சினேகாவுக்கு அந்த வருத்தமே இல்ல.. இதை வச்சி திருப்தியா இருப்பாங்க.. சினேகா குறித்து ரகசியம் உடைத்த பிரசன்னா..!

தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்டாமல் கூட பெரிய உச்சத்தை தொட முடியும் என்று நிரூபித்த நடிகைகளின் முக்கியமானவர் நடிகை சினேகா. புன்னகைக்கரசி என்னும் பட்டப் பெயருக்கு பொருத்தமானவராவார். அவரது புன்னகை மூலமாகவே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகமான வரவேற்பு பெற்றவர் சினேகா.

எதார்த்தமாகதான் தமிழ் சினிமாவில் வாய்ப்பை பெற்றார் சினேகா. சினிமாவில் வந்து பெரிய நடிகையாக வேண்டும் என்பதெல்லாம் அவருக்கு ஆசையாக இருந்ததே கிடையாது. கேரளாவில் ஒரு முறை நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் ஒரு பார்ட்டியில் தெரியாமல் போய் கலந்து கொண்டார் சினேகா.

அந்த வருத்தமே இல்ல..

அங்கே இருந்த ஒரு இயக்குனர் அவரை பார்த்து உங்கள் முகம் நடிகைக்கு ஏற்ற முகம் என்று கூறி மலையாளத்தில் ஒரு திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார். ஆனால் அதற்குப் பிறகு மலையாளத்தை விடவும் தமிழில்தான் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.

Un Samayal Arayil Press Meet with Prakash Raj, Sneha and Ilaiyaraaja

இரண்டாவது படமே தமிழில் நடித்த சினேகா என்னவளே என்னும் திரைப்படத்தில் நடித்தார். அதற்கு பிறகு இவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. 2001 இல் இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான ஆனந்தம் திரைப்படம் சினேகாவிற்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது.

அந்த திரைப்படத்தை தொட்டு அவருக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தன. 2002 ஆம் ஆண்டு சினேகாவிற்கு முக்கியமான வருடமாக இருந்தது.

சினேகா குறித்து ரகசியம்..

அந்த வருடத்தில் வெளியான புன்னகை தேசம், உன்னை நினைத்து, கிங் மாதிரியான எல்லா திரைப்படமும் சினேகாவிற்கு பெரிய வரவேற்பை பெற்று கொடுத்தது. மேலும் இரண்டு விருதுகளையும் அந்த வருடத்தில் சினேகா வாங்கினார்.

பிறகு அவருக்கும் தொழிலதிபருக்கும் இடையே காதல் இருந்து வருவதாக பேச்சுக்கள் இருந்து வந்தன. அதற்கு பிறகு நடிகை சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு குறைவான படங்களிலேயே சினேகா நடித்து வருகிறார்.

இதை வச்சி திருப்தியா இருப்பாங்க..

இந்த நிலையில் சினேகா குறித்து பிரசன்னா சில விஷயங்களை பேசி இருந்தார். அதில் பிரசன்னா கூறும் பொழுது சினேகா எப்பொழுதுமே எடுத்த முடிவுகளுக்காக கவலைப்பட மாட்டார். எந்த ஒரு விஷயத்திற்கும் அவர் தீர்க்கமான முடிவை எடுப்பார்.

ஆனால் அந்த முடிவை எடுத்த பிறகு ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தோம் என்று அவர் யோசித்ததே கிடையாது. நான் கூட என்ன இவ்வளவு பெரிய படத்தின் வாய்ப்பை விட்டு இருக்கிறாரே என்று கவலைப்பட்டிருக்கிறேன் ஆனால் அவருடைய முடிவுகளுக்காக சினேகா என்றுமே கவலைப்பட்டது கிடையாது என்று கூறியிருக்கிறார் நடிகர் பிரசன்னா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version