ரகுவரனுக்கு நோ சொல்லிட்டு.. விவாகரத்தான நடிகருக்கு கழுத்தை நீட்டிய அமலா..! காரணம் இது தான்..!

1980களில் பிரபலமாக இருந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை அமலா. மைதிலி என்னை காதலி என்கிற திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்புகள் கிடைத்தன.

அதனை தொடர்ந்து அவர் நடித்த திரைப்படம் மெல்ல திறந்தது கதவு. இந்த திரைப்படத்தில் நூர்ஜகான் என்கிற மிக முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடித்திருப்பார். அது அவருக்கு நல்ல வரவேற்பு கொடுத்தது. அதனை தொடர்ந்து 1986 இல் மட்டுமே அவரது நடிப்பில் ஆறு திரைப்படங்கள் வெளியாகின.

ரஜினியுடன் வாய்ப்பு:

1987 களில் எல்லாம் ரஜினியுடன் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார் தமிழ் சினிமாவில் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என்று இந்தியா முழுவதும் பல மொழிகளில் தொடர்ந்து நடித்திருக்கிறார் அமலா.

தமிழில் அமலா நடித்துக் கொண்டிருந்த பொழுது தமிழ் நடிகர்கள் சிலருக்குமே அமலாவின் மீது அபிப்பிராயம் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் அமலாவை திருமணம் செய்ய நினைத்ததாக பேச்சுக்கள் உண்டு. அப்படி அமலாவின் மீது ஆசை கொண்ட நடிகர்களில் நடிகர் ரகுவரன் முக்கியமானவர்.

ரகுவரன் காதல்:

1987 ஆம் ஆண்டு அமலா மற்றும் ரகுவரன் இருவரும் இணைந்து நடித்த கூட்டுப் புழுக்கள் என்ற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தின் படபிடிப்பு துவங்கிய நாள் முதலே அமலா மீது ரகுவரனுக்கு ஈடுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு முடிவதற்குள்ளாகவே அவர் அமலாவின் மீது காதல் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த காதலை அமலா விடமும் தெரிவித்திருக்கிறார் ஆனால் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையைதான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறிய அமலா அவரது காதலை மறுத்துவிட்டாராம்.

அமலா திருமணம்:

இதனால் அப்பொழுது ரகுவரன் மிகுந்த மனவேதனைக்கு உள்ளாகி இருக்கிறார். அதற்கு பிறகு 1992 ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகரான நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்டார் அமலா.

நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்ட பிறகு சினிமாவை விட்டு அவர் விலகிவிட்டார். அதன் பிறகு 30 ஆண்டுகள் கழித்து கணம் என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு ரீ ஏற்றி கொடுத்திருக்கிறார். அமலாவை திருமணம் செய்வதற்கு முன்பு நாகார்ஜுனா லட்சுமி என்னும் ஒரு பெண்ணை திருமணம் செய்து இருந்தார்.

ஆனால் அவருக்கும் லெட்சுமிக்கும் இருந்த கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர் அதற்கு பிறகுதான் அவர் நடிகை அமலாவை திருமணம் செய்து இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version