பலமுறை சூப்பர் ஸ்டார் ஆசைப்பட்டும் கை கூடாத நடிகை… அந்த மகள் வயது நடிகை யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் எல்லா காலங்களிலுமே சூப்பர் ஸ்டாராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். 70 வயதை தாண்டிய பிறகும் கூட இன்னமும் கதாநாயகனாக நடித்து மக்கள் மத்தியில் நிரந்தரமான ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் ரஜினிகாந்த்.

இந்த நிலையில் ரஜினிகாந்தே ஒரு நடிகைக்காக காத்திருந்த சம்பவம் தமிழ் சினிமாவில் நடந்திருக்கிறது. ரஜினிகாந்தை பொருத்தவரை பெரும்பாலும் அவர் கதாநாயகனாக நடிக்கும் காலகட்டத்தில் இளம் நடிகையாக யார் பிரபலமாக இருக்கிறார்களோ அவர்களுடன் சேர்ந்துதான் நடிப்பார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

ஆரம்பத்தில் ஸ்ரீதேவி போன்ற நடிகைகளுடன் நடித்து வந்தார். அதற்கு பிறகு மீனா, குஷ்பூ மாதிரியான நடிகைகளுடன் நடித்து வந்தார். இப்பொழுது நயன்தாரா மாதிரியான நடிகைகளுடன் சேர்ந்து நடித்து வருகிறார். இப்படி அவர் நடிக்கும் காலகட்டங்களில் யார் பிரபலமான நடிகையாக இருக்கிறார்களோ அவர்களுடன்தான் ரஜினிகாந்த் சேர்ந்து நடிப்பார்.

பெரும்பாலும் நடிகைகளே ரஜினிகாந்த் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தால் உடனே நடிப்பதற்கு வந்து விடுவார்கள். இப்படி இருக்கும் பொழுது நடிகர் ரஜினிகாந்த் பலமுறை அழைத்தும் அவருடன் சேர்ந்து நடிக்க மறுத்த நடிகை வேறு யாருமில்லை நடிகை ஐஸ்வர்யா ராய்தான். நடிகை ஐஸ்வர்யா ராயுடன் சேர்ந்து நடிக்கும் படம் பெரும் ஹிட் கொடுக்கும் என்பது ரஜினிகாந்தின் நம்பிக்கையாக இருந்ததாக கூறப்படுகிறது.

கை கூடாத நடிகை

தமிழில் முதன்முதலாக அறிமுகமான நடிகையாக இருந்தாலும் கூட ஐஸ்வர்யா ராய்க்கு தமிழை விட பாலிவுட்டில்தான் அதிக வரவேற்பு இருந்தது. இந்த நிலையில் ரஜினிகாந்த் ஐஸ்வர்யாராயுடன் சேர்ந்து ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

இந்த நிலையில் படையப்பா படம் தயாராகிக் கொண்டிருந்தபோது அதில் சௌந்தர்யா கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்க வேண்டும் என்று நினைத்தார் ரஜினிகாந்த். ஆனால் அப்பொழுது ஐஸ்வர்யா ராய் மிகவும் பிஷியாக இருந்ததால் அந்த படத்திற்கு ஒப்புக்கொள்ளவில்லை.

தொடர்ந்து அதற்கு பிறகு பாபா திரைப்படத்தில் ரஜினி நடித்தார் அப்பொழுதும் ஐஸ்வர்யா ராய்தான் நடிக்க வேண்டும் என்று அவர் கேட்டிருந்தார். ஆனால் ஐஸ்வர்யா ராய் திருமணத்திற்கு பிறகு நடிப்பதில் பெரிதாக கவனம் செலுத்தாமல் இருந்தார். இதனால் அந்த படத்தில் மனிஷா கொய்ராலா கதாநாயகியாக நடித்தார்.

மகள் வயது நடிகை யார் தெரியுமா?

பிறகு சந்திரமுகி படத்தில் நடிக்கும் பொழுதும் மீண்டும் ரஜினி இதுக்குறித்து ஐஸ்வர்யாராயிடம் பேசி இருந்தார் ஆனால் அந்த சந்திரமுகி படத்தின் கதையில் கதாநாயகிக்கு அவ்வளவாக முக்கியத்துவம் இல்லை என்பதால் அதிலும் நடிக்க மறுத்துவிட்டார் ஐஸ்வர்யா ராய்.

அதற்குப் பிறகு எந்திரன் திரைப்படத்தில்தான் இறுதியாக நடிக்க ஒப்புக்கொண்டார். அதற்கு முக்கிய காரணம் தமிழில் தனக்கு பெரிய ஹிட் கொடுத்த இயக்குனர் ஷங்கர் அந்த திரைப்படத்தை இயக்கினார் மேலும் அந்த படம் பெரிய பட்ஜெட் படமாக இருந்தது. அதனால் அந்த படத்தில் ஒப்புக்கொண்டார் இப்படி ரஜினிகாந்த் சேர்ந்து நடிக்க ஆசைப்பட்ட நடிகையாக ஐஸ்வர்யா ராய் இருந்ததாக ரஜினிகாந்தின் ரசிகர்கள் வட்டாரத்தில் ஒரு பேச்சு உண்டு.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version