சொல்லவே நாக்கு கூசுது.. பிரியங்கா செட்டில் செஞ்ச வேலை.. கழுவி ஊற்றும் ரக்‌ஷன்..!

கடந்த சில நாட்களாகவே விஜய் டிவியில் அதிகமாக பேசப்பட்டு வரும் ஒரு நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்து வருகிறது. ஐந்து வருடங்களாக விஜய் டிவியில் நல்ல வரவேற்பு பெற்று மக்கள் மத்தியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியாக இருந்து வருகிறது குக் வித் கோமாளி.

இந்த நிகழ்ச்சிக்கு இருக்கும் வரவேற்பின் காரணமாக அது முடிந்த பிறகுதான் பிக் பாஸ் நிகழ்ச்சியை துவங்குகின்றனர் விஜய் டிவி நிறுவனத்தினர். அந்த அளவிற்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு செல்வாக்கு அதிகமாகவே இருந்து வருகிறது.

சொல்லவே நாக்கு கூசுது

இந்த நிலையில் 5 வருடங்களாக குக் வித் கோமாளியில் இருந்து வந்த முக்கிய பிரபலமான மணிமேகலை சமீபத்தில் குக் வித் கோமாளியில் இருந்து விலகி இருக்கிறார். இதற்கு அவர் காரணம் கூறும் பொழுது வி.ஜே பிரியங்கா தனக்கு கொடுத்த தொல்லைகள் தாங்க முடியாமல் அவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக கூறி இருக்கிறார்.

மேலும் இத்தனை வருடம் விஜய் டிவியில் பணிபுரிந்தும் கூட வேறு ஒருவருக்கு கீழ் இருந்தால்தான் இருக்க முடியும் என்பதை நான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று மணிமேகலை கூறி இருந்தார். இந்த நிலையில் இது குறித்து மணிமேகலைக்கு ஆதரவாகவும் எதிராகவும் பதிவுகள் வந்த வண்ணம் உள்ளன.

பிரியங்கா செட்டில் செஞ்ச வேலை

பெரும்பாலும் வரும் கமெண்டுகள் மணிமேகலைக்கு ஆதரவாகவே வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் ஆரம்பம் முதலே இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வரும் ரக்ஷன் இது குறித்து வாய் திறந்து இருக்கிறார்.

அவர் கூறும் பொழுது மணிமேகலை எண்ணை விட சீனியரான ஒரு தொகுப்பாளர் ஆவார். அவரை பார்த்துதான் நான் தொகுப்பாளர் ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதன் பிறகு அதே போல தொகுப்பாளராகவும் ஆகிவிட்டேன். பிறகு மணிமேகலையுடன் சேர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

கழுவி ஊற்றும் ரக்‌ஷன்

அவருடன் பணிப்புரிவது எனக்கு பெரிய விஷயமாகும். ஆனால் இந்த ஐந்தாவது சீசனில் பிரியங்கா அக்கா வந்தது முதலே அவர்கள் மணி அக்காவிடம் தொடர்ந்து நிறைய அட்வைஸ்களை கொடுத்து வந்தார்கள் எனக்கும் கூட அட்வைஸ் கொடுத்தார்கள்.

ஆனால் நான் சின்ன பையன் அவர்கள் அளவிற்கு நான் ரொம்ப வருடம் தொகுத்து வழங்குவதில் இல்லை எனவே நான் அவர்கள் கூறுவதை கேட்டுக் கொண்டேன். ஆனால் மணி அக்காவிற்கும் அதே மாதிரி அட்வைஸ் கொடுத்தார் பிரியங்கா. மணி அக்காவிற்கு போக போக இது பிடிக்காமல் போய்விட்டது.

ஏனெனில் மணி அக்காவும் பிரியங்கா மாதிரியே பல வருடங்களாக தொகுப்பாளராக இருந்தவர். ஆனால் அதனால் அவர் நிகழ்ச்சியை விட்டு போவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று கூறியிருக்கிறார் ரக்ஷன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version