுக நடிகையாக அறிமுகமானார். அதற்கு பிறகு நெப்போலியனுக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் வில்லானாக நடிப்பதற்குதான் அவருக்கு அதிகமாக வாய்ப்புகள் வந்தது.

வில்லனாக வாய்ப்பு:

அதனை தொடர்ந்து பெரும் நடிகர்களின் திரைப்படங்கள் பலவற்றில் தொடர்ந்து வில்லனாக நடித்து வந்தார் நெப்போலியன். நெப்போலியனின் உயரமான தோற்றம் அவருக்கு வில்லன் கதாபாத்திரத்திற்கு பொருந்தி போனது.

சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் நெப்போலியன் இந்த நிலையில் நெப்போலியனுக்கு இரண்டு மகன்கள் உண்டு. அதில் தனுஷ் என்கிற ஒரு மகனுக்கு உடல் நல குறைபாடு இருந்த காரணத்தினால் அவருக்காக அமெரிக்காவிலேயே சென்று செட்டில் ஆகிவிட்டார் நெப்போலியன்.

ஏனெனில் அமெரிக்காவில் மளிகை கடை முதல் தியேட்டர் வரை அனைத்திலும்  மாற்றுத்திறனாளிகளுக்கான அம்சங்களை செய்து வைத்திருப்பார்கள். அதனால் இந்தியாவை விட அமெரிக்கா தன்னுடைய மகன் வாழ்வதற்கு உகந்த இடமாக இருக்கும் என்று நினைத்தார் நெப்போலியன்.

அமெரிக்காவில் செட்டில்:

அதனை தொடர்ந்து அங்கே செட்டில் ஆகிவிட்டார். ஆனால் தற்சமயம் தனது மகனுக்கு தமிழ்நாட்டில் உள்ள பெண்ணைதான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இந்த நிலையில் திருநெல்வேலியில் உள்ள ஒரு பெண்ணைதான் தனது மகனுக்கு பெண் பார்த்து இருக்கிறார் நெப்போலியன்.

நெப்போலியன் மகனால் விமானத்தில் பயணம் செய்ய முடியாது அதனால் ஆன்லைன் வீடியோ கால் மூலமாகவே அவர்களுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது. இந்த நிலையில் இவர்கள் திருமணம் எப்படி நடக்கப்போகிறது என்பதுதான் பேச்சாக இருக்கிறது.

இது பற்றி பயில்வான் ரங்கநாதன் கூறும்பொழுது சொகுசு கப்பலில் ஏற்கனவே டிக்கெட் புக் செய்துவிட்டார் நெப்போலியன். அதில் பயணம் செய்து வந்து திருமணத்தை நடத்துவார் என்று கூறுகிறார். மேலும் தன்னுடைய மருமகளுக்கு எக்கச்சக்கமாக தங்கத்தை வழங்கி இருக்கிறார் நெப்போலியன் என்றும் கூறப்படுகிறது.

ஏனெனில் அமெரிக்காவில் ஜீவன் டெக்னாலஜிஸ் என்கிற ஐடி நிறுவனத்தை நடத்தி வருகிறார் நெப்போலியன் என்பதால் அதிக பணம் உள்ள நபராக இருக்கிறார் நெப்போலியன். எனவே மருமகளுக்கு எக்கச்சக்கமாக செலவு செய்திருக்கிறார் நெப்போலியன் இந்த விஷயம் தான் தற்சமயம் பேசு பொருளாக பேசப்பட்டு வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version