“விஜய்க்கும் எனக்கும் இதனால தான் சண்டை வந்துச்சு..” கோபத்தில் அந்த வார்த்தை சொல்லிட்டேன்.. சஞ்சீவ் வேதனை..

தமிழ் திரை உலகில் அசைக்க முடியாத நட்சத்திரமாக திகழும் நடிகர் விஜய் பற்றி கூற வேண்டிய அவசியமே இல்லை. இவர் தற்போது அரசியல் பிரவேசம் செய்திருப்பதை அடுத்து ரசிகர்கள் அனைவரும் கோலாகலமாக அதை வரவேற்று இருக்கிறார்கள்.

விஜய் தற்போது கோட் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இந்த படத்தை அடுத்து தளபதி 69 படத்தில் நடித்து முடித்த பிறகு தீவிர அரசியலில் முழு நேரம் ஈடுபடுவார் என தெரியவந்துள்ளது.

நடிகர் விஜய் மற்றும் சஞ்சய்..

மேலும் நடிகர் விஜய் தனக்கு என்று ஒரு நட்பு வட்டாரத்தை ஆரம்ப காலம் முதற்கொண்டே மிகச் சிறப்பாக வைத்து இருக்கிறார். அந்த வகையில் இவருக்கு பல நண்பர்கள் பள்ளி காலம் முதல் கல்லூரி காலம் வரை இருந்து வந்திருக்கிறார்கள்.

இவர்களில் ஒருவர் தான் சஞ்சீவ் இவரும் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரைகளிலும் நடித்து வருகிறார். தற்போது நடிகர் சஞ்சீவ் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல தொடரில் சின்சியர் போலீஸ் ஆபீஸராக நடித்து பெருவாரியான தமிழக மக்களின் உள்ளத்தில் இடம் பிடித்து இருக்கிறார்.

அந்த வகையில் படு பிஸியாக இருக்கக்கூடிய நடிகர் சஞ்சீவ் தன்னுடைய நண்பர் தளபதி விஜய்க்கும் தனக்கும் எதனால் சண்டை வந்தது என்பது பற்றி அண்மை பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

கோபத்தில் கொட்டிய வார்த்தை..

இந்த பேச்சு தான் தற்போது இணையங்களில் வைரலாக மாறி வருவதோடு விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சஞ்சீவ் ரசிகர்களும் இந்த பேட்டியை தொடர்ந்து பார்த்து வருகிறார்கள். அத்தோடு இந்த பேட்டியில் உருக்கமான சில விஷயங்களை சஞ்சீவ் பகிர்ந்து இருக்கிறார் அதைப்பற்றி விளக்கமாக பார்க்கலாம்.

தளபதி விஜயின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ் எனக்கும் விஜய்க்கும் நடந்த சண்டையை மறக்கவே முடியாது எனக் கூறியதோடு ஒரு நாள் எங்க பிரண்ட்ஸ் எல்லாருமே ஒன்றாக சந்தித்தோம் என்ற விஷயத்தையும் கூறினார்.

இவர்கள் அனைவருமே பிசியாக இருப்பதால் அடிக்கடி சந்திக்க மாட்டார்கள். ஆரம்பத்தில் அடிக்கடி சந்தித்தோம் ஆனால் இப்போது ஒவ்வொருவருக்கும் வேலை நிமித்தமாக நேரம் கிடைக்காத காரணத்தால் எப்போவாவது ஒருமுறை சந்திக்கிறார்கள்.

அப்படி ஒரு முறை சந்தித்தபோது விஜய் என்னிடம் நீ ஏண்டா எப்ப பார்த்தாலும் என்னையே இமிடெட் பண்ற.. உன்னோட ஸ்டைல்ல நீ நடி நான் திரையில வருஷத்துக்கு ஒரு முறையோ ரெண்டு முறையோ தான் வரேன்.

ஆனா சீரியல்ல நீ அடிக்கடி வரும் போது என்ன மாதிரியே சிரிக்கிற, என்ன மாதிரியே பேசுற, இத கொஞ்சம் குறைச்சுக்கோ மக்களுக்கு நீ என்ன மாதிரி பண்ணறையா அல்லது உன்ன மாதிரி பண்ணறையானு சந்தேகம் ஏற்பட்டு விடும் என்று விஜய் கூறியதாக தெரிவித்தார்.

அடுத்து தான் எனக்கு விஜய் மீது அதிக அளவு கோபம் வந்தது. 25 வருடங்களாக நண்பர்களாக இருக்கக்கூடிய நாங்கள் இந்தப் பிரச்சினையால் தான் சண்டை ஏற்பட்டது என்று சொன்னார். மேலும் நான் கோபப்பட்டதை பார்த்ததும் விஜய் டக் என்று கோபத்தில் சரி நான் போகிறேன் என்று கிளம்பிப் போய்விட்டான் இது எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.

வேதனையில் சஞ்சீவ்..

எப்போதுமே விஜய்க்கு கோபம் வந்தால் எதுவும் பேச மாட்டான். அந்த இடத்தில் இருந்து காலி செய்து போய்விடுவான். இது அவனுடைய இயல்பு இது நடந்து பல வருடங்களாக நாங்கள் இரண்டு பேரும் பேசவே இல்லை.

இதனை அடுத்து பிறகு தான் நாங்கள் பேசிக்கொண்டோம் என்று அந்த பேட்டியில் கூறியிருக்கிறார். பொதுவாகவே சஞ்சீவ் சீரியல்களில் நடிக்கும் போதும் சரி, எந்த இடத்தில் பேசுவதாக இருந்தாலும் சரி, அவர் விஜயைப் போலவே காப்பி அடித்து செய்து வருவதாக இன்றும் பலர் கலாய்த்து வருகிறார்கள்.

இதனால் கூட தளபதி விஜய் என்னைப்போல செய்யாதே என்று ஒரு அட்வைஸ் தந்திருக்கலாம் அதை இயல்பாக எடுத்துக் கொண்டதால் தான் இன்று வரை இவர்களது நட்பு நீடித்துள்ளது.

“காட்டு தேக்கு.. பட்ட ஜிலேபி..” நெகு நெகு தொடையை காட்டி திணறடிக்கும் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்..!

Comments are closed.
Exit mobile version