அம்பிகாவுடன் ஒரே வீட்டில்.. ஷூட்டிங் ஸ்பாட்லையே கூட அது நடந்திருக்கு.. பிரபல நடிகர் ஓப்பன் டாக்..!

கேரளாவை சொந்த ஊராகக் கொண்ட நடிகை அம்பிகா 90ஸ் மற்றும் 80ஸ் காலகட்டங்களில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

அம்பிகா பல திரைப்படங்களில் ஹீரோயின் ஆகவும் குணசேத்திர நடிகையாகவும் நடித்து பெரும் புகழ்பெற்றிருக்கிறார்.

நடிகை அம்பிகா:

பின்னர் 2000 காலகட்டத்தின் பிற்பகுதியில் அம்பிகா பல்வேறு திரைப்படங்களில் ஹீரோ ஹீரோயின்களின் அம்மாவாக நடித்து பெரும் புகழ்பெற்றிருக்கிறார்.

தமிழ் , கன்னடம், மலையாளம், தெலுங்கு இப்படி பலமொழி திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து பிரபலமான நடிகையாக வளம் வந்தார்.

சினிமாவில் நடிகை அம்பிகாவும் அவரது சகோதரியான பிரபல நடிகையான ராதிகாவும் ஒரே சமயத்தில் நட்சத்திர நடிகைகளாக போட்டி போட்டுக் கொண்டு ஜொலித்து வந்தார்கள்.

அனிதா என்ற இயற்பெயருடன். பிறந்த இவர் அம்பிகா என திரைப்படத்துறைக்காக தனது பெயரை மாற்றிக் கொண்டார்.

திருமணம் விவாகரத்து:

நடிகை அம்பிகா 1988ல் என் ஆர் ஐ பிரேம் குமார் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு இரண்டு மகன்கள் பிறந்தனர்.

அம்பிகா திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் அமெரிக்காவில் சென்று செட்டில் ஆகிவிட்டார். வசதி வாய்ப்புகள் படைத்த தனது கணவருடன் மிக நிம்மதியாக வாழ்ந்து வந்தார்.

இதனிடையே திடீரென இருவருக்கும் ஏற்பட்ட கருது வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.

அதன் பின்னர் கணவரை பிரிந்த அம்பிகா அமெரிக்காவிலிருந்து தனது மகன்களுடன் சென்னையில் வந்து வசிக்க ஆரம்பித்தார்.

அப்போதுதான் திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் கிடைக்க அதையும் ஏற்று நடித்து தனது குடும்பத்தை கவனித்து வந்தார்.

ஒரே வீட்டில் அம்பிகா – ரவிகாந்த்:

இப்படியான சமயத்தில் நடிகை அம்பிகா நடிகர் ரவிகாந்தை காதலித்து 2000ம் ஆண்டில் இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டதாக செய்திகள் வெளிவந்தது.

பின்னர் 2002 இல் அவரையும் விவாகரத்து செய்துவிட்டதாக செய்திகள் கூறியது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் ரவிகாந்த் நடிகை அம்பிகாவுடனான உறவு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

சென்னையில் அம்பிகாவின் வீட்டின் அருகிலேயே பிரபல நடிகரான ரவி காந்தின் வீடும் இருந்துள்ளது. ரவிகாந்த் மற்றும் அம்பிகா இவர்கள் இருவரும் திரைப்படத்தில் ஜோடியாக நடித்திருக்கிறார்கள்.

அருகருகே இருந்ததால் நாங்கள் இருவரும் ஜோடியாக நடித்த படங்களுக்கு ஷூட்டிங் செல்லும்போது ஒரே வண்டியில் தான் சேர்ந்தே செல்லுவோம்.

அப்போது ஷூட்டிங்கில் இருப்பவர்கள் இதோ புருஷன் பொண்டாட்டி வந்துட்டாங்க என கிண்டலாக கூறுவார்கள்.

ஷூட்டிங் ஸ்பாட்டிலே காதல் கிசு கிசு:

ஒரு காலத்தில் சேர்ந்து சூட்டிங் மற்றும் பொதுவெளியில் செல்வது என இருந்து வந்ததால் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

அப்படி பார்த்தால் நான் நிறைய நடிகைகளுடன் சேர்ந்து நடித்திருக்கிறேன். அவர்கள் எல்லாருக்கும் கணவர் ஆகிவிட முடியுமா?என ரவிகாந்த் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

எனவே நான் அம்பிகாவின் கணவர் கிடையாது. பிரேம்குமார் மேனன் மட்டும் தான் அம்பிகாவின் கணவர் என குறிப்பிட்டு இருக்கிறார். இந்த பேட்டி தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version