தமிழ் சினிமாவில் நடிகராக, இயக்குநராக வளர்ந்து வருகிறார் ஆர்ஜே பாலாஜி. எல்கேஜி படத்தில் கதாநாயகனாக அறிமுகமான அவர், தொடர்ந்து மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் படங்களில் நடித்தார்.
வரும் 25ம் தேதி, ஆர்ஜே பாலாஜி ஹீரோவாக நடித்த சிங்கப்பூர் சலூன் படம் திரைக்கு வருகிறது. இந்த படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ஜீவா ஆகியோர் கேமியோ ரோல் செய்துள்ளனர்.
ரேடியோ ஜாக்கியாக, படபடவென பேசி மற்றவர்களை கலாய்த்து தள்ளும் தனது வர்ணனை மூலம், ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் ஆர்ஜே பாலாஜி. இப்போது நல்ல நடிகராகவும் தன்னை வெளிப்படுத்தி வருகிறார்.
சமீபத்தில் ரன்வீர் கபூர், ராஷ்மிகா மந்தானா நடிப்பில் வெளிவந்த படம் அனிமல். இந்த படம் 800 கோடி ரூபாய்க்கு மேல் வசூலில் சாதனை செய்திருந்தாலும், படம் எதிர்மறையான விமர்சனங்களில் சிக்கியுள்ளது.
இதுகுறித்து ஒரு நேர்காணலில் பேசிய ஆர்ஜே பாலாஜி, நான் இன்னும் அனிமல் படத்தை பார்க்கவில்லை.
அந்த படத்தில் பெண்களை அடித்து துன்புறுத்துவதை போலவும், அதை ரசிப்பது போலவும், ஷூவை நாக்கால் நக்குவது போலவும் காட்சிகள் வருவதாக கேள்விப்பட்டேன்.
அந்த இடத்தை ஹீரோயின் நாக்கால் சுத்தம் செய்ய சொல்கிறான் என்றால், அப்படிப்பட்ட ஒரு கேரக்டரில் நடிகர் நடிக்கலாமா, அது அவர்களுக்கு அசிங்கம்.
இதுபோன்ற மோசமான காட்சிகளுக்கு ரசிகர்கள் கைதட்டினால், என்னையும் அறியாமல் அதுமாதிரியான காட்சிகள் என் படத்திலும் வந்துவிடுமோ என்பதுதான் என்னுடைய பயமாக இருக்கிறது, என்று அதில் ஆர்ஜே பாலாஜி கூறியுள்ளார்.