படுக்கைக்கு அழைத்தேனா? அந்த பொண்ணு யாருன்னே தெரியாது – ரியாஸ் கான் பலே பதில்!

தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகராக ரியாஸ் கான் பல்வேறு திரைப்படங்களில் நடித்த பிரபலமானவர் தான் நடிகர் ரியாஸ் கான்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழிகளில் நடித்து பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார். இவரது மனைவி உமா ரியாஸும் சினிமாவில் புகழ்பெற்ற நடிகை தான்.

நடிகர் ரியாஸ் கான்:

அண்மையில் தான் ரியாஸ் கானின் மகன் ஷாரிக்கிற்கு திருமணம் நடைபெற்றது. இப்படியான நேரத்தில் ரியாஸ்கான் மீது பிரபல மலையாள சினிமாவின் இளம் நடிகையான ரேவதி சம்பத் அதிரடியான பாலியல் புகார் ஒன்றைக் கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

கடந்து சில நாட்களாகவே மலையாள சினிமா உலகில் மட்டுமே இல்லாமல் ஒட்டுமொத்த இந்திய சினிமா துறையும் ஹேமா கமிஷன் உலுக்கி எடுத்த வருகிறது .

கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகை பாவனா இரவு நேரத்தில் ஷூட்டிங் முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தபோது காரில் மர்ம கும்பல்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் .

இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே அதிர வைத்தது. இந்த சம்பவத்தை தொடர்ந்து விசாரணை செய்ததில் நடிகர் திலீப் தான் இந்த விவகாரத்திற்கு காரணமாக இருந்ததாக கூறப்பட்டது.

ஹேமா கமிஷன்:

அவரின் தூண்டுதலின் பேரில் தான் இந்த பாலியல் பலாத்காரம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இதை அடுத்து கேரளா சினிமாவில் நடிகைகள் மற்றும் திரைப்படத்துறையில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் எல்லோரும் ஒன்று கூடி தங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் அதற்காக தனியாக விசாரணை குழு ஒன்றை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் .

இதை அடுத்து கேரள அரசு பிரபல பெண் வழக்கறிஞர் ஹேமாவை பணியில் அமர்த்தி இதுபோன்ற பாலியல் புகார்களுக்கு அவர் பதில் அளிப்பார் என ஒரு குழுவை அமைத்தனர் .

கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு பிறகு ஹேமா கமிஷன் 233 பக்கங்கள் அடங்கிய பாலியல் புகார்களை அறிக்கையாக வெளியிட்டிருந்தது.

இதில் பல நடிகர் நடிகைகள் இயக்குனர்கள் உள்ளிட்டவர் உள்ளிட்டவர்களின் விவகாரம் சிக்கி இருப்பதாக நாளுக்கு நாள் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் கேரள சினிமாவில் பிரபல இளம் நடிகையான ரேவதி சம்பத் நடிகர் ரியாஸ் கான் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார்.

படுக்கைக்கு அழைத்தார் ரியாஸ் கான்:

அதாவது, ஒரு புகைப்பட கலைஞன் என்னுடைய அனுமதியே இல்லாமல் தனது தொலைபேசி எண்ணை கொடுத்துவிட்டார்.

இதை அடுத்து எனக்கு இரவு நேரத்தில் ரியாஸ் கான் இடமிருந்து அழைப்பு வந்தது.அப்போது ரியாஸ் கான் பாலியல் உறவில் ஆர்வம் உள்ளதா என கேட்டார் .

வெளிப்படையாக கொச்சையான வார்த்தைகளால் பயன்படுத்தி அவர் தகாத உறவிற்கு அழைத்தார்.

அது மட்டும் இல்லாமல் நீங்கள் வரவில்லை என்றாலும் பரவாயில்லை உன் தோழிகள் யாரேனும் ஏற்பாடு செய்து தாங்கள் என்று ரியாஸ் தான் மிகவும் கேவலமாக கேட்டார் என்று ரேவதி சம்பத் அதிரடியான புகார் ஒன்றைக் கொடுத்திருந்தார் .

அந்த பெண் யாருன்னே தெரியாது:

இந்த விஷயம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது ரேவதி சம்பத்திற்கு பதிலளித்திருக்கும் நடிகர் ரியாஸ் கான் அந்தப் பெண் தனக்கு யார் என்றே தெரியாது?

இந்த புகாருக்கு தக்க சமயத்தில் நான் விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன். அவரிடம் நான் வீடியோ கால் செய்ததற்கு ஆதாரம் இருந்தால் காட்ட சொல்லுங்கள்.

விசாரணைக் குழு இதற்காக என்னை எப்போது அழைத்தாலும் நான் வந்து அதற்கு பதில் அளிக்க தயாராக இருக்கிறேன்.

இது போன்ற ஆதாரமற்ற புகார்களை தயவு செய்து நிறுத்துங்கள் என தன் மீதான பாலியல் புகாருக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார் நடிகர் ரியாஸ் கான்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version