தினமும் அடி, உதை.. சின்னத்திரை நடிகரின் கொடுமை.. ராஜ்கிரண் மகள் பரபரப்பு குற்றச்சாட்டு…

பட்ட காலில் படும் கெட்ட குடியே கெடும் என்ற பழமொழிக்கு ஏற்ப என்றுமே காதலித்து திருமணம் செய்து கொள்பவர்களின் வாழ்க்கை நிம்மதியாக இருக்காதா? என்று சொல்லக்கூடிய வகையில் நடிகர் ராஜ்கிரனின் வளர்ப்பு மகள் பிரியா காதலித்து கரம் பிடித்த தனது கணவர் தன்னை படுத்திய பாடு பற்றி பரபரப்பான தகவல்களை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறார்.

சமுதாயத்தில் எந்த இடத்தில் இருக்கும் பெண்களுக்கும் இது போன்ற அவலங்கள் தொடர்கதையாக இருப்பதற்கு ஆண் வர்க்கம் தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்று தலையை பிய்த்துக்கொண்டு தேடினாலும் இதற்கான விடை என்று வரை கிடைக்கவே இல்லை.

நாடு சுதந்திரம் அடைந்து 78 வது சுதந்திர தினத்தை கொண்டாடி கொண்டாட இருக்கின்ற வேளையில் இது போல பெண்களுக்கு தொடர்ந்து நடக்கப்படும் அநீதிகளால் இன்னும் பெண் சுதந்திரம் எட்டா கனியாக இருக்கிறது என்று பலர் மத்தியிலும் பேச்சுக்கள் எழுந்துள்ளது.

தினமும் அடி, உதை..

சின்னத்திரை சீரியல்களில் நடித்து வரும் நடிகர் முனீஸ் ராஜா நடிகர் ராஜ்கிரனின் வளர்ப்பு மகளான பிரியாவை உருகி உருகி காதலித்ததோடு மட்டுமல்லாமல் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் காதல் 2019 – ஆம் ஆண்டு பேஸ்புக் மூலம் மலர்ந்தது. பேஸ்புக் மூலம் ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொண்டு ஓராண்டுக்கு மேல் பழகி கடைசியில் திருமணம் செய்து கொள்ளக் கூடிய நிலைக்கு வந்திருக்கிறார்கள்.

இந்த திருமணத்திற்கு நடிகர் ராஜ்கிரன் மறுப்பு தெரிவிக்க 2022-ஆம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி குடும்பத்தாரின் எதிர்ப்பை மீறி பிரியா திருமணம் செய்து கொண்ட விஷயங்கள் உங்களுக்கு நினைவில் இருக்கும்.

தன் வளர்ப்பு மகள் என்றாலும் தன்னை மீறி திருமணம் செய்து கொண்டதை அடுத்து அந்த திருமணத்தில் இவருக்கு விருப்பம் இல்லை என்றும் தன்னை அசிங்கப்படுத்தவே தன் வளர்ப்பு மகள் இந்த திருமணத்திற்கு ஒப்புக் கொண்டிருக்கிறார்.

எனவே இனி மேல் எந்த இடத்திலும் அவர் தன் பெயரை பயன்படுத்தக்கூடாது என்ற அறிக்கை ஒன்றை ராஜ்கிரன் வெளியிட்டு இருந்தார்.

இதனை அடுத்து தினமும் அடி உதை என்று விரும்பிய காதல் கணவர் தன்னை படாத பாடு படுத்தி கொடுமைகள் செய்ததை அடுத்து இருவரும் பிரிந்து விட்டதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு பிரியா பரபரப்பை ஏற்படுத்தினார்.

சின்னத்திரை நடிகரின் கொடுமை..

மேலும் அந்த வீடியோவில் அவர்கள் இருவருக்கும் நடந்த திருமணம் சட்டபூர்வமான திருமணம் அல்ல அத்தோடு இந்த திருமணத்தை விரும்பாத தன் அப்பாவை காயப்படுத்தியதற்காக அழுது மன்றாடி மன்னிப்பு கேட்டு வீடியோவை வெளியிட்டு திகைப்பில் ஆழ்த்தினார்.

அத்தோடு நின்று விடாமல் ஊடகப் பேட்டி ஒன்றில் பேசிய பிரியா தன் கணவரை பிரிய என்ன காரணம் என்பதையும் போட்டு உடைத்து இருக்கிறார்.

காதலிக்கும் போது தன்னை உருகி உருகி காதலித்த முனீஸ் ராஜா திருமணத்திற்கு பிறகு மாறியதோடு மட்டுமல்லாமல் தங்கள் திருமணத்தை பதிவு செய்யவில்லை என்ற உண்மையை உடைத்தார்.

இப்படி பதிவு செய்யாததற்கு காரணம் அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆன விஷயத்தை என்னிடம் மறைத்ததோடு மட்டுமல்லாமல் என் அப்பாவிடம் பேசி பணம் வாங்கி வர என்னை மிரட்டினார். இதனை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தான் தவித்ததாகவும் கூறி இருக்கிறார்.

ராஜ்கிரண் மகள் பரபரப்பு குற்றச்சாட்டு..

அப்படி பணம் வாங்கி வரவில்லை என்றால் கெட்ட கெட்ட வார்த்தையால் திட்டுவதோடு அடிக்கவும் ஆரம்பித்ததை அடுத்து மனதளவில் தான் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த சமயத்தில் இந்த விஷயத்தை தெரிந்து கொண்டு எனக்கு அம்மா உதவி செய்தார்.

அந்த பணமும் பத்தவில்லை என்று தினமும் டார்சர் செய்ததை அடுத்த தான் பிரிந்தேன். இனிமேல் முனீஸ் ராஜாவோடு வாழவே முடியாது என்ற நிலைமை எனக்கு ஏற்பட்டதை அடுத்து அவரை விட்டு பிரிந்து வாழ முடிவு செய்ததை அடுத்து என் அப்பாவிடம் மன்னிப்பு கேட்டேன்.

தன்னைக் கொடுமைப்படுத்திய முனீஸ் ராஜாவின் உறவே வேண்டாம் என்று அவரை விட்டு விலகி தற்போது என் அப்பாவிடம் வந்து சேர்ந்து விட்டேன் என்று கண்ணீர் மல்க பேட்டியில் தெரிவித்து இருந்தார்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam