அஜித் பிழைப்பில் மண் அள்ளிப்போட்ட நடிகர் பிரஷாந்த்..! உண்மையை உடைத்த பிரபலம்..!

பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கடந்த 1998 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் ஜீன்ஸ் .

இந்த திரைப்படத்தில் பிரசாந்த் ஐஸ்வர்யா ராய் இருவரும் ஜோடியாக நடித்திருந்தார்கள். இவர்களுடன் நாசர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் .

ஜீன்ஸ் திரைப்படம்:

மேலும் ராஜூ சுந்தரம் லட்சுமி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக பெரும் வசூல் ஈட்டி சாதனை படைத்தது.

அப்போதே அந்த திரைப்படம் ரூ. 19 கோடி பொருட்செலவில் உருவாகி இருந்தது. இந்த படம் இன்று வரை ரசிகர்களின் பேவரைட் திரைப்படமாக பார்க்கப்பட்டது.

குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு பாடல்களும் எவர்கிரீன் பாடலாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறது .

ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பில் உருவாகிய இந்த திரைப்படத்தில் இசை மிகப்பெரிய பலம் சேர்த்து. பிரசாந்த் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார்.

விசு , ராமு என்ற கேரக்டரில் பிரசாந்த் நடித்து அசத்தியிருந்தார். இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் முதன்முதலில் நடிக்க இருந்து பிரசாந்த் கிடையாது அஜித் தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்திற்கு கதை எழுதிய ஷங்கர்:

இது குறித்த பிரபல பத்திரிக்கையாளர் ஆன வெங்கடேஷ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
அதாவது, ஜீன்ஸ் கதை உருவாகும்போது நான் சங்கர் சார் கூட இருந்தேன்.

 

அந்த கதையை அவர் அஜித் சாருக்காக தான் எழுதினார். இதை தெரிஞ்சுக்கிட்ட பிரசாந்தின் அப்பாவான தியாகராஜன் சார் என்ன அழைச்சிட்டு வந்து சங்கர் எழுதும் அந்த படத்துல பிரசாந்த் நடிக்க வைக்க சொல்லி சங்கர் சாரிடம் சொல்ல சொன்னார்.

நானும் சங்கர் சாரிடம் இந்த விஷயத்தை சொன்னப்போ இல்ல இல்ல இந்த கதை முழுக்க முழுக்க நான் அஜித்துக்காகவே தயார் பண்ணி இருக்கேன்.

ஷங்கரின் மனச மாற்றிய தியாகராஜன்:

அவர்தான் சரியா இருப்பார் என்று சொல்லி பிரசாந்துக்கு நோ சொல்லிட்டாரு. ஆனால் அதன்பின் பிரசாந்தின் தந்தை பிரஷாந்திற்கு சம்பளமே வேண்டாம்.

அது.. இது என்று பேசி அவருடைய மனசை மாத்திட்டாரு. கடைசி வரைக்கும் ஜீன்ஸ் கதையை அஜித் சார் கிட்ட சொல்லவும் விடல… சொல்லி இருந்தால் ஜீன்ஸ் படம் நிச்சயமா அஜித்தின் படமாக தான் இருந்திருக்கும் என்று பத்திரிகையாளர் வெங்கடேஷ் தெரிவித்திருந்தார்.

அஜித் பிழைப்பில் மண் அள்ளிப்போட்ட பிரசாந்த்:

ஒருவேளை அந்த படத்தில் மட்டும் அஜித் நடித்திருந்தால் நிச்சயம் ஜீன்ஸ் திரைப்படம் அஜித்தின் கெரியரில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்திருக்கும்.

இதனால் அஜித்தின் பிழைப்பில் மண் அள்ளி போட்டதே நடிகர் பிரஷாந்த் என்ற உண்மை வெட்ட வெளிச்சமாக இருக்கிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version