அம்பிகா என்ன என் பொண்டாட்டியா…? ரெண்டு பேர் இருக்காங்க.. இது தான் நடந்துச்சு.. ரவிகாந்த் ஓப்பன்..!

80களில் தொடர்ந்து பிரபலமாக இருந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை அம்பிகா 80களில் தனது அக்கா ராதாவோடு சேர்ந்து அம்பிகாவும் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அம்பிகா மற்றும் ராதா இருவருமே அப்பொழுது தமிழ் சினிமாவில் பெரும் கலக்கு கலக்கி வந்தார்கள்.

ரஜினி கமல் உள்பட அப்போது தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த பல நடிகர்களுடனும் சேர்ந்து நடித்திருக்கின்றனர் இவர்கள் இருவரும், அப்பொழுது டாப் நடிகைகளாக இவர்கள்தான் இருந்தார்கள்.

அம்பிகா திருமணம்:

இந்த நிலையில் 1998 ஆம் ஆண்டு பிரேம்குமார் என்கிற நபரை திருமணம் செய்தார் அம்பிகா. அதற்குப் பிறகு திரைத்துறையை விட்டு விலகி வெளிநாட்டில் சென்று அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். அதற்கு பிறகு அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன.

பிறகு தன்னுடைய கணவர் பிரேம்குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரிடமிருந்து பிரிந்து மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார். இந்த முறைய அதிகபட்சம் சீரியல் கவனம் செலுத்தி வந்தார் அம்பிகா.

ஏனெனில் அவருக்கு வயது அதிகமாக இருந்த காரணத்தினால் சீரியலில் அவர்களுக்கு அதிக வாய்ப்பு கிடைத்தது. அப்படி நாயகி சீரியலில் நடித்த பொழுது அதிகமாக பேசப்பட்டார் அம்பிகா. தற்சமயம் சன் டிவியில் ஒளிபரப்பாகும் மல்லி சீரியலிலும் முக்கிய கதாபாத்திரமாக அம்பிகா நடித்து வருகிறார்.

ரவிகாந்த் வதந்தி:

இந்த நிலையில் அம்பிகா அவரது கணவர் பிரேம்குமாரை விவாகரத்து செய்த பிறகு நடிகர் ரவி காந்தை திருமணம் செய்து கொண்டார் என்று ஒரு பக்கம் அப்பொழுதே பேச்சுக்கள் இருந்து வந்தன. விக்கிபீடியாவில் கூட 2000 ஆம் ஆண்டு ரவி காந்தை திருமணம் செய்து பிறகு 2002இல் அவரை விவாகரத்து செய்தார் அம்பிகா என்று இருக்கிறது.

இந்த அளவிற்கு ஒரு வதந்தி பரவி இருக்கும் நேரத்தில் அதை மறுத்து ரவிகாந்த் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது அம்பிகாவும் நானும் நெருங்கிய நண்பர்கள் நாங்கள் ரெண்டு பேருமே பக்கத்து பக்கத்து வீட்டில்தான் குடியிருந்தோம்.

நானும் அம்பிகாவும் இணைந்து 16 படங்களில் நடித்திருக்கிறோம் அதிகபட்சம் எல்லா படங்களிலுமே நாங்கள் கணவன் மனைவியாகதான் நடிப்போம். அதேபோல பக்கத்து பக்கத்து வீட்டில் இருந்ததால் ஷூட்டிங்கிற்கு ஒரே காரில்தான் போவோம் அதனால் அங்கே அந்த ஏரியாவில் இருப்பவர்கள் கூட கணவன் மனைவி வந்துட்டாங்களே என்று எங்களை கிண்டல் செய்வது உண்டு.

மற்றபடி நான் அம்பிகாவை திருமணம் செய்து கொண்டதே கிடையாது நான் அவருடைய கணவரும் இல்லை என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார் நடிகர் ரவிகாந்த்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version