இரண்டாம் திருமணத்திற்கு ரெடியான டாப் ஸ்டார் பிரசாந்த்.. மணப்பெண் யார் தெரியுமா..? விரைவில் டும் டும் டும்…

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சாக்லேட் பாய் என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர் நடிகர் பிரசாந்த். பிரசாந்த் சினிமாவிற்கு வந்தபோது இளம் நடிகர்களுக்கான வாய்ப்பு என்பது அவருக்கு அதிகமாக இருந்தது.

அப்போது பிரபல நடிகராக இருந்த அப்பாஸை ஓரங்கட்டி தனக்கான ஒரு இடத்தை பிடித்தவர் நடிகர் பிரசாந்த். அவர் அப்போது நடித்த திரைப்படங்களில் ஜோடி, ஜீன்ஸ் மாதிரியான திரைப்படங்கள் முக்கியமான திரைப்படங்களாகும்.

அந்தகன் பட வாய்ப்பு:

இந்த நிலையில் சமீபத்தில் அவர் அந்தகன் என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படம் வருகிற 9-ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதில் சிம்ரன், பிரியா ஆனந்த் போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருக்கின்றனர்.

இந்த திரைப்படம் வெகு வருடமாக படமாக்கப்பட்டு வந்தது. ஏற்கனவே ஹிந்தியில் வந்த ஒரு திரைப்படத்தின் ரீமேக்தான் இந்த திரைப்படம் . இந்த படத்தை பெரிதும் நம்பி இருக்கிறார் நடிகர் பிரசாந்த். அதே மாதிரி விஜய் நடித்துக் கொண்டிருக்கும் கோட் திரைப்படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் பிரசாந்த் நடித்திருக்கிறார்.

எனவே இந்த இரண்டு திரைப்படங்களும் இவருக்கு முக்கியமான படங்களாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் ஒரு காலத்தில் பெரிய நடிகராக பிரசாந்த் இருந்தாலும் கூட அதற்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் என்பது குறைய தொடங்கியது.

அவருக்கு திருமண வாழ்க்கை அவ்வளவு நன்றாக அமையவில்லை என்று கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து பிரசாந்த் சினிமாவில் இருந்து சில காலங்கள் விலகி இருந்தார். இந்த நிலையில் தற்சமயம் இவர் நடித்திருக்கும் கோட் மற்றும் அந்தகன் ஆகிய இரண்டு திரைப்படங்களுமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாம் திருமணம்:

பொதுவாகவே நடிகர் பிரசாந்த் எந்த ஒரு கதாபாத்திரத்தில் நடித்தாலும் அதை சிறப்பாக நடிக்க கூடியவர். அதனால்தான் சினிமாவில் வரிசையாக ஹிட் கொடுத்துக் கொண்டிருந்தார் நடிகர் பிரசாந்த். இந்த நிலையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சனை காரணமாகதான் சினிமாவை விட்டு அவர் விலகி இருந்தார் என்பதால் அதை அவர் சரி செய்ய உள்ளார் என கூறப்படுகிறது.

பிரசாந்த் சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக பேச்சுக்கள் எழுந்து வருகின்றன. முதல் திருமணம் தோல்வியடைந்ததால் வெகு காலங்களாக திருமணத்தின் மீது ஆசை இல்லாமல் இருந்து வந்த இவர் தற்சமயம் அதற்கு ஒப்பு கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒரு பேட்டியில் அவரிடம் இது குறித்து கேட்ட பொழுது திருமணம் என்பது நிச்சயம் ஒருநாள் நடக்கும். நான் ஓகே சொல்லிவிட்டு ரெடியாகத்தான் இருக்கிறேன். ஆனால் என்னை புரிந்து கொள்ளும் பெண் கிடைத்தால் போதும் என்று கூறியிருக்கிறார் நடிகர் பிரசாந்த்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version