தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் பிரபலமான நட்சத்திர நடிகராக இருந்து வந்தவர் தான் பிரசாந்த். இவரின் தந்தை தியாகராஜன் மிகப் பிரபலமான திரைப்பட இயக்குனர்.
தந்தையின் அடையாளத்தின் மூலம் பிரஷாந்துக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடம் கிடைத்தது. ஆனால் அவர் தனது திறமையின் மூலமாக மட்டுமே வாய்ப்புகளை தக்க வைத்துக் கொண்டார் .
நடிகர் பிரசாந்த்:
பிரசாந்த் முதன் முதலில் “வைகாசி பொறந்தாச்சு” திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகி இருந்தார். அதை அடுத்து செம்பருத்தி, ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
மேலும், ஜோடி, காதல் கவிதை ,மஜுலு ,வின்னர், திருடா திருடி இப்படி பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்த மிகக்குறுகிய காலத்திலேயே நட்சத்திர நடிகர் என்று அந்தஸ்தை பிடித்தார்.
இவரது திரைப்படங்கள் தொடர்ச்சியாக மாபெரும் வெற்றி பெற்ற படங்களாக பார்க்கப்பட்டதோடு அதிக வசூலிட்டி வணிக ரீதியாகவும் சாதனை பெற்ற படங்களாக பார்க்கப்பட்டது.
இதனால் பிரசாந்த் தமிழ் சினிமாவில் ஓஹோன்னு கொடிகட்டி பறந்த நடிகராக 90ஸ் காலகட்டத்தில் வலம் வந்து கொண்டிருந்தார்.
இவரை வைத்து திரைப்படம் இயக்கினாலே அந்த திரைப்படம் மிகப்பெரிய லாபத்தை கொடுக்கும் என தயாரிப்பாளர்கள் பிரசாந்தின் படத்தை தயாரிக்க முந்தியடித்துக் கொண்டு முன் வந்தனர்.
இதனால் பிரசாந்த் இயக்குனர் சங்கர் உள்ளிட்ட பெரிய இயக்குனர்களின் படங்களை பெரிய பட்ஜெட் கொண்ட படங்களில் நடித்து பெரும் புகழ்பெற்று வந்தார்.
வாழ்க்கையே அழித்த திருமணம்:
சினிமாவில் பீக்கில் இருந்த சமயத்தில் உச்ச நடிகராக இருந்து வந்த போது அவருக்கு மிகப்பெரிய அளவில் இடி ஒன்று விழுந்தது. அது அவரது வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது.
ஆம், அவரது ஒட்டுமொத்த சினிமா வாழ்க்கையும் ஊற்றி மூடிவிட்டது. நடிகர் பிரஷாந்த் கடந்த 2005 ஆம் ஆண்டு கிரகலட்சுமி என்ற பெண்ணை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் .
ஆனால், இந்த திருமண வாழ்க்கை அவருக்கு சரியாக அமையவில்லை. திருமணம் தான் அவரது சினிமா வாழ்க்கையை மொத்தமாக அழித்துவிட்டது.
பிரசாந்த் திருமணம் செய்து கொண்ட கிரகலட்சுமி என்ற அந்த பெண் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர் என்ற விஷயம் தெரியாமலே அதை மறைத்து பிரசாந்தை திருமணம் செய்து கொண்டார் .
இது பிரசாந்துக்கு திருமணத்திற்கு பிறகு தான் தெரியவந்தது. இதனால் பிரசாந்த் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட கிரகலட்சுமியை பிரிந்து விடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்.
மனைவியின் சதி:
ஆனால், கிரகலட்சுமி பிரசாத்திற்கு இருந்த நட்சத்திர அந்தஸ்தையும் அவருடைய கோட்டீஸ்வர வாழ்க்கையும் பார்த்து மிதம்மிஞ்சு போய் அவரை விட்டுப் போக மாட்டேன் என விடாப்பிடியாக கோர்ட்டு கேஸ் என பிரசாந்தை இழுத்தடித்தார் .
இந்த சமயத்தில் பிரசாத்துக்கு திரைப்படங்களில் கவனம் செலுத்த முடியாமல் கோர்ட்டு கேஸ் என விவாகரத்தை தேடி அலைந்து கொண்டிருந்ததால் அவரது மார்க்கெட் பாதாளத்தில் போய் விழுந்து விட்டது.
பிரசாத்துக்கு அதிலிருந்து மீண்டு வர முடியாமல் மார்க்கெட் இழந்து பின்னர் அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார்.
இப்படியான நேரத்தில் பல வருடங்கள் கழித்து தளபதி விஜய்யுடன் சேர்ந்து தற்போது கோட் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்த வருகிறார் .
இந்த நிலையில் இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தை பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய
பிரசாந்தின் கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அதாவது, நடிகர் பிரசாந்த் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது விஜய்யுடன் கோட் திரைப்படத்தில் நடிப்பதற்கு உங்களுக்கு எப்படி இருக்கிறது என்ற கேள்வியை எழுப்பினார் தொகுப்பாளர்.
விஜய்யுடன் மோதல்:
இந்த கேள்வியை கேட்டு எந்த ஒரு பெரிய முகபாவனையையும் வெளிப்படுத்தாமல் நான் விஜய்யுடன் நடிக்கவில்லை இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கிறோம் என்று கூறியிருக்கிறார் .
இவருடைய இந்த பேச்சை தெனாவட்டு பேச்சு என்று பலரும் கூறுகிறார்கள். ஆனால் , நடிகர் பிரஷாந்தின் மார்க்கெட் என்ன என்று 90ஸ் கிட்ஸ்களுக்கு மட்டுமே தெரியும்.
தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சில சறுக்கல் காரணமாக கதைகளில் முழுமையான ஈடுபாடு கொடுக்க முடியாமல் பல்வேறு தோல்வி படங்களை கொடுத்து தற்போது இந்த சிக்கலில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்து கொண்டிருக்கிறார் நடிகர் பிரசாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.