1950 இல் தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு கலக்கியவர்தான் நடிகை சாவித்திரி. பாதாள பைரவி என்கிற திரைப்படம் மூலமாக தமிழ் தெலுங்கு என்று இரண்டு துறையிலும் அறிமுகமானார் சாவித்திரி.
ஆனால் அந்த திரைப்படத்தில் அவர் கதாநாயகியாக நடிக்கவில்லை நடனமாடும் பெண்ணாகவே நடித்திருந்தார். அதற்கு பிறகு தெலுங்கில் சில திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
தமிழில் கல்யாணம் பண்ணி பார் என்கிற திரைப்படத்தில் சாவித்திரி முக்கிய கதாபாத்திரமாக நடித்திருந்தார். அதற்கு பிறகு தெலுங்கிலும் தமிழிலும் அவருக்கு எக்கச்சக்கமான திரைப்பட வாய்ப்புகள் வந்தன.
சினிமாவில் வரவேற்பு:
கிட்டதட்ட 1952 இல் மட்டுமே எட்டுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்தார் சாவித்திரி ஆனால் அவர் அறிமுகமானதே 1951 இல்தான். இப்படி வரிசையாக திரைப்படங்களில் நடித்து வந்த சாவித்திரி நிஜமாக காதலித்த ஒரு நபர் என்றால் அது நடிகர் ஜெமினி கணேசன் அவர்கள் தான்.
தமிழ் சினிமாவில் நடித்து வந்த காலகட்டங்களில் அப்பொழுது காதல் மன்னனாக தமிழ் சினிமாவில் திகழ்ந்து வந்தவர் ஜெமினி கணேசன். இந்த நிலையில் ஜெமினி கணேசன் சாவித்திரி இடையே காதல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஜெமினி கணேசன் சாவித்திரியை திருமணமும் செய்து கொண்டார்.
சாவித்திரியை பொறுத்தவரை அவருக்கு குடும்ப பின்னணி என்று பெரிதாக ஒன்றும் கிடையாது. தனது தந்தையோடுதான் அவர் வாய்ப்பு தேடி சினிமாவிற்கு வந்தார். இந்த நிலையில் அவர் ஜெமினி கணேசனுடன் வாழ்ந்து வருவதை கேள்வி கேட்க கூட யாரும் இல்லாத நிலை இருந்து வந்தது.
ஜெமினி கணேசனுடன் காதல்:
அதற்கு பிறகு ஜெமினி கணேசனுடன் எழுந்து வந்த கருத்து வேறுபாட்டின் காரணமாக நடிகை சாவித்திரியின் வாழ்க்கை பெரிதாக திசை மாறி போனது. அவரது கடைசி கால வாழ்க்கை மிகவும் மோசமாக இருந்தது என்று பலருக்கும் தெரியும்.
இந்த நிலையில் அவரை நேரில் சென்று பார்த்த அனுபவம் குறித்து பிரபல தமிழ் நடிகரான ராஜேஷ் ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறா.ர் அதில் அவர் கூறும்பொழுது பாக்கியராஜ் இயக்கத்தில் அந்த ஏழு நாட்கள் என்கிற திரைப்படத்தில் நான் நடித்துக் கொண்டிருந்தேன்.
அப்பொழுது படப்பிடிப்பு நடந்த இடத்திற்கு பக்கத்தில்தான் சாவித்திரி அம்மாவுடைய வீடு இருந்தது. சரி அவரை போய் நேரில் சென்று பார்க்கலாம் என்று நான் நினைத்தேன். உடனே நான் சென்றவுடன் அங்கிருந்த வேலைக்காரி என்னை பற்றி விசாரித்துவிட்டு ஜெமினி சாருக்கு போன் செய்து அது குறித்து பேசினார்.
பிறகு ஜெமினி சார் உள்ளே செல்ல அனுமதி கொடுத்த பிறகுதான் அவர்கள் என்னை உள்ளே விட்டார்கள். சாவித்திரியின் 13 வயது மகன் அங்கே இருந்தார். என்னை சோகமாகதான் அவர் பார்த்தார். உள்ளே சென்று நான் சாவித்திரி அம்மாவை பார்த்தேன்.
அதிர்ச்சியடைந்த நடிகர்:
என்னுடைய வாழ்நாளில் அப்படி ஒரு அதிர்ச்சியான சம்பவம் அதற்கு பிறகு நடந்ததே இல்லை. அதை என்னால் வார்த்தைகளால் சொல்லவும் முடியாது கோடி ரூபாய் பணம் கொடுத்து சாவித்திரி அம்மாவை கண்டுபிடிக்க சொன்னால் கூட அவர்தான் சாவித்திரி அம்மா என்று யாரும் கூற முடியாது அந்த அளவிற்கு உடல்நிலை மோசமாகி அங்கு படுத்திருந்தார் சாவித்திரி அம்மா.
அப்பதான் எனக்கு இவர் ஜெமினியை காதலித்து இருக்கவே கூடாது என்று தோன்றியது. வாழ்நாளில் பல தர்மங்கள் செய்தவர் சாவித்திரி தன்னுடைய டிரைவருக்கு கார் சாவியை கொடுத்து காருக்கான ஆவணங்களையும் கொடுத்து இதை வைத்து பிழைத்துக் கொள் என்று கூறியவர். அவருக்கு இப்படியான ஒரு நிலைமை ஏற்பட்டது என்று நினைக்கும் பொழுது தானாகவே கண்கள் கலங்கிவிடும் என்று கூறுகிறார் ராஜேஷ்