அது என் மகனுக்காக இல்ல.. ராமசாமி கேட்ட கேள்வி.. ஸ்டாலின் வந்தாரு..ரகசியம் உடைத்த நெப்போலியன்..!

நடிகர் நெப்போலியன் ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் பிரபலமாக இருந்தவராவார். தமிழில் நிறைய திரைப்படங்களில் வில்லனாகவும் மற்ற கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கிறார் நெப்போலியன்.

அதேபோல அரசியலிலும் பெரும் பதவிகளில் எல்லாம் இருந்திருக்கிறார் நெப்போலியன். ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தற்சமயம் அவர் அமெரிக்காவில் செட்டிலாகி உள்ளார். அமெரிக்காவில் ஒரு ஐடி நிறுவனத்தை நடத்தி வருகிறார் நெப்போலியன்.

மேலும் இயற்கை விவசாயமும் செய்து வருகிறார். விவசாயத்திற்கு என்று அதிகமான நிலங்களை வாங்கி வைத்திருக்கிறார்.  சமீபத்தில் அவருடைய மகன் தனுஷிற்கு நிச்சயதார்த்தமானது. திருநெல்வேலியில் உள்ள ஒரு பெண்ணுடன்தான் அவருக்கு நிச்சயதார்த்தமானது.

மகனுக்கு நிச்சயதார்த்தம்:

அந்த நிச்சயதார்த்தம் கூட ஆன்லைனில் வீடியோ கால் மூலமாகவே நடந்தது வெகு சீக்கிரத்தில் அவருக்கு திருமணமும் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருநெல்வேலியில் மயோபதி ஹாஸ்பிடல் ஒன்றை கட்டியிருந்தார் நெப்போலியன்.

இந்த ஹாஸ்பிடல் மிக காலங்கள் முன்பே கட்டப்பட்ட ஒரு மருத்துவமனை ஆகும். இதை அவருடைய மகனுக்காகதான் அவர் கட்டியிருக்கிறார் என்று ஒரு பக்கம் பேச்சு இருக்க, இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியிருந்தார் நெப்போலியன்.

அதில் அவர் கூறும் பொழுது எனக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.  மூத்த மகன் தனுஷிற்கு நான்கு வயது இருக்கும் பொழுது இரண்டாவது மகனான குணால் பிறந்தான். மூத்த மகனின் நடையில் நான்கு வயதிலேயே வித்தியாசம் தெரிந்தது.

அப்பொழுது மருத்துவமனைக்கு சென்று சோதித்த பொழுது அவனுக்கு தசை சிதைவு நோய் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். மேலும் இந்த நோய்க்கு எந்த மருந்தும் கிடையாது. இதை சரி செய்ய முடியாது என்று கூறிவிட்டார்கள்.

மகனுக்கு வந்த நோய்:

அப்பொழுது அதை நான் நம்பவில்லை ஆனால் பத்து வயதுக்கு பிறகு என்னுடைய மகனால் நடக்க முடியாமல் போனது. அதற்கு பிறகுதான் எனக்கு இது குறித்து பயம் வந்தது.

அப்பொழுது நான் மத்திய மந்திரியாக இருந்ததால் பல நாடுகளுக்கு சென்று இதற்காக அவனுக்கு மருத்துவம் பார்த்தேன். ஆனால் எல்லா நாடுகளிலும் இதற்கு மருந்து கிடையாது என்றுதான் கூறினார்கள். அந்த நேரத்தில்தான் திருநெல்வேலியில் பாரம்பரிய முறையில் மயோபதி சிகிச்சை என்கிற முறையில் சிகிச்சை பார்த்து வருவதாக தெரிந்தது.

அங்கு சரி செய்ய முடியும் என்று சிலர் கூறியதை அறிந்து அங்கு சென்றேன் அங்கு ராமசாமி என்பவர்தான் மருத்துவம் பார்த்து வந்தார். அங்கு இட வசதி குறைவாக இருந்ததால் ராமசாமியை எனது வீட்டிற்கு அழைத்து வந்து மகனுக்கு மருத்துவம் பார்த்தேன்.

ஆனால் இந்த விஷயம் வெளியில் அதிகமாக பரவியதால் என் மகனைப் போலவே பாதிக்கப்பட்ட நிறைய நோயாளிகளை எனது வீட்டிற்கு அழைத்து வந்தனர். இதனால் எனது வீட்டிலும் இடம் பற்றாமல் போனது இது குறித்து நான் ராமசாமியிடம் கேட்டபொழுது ஒரு மருத்துவமனை மட்டும் கட்டிக் கொடுங்கள் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

அதற்காகத்தான் இந்த மருத்துவமனையை கட்டிக் கொடுத்தேன். இப்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் தான் அப்போது அந்த மருத்துவமனையை திறந்து வைத்தார். என் மகனுக்காக இந்த மருத்துவமனை கட்டப்படவில்லை என் மகன் போல் மற்ற குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த மருத்துவமனையை கட்டினேன் என்று கூறியிருக்கிறார் நெப்போலியன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version